உத்தரப்பிரதேசத்தில் சட்டம் விசாரணைக்கு உட்பட்டிருக்கிறது

காவல்துறையினரின் வலுச்சண்டைக்கிழுக்கிற, மிரட்டிப் பணியவைக்கிற அணுகுமுறை, நாகரிகமான சமூகம் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு தீங்கு பயத்திடும்

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டங்கள் நாடுமுழுதும் உறுதிபடத் தொடர்வதால், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆளும் மாநிலங்களில் அல்லது எங்கேயெல்லாம் பாஜக தலைமையிலான அரசாங்கம் காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதோ அங்கெல்லாம் கிளர்ச்சியாளர்கள்மீது இரும்புக்கரம் கொண்டும், வன்முறை அணுகுமுறையுடனும் தெளிவாகவே தெரிகிறது. குறிப்பாக, கிளர்ச்சிகளின்போது இந்த மாநிலங்களில் மனித உயிர்கள் பலியாகியிருப்பதாக (காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இவ்வாறு பலியாகியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது), செய்திகள் வெளியாகியிருப்பது ஆளும் கட்சியின் மிகவும் அருவருப்பான நடவடிக்கை என்றுதான் கூறவேண்டும். எனினும், இவை குறித்து எவ்விதமான மனசாட்சியின் உறுத்தலுமின்றி, ஆளும் கட்சியின் தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களில் ஒரு பிரிவினர் இதனை ஆள்வோரின் வலுவான, அஞ்சி விலகாத நடவடிக்கையின் அடையாளம் என்று காட்டிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, இதுதொடர்பாக மிகவும் கொடூரமான விஷயம் என்ன வென்றால், உத்தரப்பிரதேச முதலமைச்சர் 2019 டிசம்பர் 19 அன்று கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் பழிக்குப்பழி வாங்கியதாக வெளிப்படையாகவே பேசியிருப்பதாகும். அதன்பின்னர், அம்மாநிலக் காவல்துறையினர், அடுக்கடுக்கான கொடூரமான செயல்களை மேற்கொண்டிருப்பதையும், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதையும், தங்கள் இஷ்டத்திற்கு கைதுகள் செய்வதையும்  பார்த்துக்கொண்டிருக்கிறது.   உண்மையில் இதைத்தான் அந்த அரசாங்கம் தன் சொந்த மக்களிலேயே ஒரு பிரிவினருக்கு எதிரான பழிக்குப்பழி நடவடிக்கைகளாகக் காட்டிக்கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.

இவ்வாறு, இதுவரை உத்தரப்பிரதேசத்தில் 19 உயிர்கள் பலியாகி இருக்கின்றன.   ஆனால் அரசாங்கத் தரப்பில் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது இருக்கட்டும். இது  தொடர்பாக, சமரசம் செய்யும் விதத்திலேயே இருக்கிறதே தவிர வேறெதுவும் இல்லை. ஆரம்பத்தில், காவல்துறையினர் தாங்கள் கிளர்ச்சியாளர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று முழுமையாக மறுத்தார்கள். கிளர்ச்சியாளர்கள் இறந்த்தற்கு அவர்களே காரணம் என்று பழியை அவர்கள் மீது போட்டார்கள்.  ஆனால் நடந்தவைகள் என்ன என்று தெளிவாகக் காட்டும்விதத்தில், காணொளிக் காட்சிகள் வெளிவரத்தொடங்கியபின், அதனை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய வந்தது. அப்போதும்கூட, தற்காப்பு நடவடிக்கையாக அவை நடைபெற்றன என்று நியாயப்படுத்தும் விதத்திலேயே அவை அமைந்திருந்தன. மனித உயிர்கள் இழப்பு என்பது மாபெரும் அறநெறி ஒழுக்க நெருக்கடியாகும்.  அல்லது ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தோல்வியாகும். எனவே, இவை குறித்து ஒரு முறையான விசாரணை மற்றும் இதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின்முன் கொணரப்பட வேண்டும் என்று கோருவதே பொருத்தமாகும். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்ச்சிப்போக்குகள், இவ்வாறான குற்றம்புரிந்தவர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டுக்கொண்டும் அரவணைத்துக்கொள்ளப்பட்டுக் கொண்டுமிருக்கிறார்கள் என்பதையே, காட்டுகின்றன. சம்பவ இடங்களிலிருந்து மலைபோல் வந்துகொண்டிருக்கும் சான்றுகள் அரசாங்கத்தையும் அதன் நிர்வாக எந்திரத்தையுமே குற்றப்பொறுப்பாக்கிச் சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பது போன்றே தோன்றுகிறது.

