ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

கிளர்ச்சிப் போராட்டத்தில் பொதிந்துள்ள உண்மை

.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கும் நடப்புக் கிளர்ச்சிப் போராட்டங்கள் முதல் தடவை என்று சொல்லமுடியாவிட்டாலும், நீண்ட காலத்திற்குப் பின் நடைபெற்றுக்கொண்டிருப்பது, இப்பிரச்சனை குறித்து மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஒரு புதிய அர்த்தத்தைச் சேர்த்திருப்பது போலவே தோன்றுகிறது.

இக்கிளர்ச்சிப் போராட்டங்கள் இரண்டு வகைகளில் தனித்துவம் மிக்க விதத்தில் நமக்கு விரிவான அளவில் பொருள்களை அளிக்கின்றன. முதலாவதாக, இக்கிளர்ச்சிப் போராட்டங்களின் தரநெறி சார்ந்த உந்துதல் என்பது, நாடு குறித்து காந்தியின் கருத்துக்களான அஹிம்சை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய இரண்டின் அடிப்படையில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான கிளர்ச்சிப் போராட்டங்களாக இருப்பது. இரண்டாவதாக, இக்கிளர்ச்சிப் போராட்டங்கள் அரசமைப்புச்சட்டத்தின் அம்சங்களை உருவாக்கியதில் முக்கியமானவரான பி.ஆர். அம்பேத்கரையும் வேண்டிக்கொள்ளும் விதத்தில் அமைந்திருப்பதாகும். அரசமைப்புச்சட்டத்தின் முக்கிய அம்சம், “ஜனநாயக தேசியவாதம்” என்கிற அவருடைய அரசமைப்புச்சட்ட ஜனநாயகத்தின் கருத்தாக்கத்தையும் உட்படுத்துகிறது. அரசமைப்புச்சட்ட ஜனநாயகம், நாட்டிலுள்ள தனிநபர்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது ஆள்வோரின் சட்டபூர்வமான கடமையாக ஏற்படுத்தியிருக்கிறது. அம்பேத்கரைக் குறிப்பிடுவதன் பொருள், மனிதகுலத்தில் உள்ள அனைவரையும் சமமாக மதித்திட வேண்டும் என்கிற ஜனநாயகத்தின் விழுமியத்துடன் தேசியவாதத்தின் பொருளை ஜனநாயக தேசியவாதம் என்று மாற்றியமைத்திருப்பதற்காகும். எனவே, எம். கே. காந்தியும், அம்பேத்கரும் தேசம் என்றால் அமைதியின் அடிப்படையிலான தேசம் என்கிற கருத்தாக்கத்தையே தங்களின் அனைவருக்குமான உண்மையாக வழங்குகிறார்கள். இத்தகைய இவர்களின் தேசம், சுதந்திரம் என்கிற ஜனநாயக விழுமியங்களிலிருந்து சாரத்தைப் பெற்றுக்கொள்கிறது. இவ்வாறு இவ்விரண்டு சிந்தனையாளர்களும் அனைவருக்குமான உண்மையின் வடிவமாக இருப்பதால், இருவருமே அனைவருக்குமானவர்களாவர். கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் இவ்விரண்டு சிந்தனையாளர்களின் கொள்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்கிற வேண்டுகோளை அடித்தளமாகக் கொண்டிருக்கிறார்கள். கிளர்ச்சியாளர்களுக்கு இவ்விரு சிந்தனையாளர்களின் மீதுமான பற்றுறுதி என்பது வெறுமனே அவர்களின் சொல்லாட்சித் திறத்தால் வந்ததாகக் கூற முடியாது, மாறாக ஐயத்திற்கிடமற்ற விதத்தில் அவர்களின் செயல்களின் அடிப்படையிலானவைகளாகவே தோன்றுகின்றன.    கிளர்ச்சியாளர்கள் காந்தியுடனும் அம்பேத்கருடனும் தங்களுக்கிருக்கின்ற பிணைப்பை வெளிப்படுத்துவது மிகவும் சீரான விதத்திலேயே உள்ளது.

கிளர்ச்சிக்காரர்களிடம் ஐயத்திற்கிடமின்றி காணப்படும் உறுதி தெளிவாகவே தெரிகிறது. குறிப்பாக, அரசமைப்புச்சட்டம் மற்றும் ஜனநாயகம் போன்ற அனைவருக்குமான கொள்கைகளுடன் சாதி மற்றும் ஆண்-பெண் சமத்துவம் போன்றவையும் அவர்களிடம் காணப்பட்டதே அவர்களிடமிருந்த அறநெறித் திண்மைக்கு அடிப்படையாகும். உண்மையில், காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோரால் எடுத்துரைக்கப்பட்ட அரசமைப்புச்சட்டக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக இலட்சியங்களை உயர்த்திப்பிடித்து பெண்கள் முன்னணியில் நின்றார்கள். வேறுவிதமாகச் சொல்வதென்றால், சாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களிலிருந்து வெளிப்பட்ட அநீதிகளுக்கு எதிராக அவர்களிடம் அடிநாதமாக இருந்துவந்த எதிர்ப்பு உணர்வுகளும் வடிவமெடுத்ததற்கான முயற்சிகளே, இக்கிளர்ச்சிப் போராட்டங்களில் மிகப்பெரிய அளவில் அவர்கள் அணிதிரண்டதற்கு அடிப்படையாக அமைந்தன.  

