தேர்தல் ஜனநாயகமும் சமூகத்தை மேம்படுத்தலும்
.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
சமீபத்திய தில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தேர்தல் ஜனநாயகத்தின்கீழ் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளின் பிரகாசமான பக்கத்தைக்காட்டும் ஒரு வெளிப்பாடாகவே இருக்கிறது; ஜனநாயகம், வளர்ச்சிக்கான நிகழ்ச்சிநிரலை மிகவும் ஆழமாக முன்னெடுத்துச்சென்றால் நிலைத்து நிற்க முடியும் என்பதைக் காட்டி இருக்கிறது. தில்லி தேர்தல் முடிவுகள், பிளவுவாத தேர்தல் அரசியல் மூலமாக, குறுங்குழுவாத நிகழ்ச்சிநிரலுக்கு முன்னுரிமை அளித்திடும் அரசியல் சக்திகளைத் தீர்மானகரமான முறையில் தோலுரித்துக்காட்டக் கோரி இருக்கிறது. இவ்வாறு, தில்லி சட்டமன்றத் தேர்தல்கள், மதகுருமார்களின் தேர்தல் அணிசேர்க்கையிலிருந்து, ஒரு மதச்சார்பற்ற/வளர்ச்சி நோக்கிய நிகழ்ச்சிநிரலுக்கான தெளிவான மாற்றத்தைக் காட்டியுள்ளது. அத்தகைய மாற்றம், ஆம் ஆத்மி கட்சிக்கு அதனுடைய அபரிமிதமான வெற்றியைப் பதிவு செய்வதற்கு உதவி இருப்பதுபோல் தோன்றுகிறது. உண்மையில், சமீபத்தில் மகாராஷ்ட்ராவிலும், மற்றும் குறிப்பிடத்தக்க விதத்தில் ஜார்கண்டிலும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், வலது சாரிக் கட்சிகளால் வாக்காளர்களை மதவாத அணிசேர்க்கைக்கு தாங்கள் விரும்பிய அளவிற்கு ஈர்க்கமுடியாமல் வரையறுத்திருப்பதைக் காட்டியிருக்கின்றன. இத்தேர்தல் முடிவுகள், முற்போக்கு சமூக குணாம்சத்திற்கும் மற்றும் குடிநீர், வேலையின்மை, கல்வி, சுகாதாரம் போன்ற மக்களின் அத்தியாவசியமான பிரச்சனைகள் மீது பிரத்தியேகக் கவனம் செலுத்துவதற்கு, அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கின்ற சமூக செலவினங்களுக்கான தேவைக்கும் இடையே ஆக்கபூர்வமான தொடர்புகள் இருப்பதை அடிக்கோடிட்டும், ஜார்கண்டைப் பொறுத்தவரைப் புதுப்பித்தும் காட்டியிருக்கின்றன. வளர்ச்சியின் கனிகள் நியாயமானமுறையில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்று வாக்காளர்கள் மத்தியில் அசைவை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அரசியல் கட்சிகள், அரசியல் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்கிற தார்மீகப் பொறுப்பும் கடமையும் இம்மாற்றத்தில் அடங்கியிருக்கிறது என்று குறிப்பிட வேண்டிய தேவையில்லை. ஆளும் அரசாங்கத்திற்கும், அதன் சமூக செலவினத்திற்கும் இடையே ஆக்கபூர்வமான தொடர்புகளை நிறுவக்கூடிய விதத்தில், இத்தகைய விதிவிலக்கான பொறுப்புகளை அரசியல் கட்சிகள் பெற்றிருக்கின்றன. இத்தகைய பொறுப்பு மிகுந்த கொள்கை, அபிஜித் பானர்ஜி, அமரி கெத்தின் மற்றும் தாமஸ் பிக்கெட்டி ஆகியவர்களால் எழுதப்பட்டு, சென்ற ஆண்டு எகனாமிக் & பொலிடிகல் வீக்லியில் வெளியான கட்டுரையில் மையமாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. (“இந்தியாவில் வளர்ந்துவரும் பிளவுகள்:வாக்காளர்களின் மாறும் கட்டமைப்பிலிருந்து சாட்சியம், 1962-2014,”). அந்தக் கட்டுரையில், கட்டுரையாளர்கள் “சமூகம்” என்பதன் பொருளை வெளிப்படையாகவும், பூடகமாகவும் அளித்திட முயன்றிருந்தார்கள். கட்டுரையாளர்கள் மிகவும் ஆழமாகவும் அடர்த்தியாகவும் எழுதியிருந்த கட்டுரையில், வெளிப்படையானவிதத்தில், கடந்த நாற்பது ஆண்டுகளாக அரசியல் கட்சிகளால் வாக்காளர்கள் தொடர்ந்து சாதி அடிப்படையில் சுரண்டப்பட்டு வந்தார்கள் என்கிற குறுகிய சமூகப் பின்னணியுடன், சமூகம் என்பது வரையறுக்கப்பட்டிருந்ததுபோன்றே தோன்றுகிறது.
