ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

அமேசான் தீ குறித்து பற்றி எரியும் கேள்வி

காலநிலை நெருக்கடியை ஜேய்ர் பொல்சானாரோ மறுத்தது மற்றும் பூர்வக் குடிகளின் மீதான தாக்குதல் இந்தப் பேரிடரை மேலும் தீவிரமாக்குகிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

பரந்து விரிந்த அமேசான் மழைக்காடுகளின் பகுதிகளிலிருந்து ஆபத்தான முறையில் புகைமண்டலம் கிளம்பிக் கொண்டிருக்கிறது. 55 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவிற்கு இந்த புகைமண்டலம் பரவி கார்பன் இறங்கியது. இந்த தீயின் மிக மோசமான கட்டத்தில், இந்தப் புகையானது பிரேசிலின் கிழக்குக் கடற்கரையோர வானத்தை வட்டமிட்டது. இந்தப் பகுதியில்தான் பிரேசிலின் பெரும்பாலான மக்கள் வாழ்கிறார்கள். பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமான (INPE)ன் கணக்குப்படி, 2018ஆம் ஆண்டைவிட தீப்பிடித்தலின் எண்ணிக்கை 84% அதிகரித்துள்ளது. உலகின் மிக அதிகமான உயிர்வேறுபாடு நிறைந்த பிரந்தியங்களில் ஒன்றான பகுதிகளில் 74,000க்கும் மேற்பட்ட தீப்பிடித்தல்கள் நடந்து நிலைமையை கிழித்தெறிந்துள்ளது. தீப்பிடித்தல் பொதுவான விஷயம்தான், அங்கு வறண்ட காலநிலையில் அவை நடந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு தீப்பிடித்தது மிகவும் வீரியமாக உள்ளது. எனவேதான் இது குறித்து ஒட்டுமொத்த உலகமும் கவலைப்படவேண்டியுள்ளது.

அமேசான் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPAM) உள்ள விஞ்ஞானிகள் இந்த ஆண்டு தீபிடித்தது 10 அமேசான் நகராட்சிகளை அழித்துள்ளது, மற்றும் பெருமளவில் காடுகளை அழித்துள்ளது என்று கூறியுள்ளனர். 2016ஆம் ஆண்டின் வறட்சி கண்டிப்பாக இந்த தீப்பிடித்தலில் பெரும்பங்கு வகித்துள்ளது என்று இந்த நிறுவன விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த தீயை வறட்சியோ அல்லது ஏதாவது இயற்கை சுழற்சியோ ஏற்படுத்தியுள்ளது என்ற கருத்து புறக்கணிக்கப்பட வேண்டியது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். “வறண்ட காலமாக இருந்தபோதும் அமேசானில் உள்ள ஈரப்பதம் கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடும்போது சராசரிக்கும் கூடுதலாக இருந்தது என்று ஐபாம் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளார்கள். காடுகளை அழிப்பது தொடர்பான விழிப்புணர்வு அமைப்பு மற்றும் ஐபாம்மின் பணிகளின் அடிப்படையில், விஞ்ஞானிகள், “காடுகளை அழிக்கும் நடவடிக்கைதான் இந்த தீயை பரவச்செய்துள்ளது” என்று கூறுவதே, நம்பத்தகுந்த விளக்கமாக உள்ளது.

பிரேசில் அதிபர் ஜேய்ர் பொல்சானாரோ காலநிலை அறிவியலையோ அல்லது காடுகளை வளர்த்தல் மற்றும் காடுகளை பாதுகாத்தலில் உள்ள அறிவியலையோ நம்புவதில்லை. ஆகஸ்டு மாதம் துவக்கத்திலிருந்து ஐஎன்பியின் தலைவரான ரிக்கார்டோ கால்வோ, பிரேசிலில் காடுகளை அழிக்கும் விகிதம் அதீதமாக உள்ளது என்று எச்சரித்தார். 2019ஆம் ஆண்டு ஜூன் மாதமே, அமேசான் 2,072 சதுர கிலோமீட்டர் காடுகளை இழந்துள்ளது என்றும் இந்தப் பகுதி மாலி என்னும் நாட்டின் பரப்பளவை விட அதிகம் என்றும் கூறினார். பொல்சனோரோ இதை பொய் என்று கூறினார். கால்வோவை பதவி நீக்கினார். மரம் வெட்டுதல், சுரங்கம் அமைத்தல், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் இவற்றின் சார்பாக பொல்சானாரோ சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கான பிரேசிலிய நிறுவனத்திற்கான (ஐபாமா) நிதியை 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 20% குறைத்தார். தங்கள் ஒழுங்கீடுகளில் ஐபாமா அதிகாரிகள் மிகவும் ஆர்வத்துடன் நடந்து கொண்டனர் என்று அவர் சொன்னார். விண்ணளவு கட்டணங்களுடன் அவர்கள் எப்போதும் ஒரு பேனா எடுத்துக்கொண்டு வருவார்கள்.  அமேசான் வணிகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மரம் வெட்டுதல், சுரங்கம் அமைத்தல், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் ஆகியவை அமேசானுக்குள் வாழும் பூர்வீககுடிகளின் இருப்பு பெரும்தடை என்று கருதின. இந்தக் காட்டை வியாபார சரக்காக மாற்றுவதை பூர்வீகக் குடியினர் தடுத்தார்கள். 1988ஆம் ஆண்டு பிரேசில் அரசமைப்பு அமேசானில் பூர்வீகக் குடிகளுக்காக பெரும் செல்வங்களை ஒதுக்கியது. இவர்கள் பிரேசிலின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 0.6% உள்ளனர். பொல்சானாரோவும் அவரது வலதுசார் சதிக்கும்பலும் அமெரிந்தியர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தும் மனோபாவத்தில் உள்ளனர். யவனாவா சமூகத்தின் தலைவரான தஷ்காயவனாவா, பூர்வீகக்குடியினர் அமேசானில் இனப்படுகொலையை எதிர்கொள்கின்றனர் என்று கூறினார்.