அரசமைப்புச்சட்ட அறநெறி குறித்தும் அதேபோன்று ஜனநாயகம் குறித்தும் இருந்துவரும் அனைவருக்குமான உண்மைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்கு உண்மையான முயற்சிகளை மேற்கொண்டதன் மூலமாக கிளர்ச்சியாளர்கள்  ஓர் அடையாளபூர்வமான இடத்தை அளித்திருப்பது இக்கிளர்ச்சிப் போராட்டங்களில் குறிப்பிடத்தக்கவைகளாகும். இக்கிளர்ச்சிப்போராட்டங்களில் தனித்துவமிக்க விதத்தில் வெளிப்பட்ட அம்சங்கள் என்னவென்றால், அது காந்தி மற்றும் அம்பேத்கர் அளித்திட்ட அறநெறி உதவியுடன் உலகளாவிய உண்மையைக் கண்டறிய கூட்டாக முயற்சிகள் மேற்கொண்டதாகும்.

உண்மைக்குப் பொறுப்பேற்பது என்பதைவிட அனைவருக்குமான உண்மைகளைக் கண்டறிவதற்கான அறநெறித் தேவையால் உந்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டவை என்பதே இக்கிளர்ச்சிகள் குறித்து மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவைகளாகும். உண்மைக்குப் பொறுப்பேற்பது என்பது, குடியுரிமை என்கிற அனைவருக்குமான பிரச்சனையை, சாதி மற்றும் பாலினம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மேலாக முன் வைக்கிறது. சமூகக் குழுக்கள் தங்கள் குழுக்கள் சார்ந்த பிரச்சனைகள், ஜனநாயகத்திற்காக அனைவரும் ஒன்றுபட்டு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கையில் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வதிலிருந்து உண்மை அனைவருக்குமானதாகிறது. அனைவருக்குமான இந்த உண்மை, கூட்டாக தேடப்பட்டு, முகத்திற்கு எவ்வித முகமூடியும் அணியாமல் வலியுறுத்த முடியும். உண்மையும் ஓர் ஆத்மார்த்தமான சக்தியைப் பெற்றிருக்கிறது. எனவே அது ஏமாற்றக்கூடிய விதத்தில் எவ்விதமான முக்காட்டுக்குப்பின்னாலும் ஒளிந்து கொள்ளாது. எனினும், ஓர் அப்பட்டமான பொய் ஒரு முகமூடிக்குப் பின்னே ஒளிந்துகொள்வதற்குப் பெரிய அளவில் தேவைப்படுகிறது.    உண்மையின் அனைவருக்குமான கருத்தாக்கம் என்பது  ஓர் அரசியல் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிற ஆத்மார்த்த சக்தியுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோரைத் தங்களின் வழிகாட்டும் அடையாளங்களாகப் பற்றிக்கொண்டிருக்கும் போது, இது மேலும் உறுதிப்படுகிறது. இத்தகைய கூட்டு விசுவாசம் மற்றும் பற்றுறுதி, உட்குறிப்பால், கிளர்ச்சியாளர்களை எதிர்ப்பவர்களுக்கு, சாமானிய மக்கள் மனதில் தேசியவாதம் மற்றும் சுதந்திரம் தொடர்பாக குறுகிய மற்றும் பிளவுவாத கருத்தாக்கங்களை உருவாக்குவதைக் குறியாகக் கொண்டு தங்கள் உத்திகளைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய எதிர்ப்பாளர்கள், கிளர்ச்சியாளர்கள் சட்டரீதியாக ஜனநாயகபூர்வமாக முன்வைத்திடும் கருத்துவேறுபாடுகளைக்கூட தேச விரோதமானவை என்று முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்கள். இது, உட்குறிப்பால், ஜனநாயகத்தை தேசியவாதத்திற்கு எதிராக வைக்கிறது. காந்தி-அம்பேத்கர் தொலைநோக்குப் பார்வையின்படி தேசியவாதம் என்பது ஆக்கபூர்வமான வழியில் ஏராளமான பொருள்களை அளிப்பதாகும். உதாரணமாக, சோசலிச தேசியவாதம், பகுஜன் தேசியவாதம், அல்லது ஜனநாயக தேசியவாதம் என்று பொருள்களை அளிக்கிறது. அதேபோன்று, நடப்புக் கிளர்ச்சியாளர்களை எதிர்ப்பவர்கள் குடியுரிமை குறித்த அரசமைப்புச்சட்ட உரிமையையும் கூட மிகவும் குறுகிய விதத்தில், அது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியதாக வரையறுத்திடக் கோருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் குடியுரிமையை அளித்திடும் அரசியலானது, அரசமைப்புச்சட்டம் கூறியிருப்பதுபோல, குடியுரிமைக்கான உரிமைகள் அனைவருக்கும் அடிப்படையானது என்பதை புறக்கணிக்கக் கோருகிறது.  கிளர்ச்சிகளின் எதிர்ப்பாளர்கள், பொய்களை “விதைப்பதன்” மூலமும், எனவே அதிகாரபூர்வமற்ற “துக்தே-துக்தே” (“tukde-tukde”) போன்றவற்றை பொது வெளியில் கூறுவதன் மூலமும், சில மக்களின் மனதில் தேசியவாதம் குறித்த குறுகிய கருத்தை திணிப்பதைக் குறியாகக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய முயற்சிகள் அரசைமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளாக அமைந்திருக்கின்ற ஜனநாயகக் குடியுரிமையும், தேசியவாதமும் அனைவருக்குமானது என்பதன் மீது மூடுபனி போர்த்துவதுபோன்று செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.           

 

Updated On : 29th Jan, 2020
Back to Top