கட்டுரையாளர்கள் இத்தனை ஆண்டு காலம் வாக்காளர்கள் அணிதிரட்டப்பட்டு வந்த விதத்தை மிகவும் கவனத்துடன் ஆய்வு செய்து வெளிக்கொண்டுவந்திருக்கும் அம்சமானது, பிரதான அரசியல் கட்சிகளின் கவனம் குறுகிய வரையறுக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பின் மீதே இருந்து வந்திருக்கிறது என்றே பரிந்துரைக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களுடைய குறுகிய சமூக கட்டமைப்பிலிருந்து வெளிவந்து, கல்வி, வருமானம், வேலைவாய்ப்பு போன்றவற்றை உருவாக்கிடும் வளர்ச்சித் திட்டங்கள் வந்திருக்க வேண்டிய பொறுப்பு மற்றும் கடமைகளைச் செய்திடத் தவறிவிட்டன. உண்மையில், கற்றறிந்த வாக்காளர்கள் மத்தியில்கூட கல்விக்கும் வளர்ச்சிக்கும் இடையே ஆக்கபூர்வமான தொடர்பு இல்லை என்றே கட்டுரையாளர்கள் வாதிடுகிறார்கள். எனினும், ஜார்கண்டிலும், தில்லியிலும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் கல்விக்கும் வளர்ச்சிக்கும் இடையேயான தொடர்பினை நிறுவிட முயற்சித்திருக்கின்றன. இக்கட்டுரையில் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தும் அம்சம், ஆக்கபூர்வமான தொடர்பினை சமூகத்தின் இயல்பான அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது முன்னோக்கிப் பார்க்கும் கருத்தாக்கத்திற்கும் வாக்காளர்கள் அணிதிரட்டலுக்கும் இடையேயான ஆக்கபூர்வமான தொடர்பினை அது மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாகும். தலித்துகள் மற்றும் பழங்குடியினர் அநேகமாக மிகப்பெரிய அளவில் வலதுசாரி அரசியல்கட்சிகளின் பக்கம் சாய்ந்திடவில்லை என்பதும், அவர்கள் மைய-இடது அல்லது இடதுசாரிக் கட்சிகளின் பக்கம் சாய்வது அதிகரித்துக்கொண்டிருக்கிறது அந்தக் கட்டுரையில் மிகவும் சரியாகவே அனுமானிக்கப்பட்டிருக்கிறது. இது, மீண்டும் ஒருமுறை, 2020இன் தில்லி சட்டமன்றத் தேர்தல்களில் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மைய - இடதுசாரிக் கட்சிகளுக்கு வாக்களித்துக்கொண்டிருப்பதால், சமூகம் என்பது முற்போக்கு சித்தாந்தத்தின் அமைப்பாகவே இருக்கிறது. கட்டுரை, வாக்காளர்கள் தேர்தலில் தீர்ப்பளிக்கையில் இத்தனை ஆண்டுகாலமாக இருந்ததைப்போல் அல்லாமல், சித்தாந்தரீதியாக சிந்தித்து முற்போக்குப் பக்கம் மாறியிருப்பதாகக் கருதுகிறது. ஜோதிராவ் புலே, சாகு மகராஜ் மற்றும் பி.ஆர். அம்பேத்கர் போன்று சமத்துவத்தை உயர்த்திப்பிடித்த சமூக சிந்தனையாளர்களின் சிந்தனைகளிலிருந்து தலித்துகளிடையே சிந்தனை மாற்றம் ஏற்பட்டிருப்பதுபோன்றே தோன்றுகிறது. இந்த சித்தாந்தம்தான் புரட்சிகரமான சமூக வரையறையை உள்ளடக்கி இருக்கிறது. வாக்காளர்கள், வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்கையில், தெளிவாக சமூக சிந்தனையுடன் சிந்தித்து, வாக்களித்திடும் நெறிமுறைத் திறனுடனான வல்லமையை அளித்திருக்கிறது. இத்தகைய வாக்காளர்களுக்காக, தேர்தல் ஜனநாயகம் சமமான சமூக நிலைப்பாட்டுக்கான இடத்தை அளிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இத்தகையதொரு சமூகம், மனம் மற்றும் செயல்பாட்டின் சுயக்கட்டுப்பாட்டை உள்ளடக்கி இருக்கிறது. எனினும், சமூகம் முன்னே சென்றுகொண்டிருப்பதாக கட்டுரையாளர்கள் முன்வைக்கும் வாதத்தை எடுத்துக்கொள்வதும், அதன் அடிப்படையில் நிலைப்பாடுகள் மேற்கொள்வதும் சாத்தியமே. தலித்/பழங்குடியின வாக்காளர்கள் மற்றும் தற்போது சிறுபான்மையின வாக்காளர்கள் ஆக்கபூர்வமான முறையில் மாறியிருப்பது சமூக செலவினங்கள் அடிப்படையில் மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. மாறாக, வாக்களிக்கும்போது தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் உயிரினும் மேலாகக் கருதம் சுயமரியாதையின் அறநெறி நல்லொழுக்கத்தின் அடிப்படையிலும் கூடுதலாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
கோபால்குரு