ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

சிந்தனைகள் மலரும் இடமாக பல்கலைக்கழகம்

.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் என்ற முறையில் தாங்கள் சொந்தமாகவே பயணித்திடாது. அவை, பல்வேறு நாடுகளிலும், நாடுகளில் உள்ள, பல்வேறு பிராந்தியங்களிலும், பலருக்காக கவர்ச்சிகரமான சிந்தனைகளை மாற்றியமைக்கும்போதுதான்,  அவற்றின் பயணங்கள் தொடங்குகின்றன. இவ்வாறு, பல்கலைக் கழகங்கள் என்பவை வெறுமனே கட்டிடங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள சில எண்ணிக்கைகளோடு கூடிய வெறும் நிறுவனங்கள் மட்டுமல்ல. உண்மையில், பல்கலைக் கழகங்கள், சிந்தனைகளை நிறுவனமயப்படுத்திடும் நிறுவனங்களாகும். இதன் தொடர்ச்சியாக அவை, அவற்றில் பயிலும் மாணாக்கர்களிடையே உலகளாவிய மனித விழுமியங்களை உருவாக்கி வளர்த்திடும். இவ்வாறு, பல்கலைக் கழகங்கள், இருவிதமான ஒழுங்குமுறை செயல்பாடுகளை செயற்படுத்துகின்றன. முதலாவதாக, அத்தகைய மதிப்பு மிக்க சிந்தனைகளை நிறுவனமயப்படுத்துகிறது. இரண்டாவதாக, இந்தச் சிந்தனைகளின் உறைவிடமாகவும், உபசரித்திடும் இடங்களாகவும் இருக்கின்றன. பல்கலைக்கழகங்கள், கருத்தியல்ரீதியாக, ஒருவரிடம் மிகவும் கவனம் செலுத்தி, அவரிடம் நல்ல கருத்துக்களை விதைத்து, வளர்த்தெடுத்து, அவரை சமூக லட்சியங்கள் மீது பற்றுறுதி கொண்டவராகவும் பாண்டித்தியம் உடையவராகவும் மாற்றக்கூடிய விதத்தில், படைப்புத் திறனையும் பல்வேறு ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் உருவாக்கும் இடங்களாகும். இவ்வாறு, பல்கலைக்கழகம் கூருணர்வுமிக்க விதத்திலும், பல்கலைக் கழகத்தின் உடனடி எல்லைகளுக்கு உள்ளேயும், வெளியேயும், படைப்புத்திறன் கொண்டவர்களை உருவாக்கும் இடங்களாகும்.