பாதுகாக்கும் மனப்பான்மையுடைய அரசு சாரா நிறுவனங்களின் மேல் இந்த தீக்கான காரணத்தை பழிபோடுகிறார் பொல்சானாரோ. பிரேசிலுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதற்காகவும் அவரது வணிகம் சார்ந்த அலுவல்நிரலை சீர்குழைப்பதற்காகவும் அவர்கள் வேண்டுமென்றே இந்த தீயைப் பற்ற வைத்துள்ளனர் என்றும் கூறுகிறார் பொல்சானாரோ. அவரது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு எந்த விதமான சான்றும் இல்லை. இது பிரேசில் அதிபர் வெளியிட்ட மற்றொரு சர்ச்சைக்குரிய அறிக்கை.

ஆகஸ்டு மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பொல்சானாரோ மீதான கோபம் கொந்தளித்துள்ளது. பிரேசில் முழுவதும் ரியோ டிஜெனரியோ மற்றும் சாபாவ்லோவை மையமாக வைத்து பேரணிகள் நடைபெற்றுள்ளன. அமேசான் மக்களுக்கானது, அமேசான் நிலைக்கிறது, பொல்சானாரோ போகிறார் என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பொல்சானாரோவின் ஒப்புதல் குறியீடு குறைந்துள்ளது. சிஎன்டி/எம்டிஏ நடத்திய ஆய்வின்படி அவரது அரசு மிகவும் மோசமாகவும் கொடூரமாகவும் உள்ளது என்று 39.5 % சதவீதத்தினர் கூறுகின்றனர். அவர்களது தனிப்பட்ட ஒப்புதல் குறியீடு தற்போது 29.4%ஆக (ஜனவரி மாதம் 38.9%) உள்ளது. பொல்சானாரோவின் அறிவியல் பூர்வமற்ற பதில், அமேசான் தீக்களின் தாக்கம், போராட்டங்கள் ஆகியவை அரசின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஐரோப்பா பொல்சானாரோவை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியதிலிருந்து விஷயம் மோசமாகியுள்ளது. அவரது முக்கியமான இரண்டு வர்த்தக மற்றும் கொள்கை விளக்கங்களை அது அச்சுறுத்தியுள்ளது. பிரேசில் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய விவசாயிகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார்கள். இது மிகவும் ஆபத்தானது. ஆனால் இதையும் விட மோசமான அச்சுறுத்தல் என்னவென்றால் மெர்கோசருடனான வர்த்தக உடன்படிக்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் விலகுவதாக எச்சரித்துள்ளது. மெர்கோசர் என்பது அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே மற்றும் வெனிசுலாவை உள்ளடக்கிய பிரதேசமாகும். மேலும் பிரேசிலை ஓஇசிடி- பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனத்திற்கு எடுத்துச் செல்வதாக பொல்சானாரோ நம்பிக்கை கொண்டிருந்தார். 36 நாடுகள் உறுப்பினராக உள்ள இந்த நிறுவனம் தன்னை வளர்ச்சி அடைந்த நிறுவனமாகக் கருதுகிறது. ஓஇசிடிக்கான பிரேசிலின் நுழைவு தற்போது சந்தேகமே.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 வட்டத்தில், அமேசான் நெருக்கடி குறித்து விவாதிக்க ஒரு சிறப்பு அமர்வு நடத்தப்பட்டது. பொல்சானாரோவிற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தக் கூட்டத்திற்கு வருகை புரியவில்லை. ஜி7 கூட்டம் 20 மில்லியன் டாலர்களை இந்த தீயை அணைப்பதற்காக ஒதுக்கியது. இந்த தொகை மிகவும் சொற்பம். அமேசான் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு இந்தத் தொகை போதாது என்று பொல்சானாரோ மறுத்துவிட்டார். இருப்பினும், இந்த அழுத்தத்தை புரிந்துகொண்டு இந்த தீயை அணைக்க அவர் இராணுவத்தை அனுப்பியுள்ளார். அமேசான் காடுகளின் வளம் மற்றும் அங்கு வாழும் மக்களின் மதிப்பிலிருந்து வெளிவராமல், பெயரளவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது போல் தெரிகிறது.

பிரேசிலின் தீ பொலிவியாவிற்குள்ளும் நுழைந்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் ஈவா மொரேல்ஸ் ஒரு சூப்பர் டாங்கரை வாடகைக்கு எடுத்து தீயை அணைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தார். பொலிவியாவின் புத்தகங்களில் அன்னை பூமிக்கான சட்டம் உள்ளது. மனிதர்களுக்கு சமமான உரிமை இயற்கைக்கும் உள்ளது என்று அச்சட்டம் கூறுகிறது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வேறுபாடு, ஓர் அரசின் அரசியல் கருத்தியல் சார்பு, அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எவ்வாறு நிர்ணயிக்கிறது என்று தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. எனவே, அமேசானைப் பாதுகாக்கும் பொறுப்பை நேர்மையான நாகரிகமான சமூக அரசியல் முறையை நிறுவும் போராட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top