அடிப்படையாகவே, உத்தரப்பிரதேச காவல்துறையினர், தங்கள் பணி அத்தியாவசியமான ஒரு குடிமைப் பணி என்பதையும், மிலிட்டரி பணி அல்ல என்பதையும் வெளிப்படையாகவே மறந்திருக்கிறார்கள் அல்லது மறக்கும் விதத்தில் செய்யப்பட்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசம் ஓர் அமைதி குலைந்த பகுதி அல்லது மோதல் ஏற்படக்கூடிய மண்டலம் என்று அறிவிக்கப்பட்டதில்லை என்பதைப் பரிசீலித்தோமானால், அங்கே காவல்துறையினர் ராணுவத்தினர் போன்று அணுகுமுறையைக் கடைப்பிடித்துவருவதற்கு எவ்விதமான நியாயத்தையும் கூற முடியாது. ஒரு நாகரிகமான சமுதாயத்தில், காவல்துறையினர் ஆத்திரமூட்டும் விதத்தில் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் சமயத்தில்கூட, மிக அதிகமான அளவில் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்திட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.    ஆனால், உத்தரப்பிரதேசக் காவல்துறையினரின் நடத்தை, கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று அற்பத்தனமான முறையில் அல்லது சந்தேகத்திற்குரிய காரணங்களின் அடிப்படையில் பாசாங்குத்தனமான விதத்தில் காரணங்களை உருவாக்கிக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிவைத்து மிகவும் மூர்க்கத்தனமான முறையில் விஷத்தை உமிழும் விதத்திலேயே இருக்கிறது. இவர்கள் கூறுவதை சரிபார்த்திட, பாரபட்சமற்ற விசாரணை மிகவும் அவசியமாகிறது, மேலும் முகமூடி அணிந்து வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் யார் என்பதையும் வெளிப்படுத்திட வேண்டும்.

இதுபோன்ற சுறுசுறுப்பு, புலந்த்சாகரில் உத்தரப்பிரதேச காவல்துறை ஆய்வாளர் ஒருவர், ஒரு கும்பலைக் கட்டுப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தபோது, அக்கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, இதுபோன்ற சுறுசுறுப்பு காணாமல் போனது ஏன் என்று ஒருவர் ஆச்சர்யப்படுகிறார். சட்டத்தின் ஆட்சியின் நிலைமை அல்லது அது இல்லாமை பரிகசிக்கும் விதத்தில் இருக்கிறது. கும்பலைக் கட்டுப்படுத்திய ஒரு காவல்துறை அதிகாரி தன்னுடைய உயிரை இழக்க வேண்டி இருந்த்து. இப்போது அதே காவல்துறை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக குண்டர் கும்பல் போன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. காவல்துறையின் நண்பர்கள் (போலீஸ் மித்ரா) என்று கூறப்படுபவர்கள் மிகவும் விரிவான அளவில் பயிற்றுவிக்கப்படாத சிவிலியன்கள், ஒரு குறுகியகால மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பது, காவல்துறையினர் குண்டர் கும்பல் குணத்தைப் பெறுவதற்கு வலுவூட்டியிருக்கிறதோ என்கிற ஐயுறவு ஏற்பட்டிருக்கிறது. அதிதீவிர இந்துத்துவா அமைப்பின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்களால் இத்தகைய அச்சவுணர்வு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில் பயத்தை உருவாக்கி, மிரட்டிப் பணியவைத்திடும் நாணமற்ற முயற்சிகளில், காவல்துறையும் சேர்ந்துகொண்டு வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பதாகவும், சொத்துக்களை அழித்திருப்பதாகவும், கடுமையாக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஒட்டுமொத்த மக்களையும் கிரிமினல்கள் போல் முத்திரைகுத்தவேண்டும் என்கிற ஒருமுகப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக தனிநபர்கள் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இளம் வயதினர் காவல் அடைப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதான எரிச்சலூட்டும் செய்திகளும் வெளியாகி இருக்கின்றன.  உண்மையில், அரசாங்கமும் காவல்துறையும்தான் சமூக வலைப்பின்னலுக்கும் மனித உயிர்களுக்கும் மிகவும் மோசமான சேதம் விளைவிப்பதில் உடந்தையாக இருந்திருப்பது மிகவும் குரூரமான நகைமுரணாகும்.   