சிந்தனைகள் மலரும் இடமாக பல்கலைக் கழகம், மாணவர் சமுதாயத்தை, அதிலும் குறிப்பாக, அவர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் விதத்தில், தங்கள் வேட்டையாடும் கையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, தங்களின் ஆழ்ந்து சிந்தனை செய்யும் மனதைப் பண்படுத்திப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் ஊக்குவித்திட வேண்டும். எதையும் ஆர்வத்துடன் அறியத்துடிக்கும் மனம், பரஸ்பரம் பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மேற்கொள்ளும் கலாச்சாரத்தில் தன்னைப் சம்பந்தப்படுத்திக்கொள்ளும் என்று அழுத்தத்துடன் கூறவேண்டிய தேவையில்லை.  கருத்துவேறுபாடுகளுடனான சூழ்நிலையில் அது தன் அறிவு என்னும் ஆயுதத்தின்மூலம், மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்திடும். இந்தக் கருத்தியல், பல்கலைக்கழக அதிகாரிகள் பல்கலைக்கழகத்தின் சாரமாக விளங்கும் மாணவர்களின் மனதில் தேவையான கூருணர்வுடன் நிலைமைகளை உருவாக்கும்போது உண்மையாக மாற முடியும். பல்கலைக்கழகங்கள்  நிறுவனங்கள் என்ற முறையில் மாணவர்களுக்கு சமூகப் பொறுப்புடனும், அறிவார்ந்த பொறுப்புடனும் துல்லியமான வெளிப்பாடுகளை அளித்திட வேண்டும். அவற்றின் செயல்பாடுகள், மாணவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை மற்றும் கருத்துவேறுபாடுகளுக்கான இடத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கருத்துவேறுபாடுகளை அனைவரிடமும் எடுத்துச் செல்லவும் வேண்டும். பல்கலைக்கழக வளாகங்களில் மாற்றுக்கருத்துக்களைக் கூறும் குரல்களும், தர்க்கவியல் உணர்வுகளும் அறிவுசார் சமத்துவத்தையும், சமூக ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் என்று உலகளாவிய அளவில் கருதப்படுகிறது. இத்தகைய வழிமுறைகளைச் சிதைப்பதற்கு மேற்கொள்ளப்படும் எவ்விதமான முயற்சியும் இதற்கெதிராக சட்டப்படிக் கிளர்ந்தெழுவதற்கே இட்டுச் செல்லும்.  பொதுப் பல்கலைக் கழகங்கள், சமுதாயத்தில் உரிமைகளற்று அடித்தட்டில் வீழ்ந்துகிடக்கும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் பொறுப்பைப் பெற்றிருக்கின்றன. இத்தகைய பல்கலைக்கழகங்கள் உரிமைகளற்று அடித்தட்டில் வீழ்ந்துகிடக்கும் மாணவர்களுக்கு அளித்திடும் வாய்ப்புகள் மூலமாக அவற்றை அவர்களின் சொத்துக்களாக மாற்ற முடியும். உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் பலவற்றில் இது உண்மையாகும். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அரசு அசிரத்தையாக இருக்க முடியாது. அரசு, மாணவர் சமுதாயத்தை உரிய கவனத்துடன் கையாள வேண்டியது அவசியமாகும். அரசு, ஒரு நிறுவனம் என்ற வகையில், குறுகிய சித்தாந்த  நோக்குநிலைக்கு அப்பாற்பட்டதாக இருந்திட வேண்டும். கல்வி நிறுவனங்களின் அறிவார்ந்த நலனைப் பேணுவதில் உறுதியுடன் இருந்திட வேண்டும். பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான ஆதரவினை அளித்திட வேண்டும். பல்கலைக்கழகத்தை ஒரு வாழ்க்கையின் லட்சியமாகப் பார்க்க வேண்டுமேயொழிய, அதனை அழித்து ஒழித்துக்கட்டும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது. ஓர் அறநெறி ஒழுக்கப்பண்புகளுடன் கூருணர்வுமிக்க அரசும், பல்கலைக் கழகமும் மாணவர் சமுதாயம் அரசின் அல்லது நாட்டின் எதிரியாக இருப்பதாக எதிர்பார்க்காது. இத்தகைய உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் அதீத தலையீடும் மற்றும் உக்கிரமான விதத்தில் விரோதமான எதிர்ப்பும் இருக்குமாயின், பின் அத்தகைய பல்கலைக்கழகங்கள் சமூக மற்றும் அறிவார்ந்த குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கான சிந்தனைகள் மலரும் இடம் என்பதற்கு முற்றிலும் எதிரானதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு பல்கலைக் கழகத்தில் கருத்துவேறுபாடுகளைத் தெரிவித்திடும் மாணவர்களை நசுக்கிடும் போக்கு, இதர பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களை மவுனப்படுத்திட இட்டுச் செல்லும். குடிமை சமூகத்தின் உறுப்பினர்கள், பல்கலைக் கழகங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் உதவியுடன் நடைபெறும் பொதுப் பல்கலைக் கழகங்கள், சண்டையிடும் குணம் படைத்த சமூகத்தையும்கூட, தீங்கற்ற மனிதநேயத்துடன், நல்லிணக்க உணர்வை உருவாக்கும் ஒன்றாக மாற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சிந்தனைகள் மலரும் இடமாகத் திகழ்கின்ற பல்கலைக்கழகத்தின் தரத்தை வைத்து ஒரு நாட்டின் அறிவுசார் உயரத்தை அளந்திட முடியும்.  ஆனால், ஒரு பல்கலைக்கழகத்தின் சித்திரத்தின்மீது பொய்ப்பிரச்சாரங்கள் மூலமாக அவதூறைப் பொழிந்தால், அது தற்கொலைக்கு ஒப்பானது என்று கூறாவிட்டாலும், துரதிர்ஷ்டவசமானதாகும். நாட்டின் அறநெறிப் பண்பு, கலாச்சாரம் மற்றும் அறிவுசார் உயரம் என்பது அந்நாட்டில் உள்ள சிந்தனைசெய்வோரின் ஆழத்தைப் பொறுத்தது என்பதையும், இத்தகைய லட்சியத்தை எய்துவதற்கான பிரதான ஆதாரமாக பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் அவசரகதியில் உணரவேண்டியது தேவையாகும். நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். எனவேதான், பல்கலைக்கழகங்களைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் இயக்கம், பொது நிறுவனங்களை அழிக்கக் கோருவோரால் அரசியல் கொந்தளிப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது.

 

Back to Top