ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தில்லி தேர்தலில் உள்ளூர் கொள்கையும், உலகளாவிய பிரபஞ்சத்துவக் கொள்கையும்

அரசியலில் பல பொருள் தெரிவிக்கும் நிலை அவசியம்தான், ஆனாலும் அறநெறியின்கீழ் ஆரோக்கியமான சமூகத்தை அமைப்பதற்கு அது போதுமான நிபந்தனை கிடையாது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றதானது, விமர்சகர்களின் மத்தியில் பல்வேறு விதமான விமர்சனங்களைப் பெற்றிருப்பதைப் போலவே தோன்றுகிறது. உதாரணமாக, “தீவிர மதச்சார்பின்மையாளர்கள்” என்று தங்களைக் கருதிக்கொள்பவர்கள், இவ்வெற்றி குறித்து “அரசியல்ரீதியாக அசவுகரியமானதாகக்” கருதப்படும் விதத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். மதச்சார்பின்மை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகள் குறித்து இந்த விமர்சனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. ஷஹீன் பாக் கிளர்ச்சியாளர்களுக்குச் சாதகமாக தெள்ளத்தெளிவான நிலையினை எடுத்திட ஏஏபி தவறியதை இவ்விமர்சகர்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.  அரசியல் கட்சிகள் தெளிவான அரசியலுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று இதனால்தான் சில விமர்சகர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்தக் கருத்தோட்டத்தின் அனுமானத்தின் கீழ்தான், ஏஏபி கட்சி, மதச்சார்பின்மைப் பிரச்சனையில் அடக்கி வாசித்திருப்பதை  அல்லது மதம் சார்ந்த பிரச்சனையை தேர்தல் பிரச்சாரத்திற்குள் கொண்டுவராதிருப்பதை, ஏஏபி உத்தியின் ‘பதுங்கி இருக்கும் பயம்’ என்று சிலர் விமர்சித்திருக்கிறார்கள்.   ஏஏபி-யின் இந்தப் பயம் குறித்து, தீவிர மதச்சார்பின்மையாளர்கள் கொண்டிருக்கும் சந்தேகம் என்னவெனில், ஏஏபி, பாரதீய ஜனதா கட்சியின் செல்வாக்கைக் குறைத்திடும் முயற்சிகளில், அதே மொழியைப் பயன்படுத்தும்போது, எவ்விதமான இடருமின்றி செய்யவில்லையோ என்பதாகும். ஏஏபி-யின் எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தும் மொழியின் முக்கியத்துவத்தை குறைத்திடவே ஏஏபி தலைவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தன்னுடைய உத்திக்கு, ஏஏபியானது தானே பலியாகக் கூடும். மதச்சார்பின்மையாளர்களில் சிலர் ஏஏபி மென்மையான இந்துத்துவா பக்கம் சாய்ந்திருப்பதாகக் கூறத் தொடங்கி இருக்கிறார்கள். ஏஏபி தன்னுடைய உத்தியாக, இந்து அடையாளங்களைத் தன்னுடைய பிரச்சாரத்தின்போது பயன்படுத்தியதை அதன் தலைவர்கள் மத்தியில் உருவாகியுள்ள பிடிப்பின் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வேளை அது, தேர்தல் பிரச்சாரத்தின்போது மத அடிப்படையில் வாக்காளர்களிடையே வெறியைக் கிளப்பி  இந்திய வாக்காளர்களில் ஒரு பிரிவினரை வென்றெடுக்கலாம் என்று அது நினைத்திருக்கலாம். அது சரியான காரணமாகக் கூட இருக்கலாம். இத்தகைய வியாகூலத்தை சமீபத்தில் நடைபெற்ற தில்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் வாக்குச் சதவீதம் சற்றே அதிகரித்திருப்பதிலிருந்து பார்க்க முடிகிறது.  ஆனாலும், வாக்காளர்களில் பெரும்பான்மை அளவினர் ஏஏபி-யை ஆதரித்து, அக்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறவும் வைத்திருக்கிறார்கள். எனினும், ஏஏபி-யின் வெற்றியே அதன் வீழ்ச்சியாகவும் இருப்பது ஆர்வத்துடன் குறித்துக்கொள்ளப்பட வேண்டியதாகும். பாஜக-வின் பிரதான கட்சித் தலைவர்கள் ஒரு மாற்றத்திற்காகவாவது, ஒப்புக்கொள்ளக் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, ஏஏபி தலைவர்களை பயங்கரவாதிகள் என்றும், அல்லது “கோலி மாரோ” (“சுட்டுக் கொல்லுங்கள்”) என்றும் மிகவும் ஆத்திரமூட்டும் பாஷையைப் பயன்படுத்தியது தவறு என்று ஒப்புக்கொள்ளக் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.  அதே சமயத்தில் ஏஏபி-யின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரம் அதற்கு வாக்குளைக் கொண்டுவந்து சேர்க்கும் விதத்தில் பயன் அளிப்பதாக மாறி இருக்கிறது. ஏஏபியின் தேர்தல் பிரச்சார உத்தி மற்றும் அது அதற்குக் கொண்டுவந்து தந்துள்ள வெற்றி, பாஜகவை தான் இவ்வாறு வெடிக்கும் வார்த்தைகளை வெறித்தனமாகப் பயன்படுத்தியது எதிர்விளைவையே ஏற்படுத்தி இருக்கிறது என உணர வைத்திருக்கிறது. எனினும் வரவிருக்கும் காலங்களில் பாஜக எச்சரிக்கையாக நடந்துகொள்ளும் என்று இதற்குப் பொருளா? தேர்தல் அரசியலின் எதிர்கால வடிவங்கள் எப்படி இருக்கும் என்று இந்தக் கணத்தில், பாஜக-வைத் தவிர வேறு யாராலும் பதில் சொல்ல முடியாது.