இவ்வாறு சமூகக் கட்டமைப்புக்கும் மனித உயிர்களுக்கும் சேதம் விளைவிப்பதில் அரசாங்கமும் காவல்துறையும் உடந்தையாக இருந்துவிட்டு, இப்போது கிளர்ச்சியாளர்களிடமிருந்து (மேலும் கிளர்ச்சிகளில் ஈடுபடாத முஸ்லீம் சமூகத்தினரில் உள்ள நபர்கள் பலரையும்) பொதுச் சொத்தை சேதப்படுத்தினார்கள் என்று இழப்பீடு கோருவது குரூரமான நகைமுரணாகும்.  ஆட்சி செய்பவர்களின் தூண்டுதல் இல்லாமல் இத்தகைய செயல்கள் சாத்தியமாகி இருக்க முடியும் என்று நம்புவது மிகவும் கடினம். ஏனெனில் பல சமயங்களில் அவர்கள் தங்கள் பிற்போக்குத்தனமான குணத்தை வெளிக்காட்டி இருக்கிறார்கள்.  

இந்த நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் உத்தரப்பிரதேச மாநிலம், இன்றைய ஆட்சியாளர்களின் கீழ், ஒருவிதமான மதச் சித்தாந்த வளைவுடன் போலீஸ் அரசாக (Police State) நோக்கி சென்று கொண்டிருப்பதுபோலவே தோன்றுகிறது. இத்தகைய அரசின்கீழ் ஜனநாயக உரிமைகள் என்றென்றும் பறிக்கப்படும் நிலையில் இருக்கும் என்பது முதுபெரும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிகவும் ஆழமான குற்றச்சாட்டுக்களின்கீழ் எவ்வித அடிப்படையுமின்றி கைது செய்யப்பட்டிருப்பதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களில் சிலர் கடுமையாக அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தக் கைதுகளும்கூட ஒரு குறிப்பிட்ட வகையாக இருப்பதைக் காட்டுகிறது. அதாவது, மிகவும் விளிம்புநிலையில் இருக்கும் மக்களின் உரிமைகளுக்காக விடாது போராடிக்கொண்டிருக்கிறவர்கள் மீது ஏவப்படும் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்து கூறுவதிலிருந்து அல்லது நீதி கோருவதிலிருந்து தடுத்து திக்குமுக்காடச் செய்திட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டு, சிறைக்கம்பிகளுக்குப்பின்னே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில், உயிர்வாழ்வதற்கான உரிமை, அமைதியாகக் கூடுவதற்கான உரிமை, கிளர்ச்சி செய்வதற்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் மிதித்துத் துவைக்கப்பட்டு தாங்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தை உறுதிப்படுத்தி இருப்பதுபோலவே தோன்றுகிறது. ஒருசில விதிவிலக்குகள் தவிர இந்த நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக வெளிக்கொணரப்படவில்லை. அல்லது ஒருவித சார்புத்தன்மையுடன் வெளியாகி இருக்கின்றன. இத்தகைய பயமும், கசப்பான நிலையும் ஜனநாயக அரசியலுக்கும், நாகரிகமான சமூகத்திற்கும் தீங்கு பயக்கக் கூடியவைகளாகும். எனவே, அனைத்துப் பிரிவு மக்களும் அரசாங்கத்திடமிருந்து கணக்கு கோர வேண்டியதும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட எழுவதும் அவசியமாகும். உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள், சமூகத்தில் முனைவாக்கம் (social polarisation) என்பது நாளும் தோன்றும் நிரந்தரமான குணமாக மாறக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் இது தொடர்பாக மக்களின் கருத்துக்களை அணிதிரட்டுவது தேவை.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Using ordinance to protect freedom of expression from foul speech may result in damaging decent communication.

Only an empowered regulator can help boost production and cut coal imports.

Biden’s policy of the “return to the normal” would be inadequate to decisively defeat Trumpism.

*/ */

Only a generous award by the Fifteenth Finance Commission can restore fiscal balance.

*/ */

The assessment of the new military alliance should be informed by its implications for Indian armed forces.

The fiscal stimulus is too little to have any major impact on the economy.

The new alliance is reconfigured around the prospect of democratic politics, but its realisation may face challenges.

A damning critique does not allow India to remain self-complacent on the economic and health fronts.

 

The dignity of public institutions depends on the practice of constitutional ideals.

The NDA government’s record in controlling hunger is dismal despite rising stocks of cereal.

 

Back to Top