ஏஏபி தலைவர்கள் இதனைத் தெளிவாகக் கூறாவிட்டாலும், அவர்கள் தங்கள் தேர்தல் ஆதரவை ஒருங்கிணைப்பதற்காக, தெளிவற்ற முறையைத்தான் பின்பற்றினார்கள். நிச்சயமாக இது ஓர் உத்திதான். இருப்பினும், ஏஏபி தலைவர்கள் ஒரு மதத்தின் அடையாளங்களை மட்டும் பயன்படுத்துவதை சௌகரியம் எனக் கருதினார்கள். மற்றொரு மதத்தின் அடையாளத்தை பயன்படுத்துவதை தவிர்த்தார்கள்.  ஒருவிதமான நடைமுறைவாதம் ஏஏபியின் தேர்தல் உத்திக்கு அடிப்படையாக அமைந்தது. ஏஏபி தலைவர்கள், கிட்டத்தட்ட அனைவரும், பாஜக-வின் வெறித்தனமான பிரச்சார யுத்தத்திற்கு  நேரடியாகப் பதில் சொல்வதை மறுத்தார்கள். இது பாஜகவின் இந்துத்துவா வெறிப் பேச்சுக்களை வலுவற்றதாக மாற்றியது.

நிறைவாக, சிலர் ஏஏபியின் தேர்தல் அரசியல் உள்ளூர் பிரச்சனைகளுக்கு சுருங்கி விட்டது என்று விமர்ச்சிக்கிறார்கள். இதன்மூலம் அது ஓர் அகில இந்தியக் கட்சியாக மாறுவதற்கான சாத்தியப்பாடு இல்லை என்று கூறுகிறார்கள். இந்த வெற்றியை பிரதானமாக உள்ளூர் பிரச்சனைகளின் முக்கியத்துவமானதாக பார்க்க வேண்டுமேயொழிய, தேசிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள். ஏஏபி உட்பட எந்தக் கட்சியின் தாக்கத்தையும் கட்டுப்படுத்துவது, ஒரு முக்கியமான அம்சத்தை விட்டுவிடச் செய்திடும். இதனை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏஏபி, பாஜக-வை மொத்தம் உள்ள 70 இடங்களில் 62இல் வெற்றி பெற்று தோற்கடித்திருப்பது மட்டுமல்ல, பாஜகவின் அரசியல் நம்பிக்கையையும் அடித்து வீழ்த்தி இருக்கிறது. அதிலும் மிகவும் முக்கியமாக, தில்லி தேர்தலில் ஏஏபி-யின் வெற்றியானது, இந்துயிச இந்தியாவைத் தேசிய அளவில் எடுத்துச் செல்லவேண்டும் என்கிற பாஜகவின் மதவெறி அடிப்படையிலான பிரச்சாரத்தை அடித்து வீழ்த்தியிருக்கிறது.    

இதில் நாம் புரிந்துகொள்வதற்கு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் அம்சம் என்னவெனில்ட உள்ளூர் அரசியலின் சக்தி இந்தியாவை ஒரு மதவெறிபிடித்த நாடாக மாற்ற நினைத்த அரசியலுக்கு சரியான அடி கொடுத்து தடுத்து நிறுத்தி இருப்பதாகும். ஏஏபியின் வெற்றி, வலதுசாரிக் கட்சி முன்னெடுத்துச் சென்ற தவறான பிரச்சாரத்தை உள்ளூர் பிரச்சனைகளை முன்வைப்பதன் மூலம் மட்டுமே எளிதாக முறியடித்திட முடியும் எனக் காட்டியிருக்கிறது. ஏஏபியை உள்ளூர் அல்லது மாநில அளவிலான கட்சி என்று குறைத்து மதிப்பிடுவது மிகவும் மேலோட்டமானதாகவே இருந்திடும்.

எனினும், ஏஏபியானது, தன்னைப்பற்றிய சரியான தெளிவின்மை அடிப்படையிலேயே எப்போதும் இயங்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஏஏபி, தற்போதைக்கு சித்தாந்த நிலைப்பாட்டின் கீழ் செயல்படுவதற்குத் தற்காலிக விடுமுறை அளித்திருக்கிறது.  ஏஏபி, உலகளாவிய உண்மையுடன் நெருக்கமான உறவினைப் பெற்றிருக்க வேண்டும். உண்மை என்பது வளர்ச்சித் திட்டங்கள் மூலம் நிலையான வாழ்க்கையை அளிக்கக்கூடிய விதத்தில் மக்களுக்கு வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை அளிப்பது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் அமைதியைப் பேணுவதற்கான கவசமாகவும் இருந்திட வேண்டும். இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் தில்லி மக்களுக்கானவை மட்டுமல்ல. உண்மையில், இவை மதச்சார்பின்மை மற்றும் பிரபஞ்சத்துவவாதம் குறித்த பிரச்சனைகளுமாகும். இவ்வாறு உள்ளூர் தேர்தல் வெற்றி, உலகளாவிய பிரபஞ்சத்துவக் கொள்கையை உயர்த்திப் பிடித்திருப்பதுடன், மதவெறி சித்தாந்தத்தையும் தூக்கி எறிந்திருக்கிறது. 

Back to Top