அரசியலில் முன்கூட்டியே கூறுவதில் உள்ள ஆபத்து
.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
தேர்தல் வல்லுநர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முதலானவர்கள், அவ்வப்போது தேர்தல் பகுப்பாய்வுகள் மேற்கொண்டு, தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கூறுவது பற்றி நான் பேசிக்கொண்டிருக்கவில்லை என்கிற ஒரு பொறுப்பாகாமையுடன் இதனைத் தொடங்குவோம். அதேபோன்று தேர்தல் நாளன்று தேர்தலில் வாக்களித்துவந்தவர்களிடம் மேற்கொள்ளப்படும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் குறித்தும் முன்கூட்டியே கூறப்படும் போக்குகள் குறித்தும் நான் எதுவும் கூறப் போவதுமில்லை. முன்கூட்டியே இவ்வாறு கூறப்படுவதற்கான முயற்சிகள், தேர்தல் சமயங்களில் வாக்காளர்களின் அரசியல் மனோநிலையை நுணுக்கமாக நோக்குவதன் மூலம் இத்தகையவை காட்சிப்படுத்தப்படுகின்றன. முன்கூட்டியே கூறப்படும் கருத்தாக்கம் அரசியலின் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் உபயோகமானதாக இருக்கலாம். ஆனாலும், மற்றொரு கோணத்தில் அவ்வாறு இல்லாமலும் போகலாம். “முன்கூட்டியே” அல்லது ”முன்னறிந்து” என்கிற வார்த்தையை வித்தியாசமான கோணத்திலிருந்தும் பார்க்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக கட்சி அரசியலைப் புரிந்துகொள்வதற்கு இது முக்கியமாகும். கட்சி அரசியலின் பிரதான குறிக்கோள் ஆட்சியைக் கைப்பற்றுவதாகும். அரசியல் கட்சி அல்லது கட்சிகளால் உணரப்படும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கான கருத்தாக்கம் என்பது வல்லுநர்கள் மற்றும் பகுத்தாய்நர்களின் புரிந்துகொள்ளலிலிருந்து வித்தியாசமானது என்று ஒரு வாதத்தை முன்வைத்திட முடியும். நம் கையில் உள்ள பிரச்சனை என்பது தங்கள் கட்சிகளுக்குத் தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கக்கூடிய விதத்தில், வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட பாவனையில் மற்றும் ஒரு குறிப்பிட்ட திசையில் வாக்களிக்க வேண்டும் என்கிற அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.
வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கத் தெரிவு செய்திருக்கிறார்கள் என்று முன்கூட்டியே ஒரு கட்சி தெரிந்துகொள்வதன் மூலமாக, அவர்களில் தங்களுக்கு யார் வாக்களிப்பார்கள் என்று கண்டறிந்து அவர்களைத் தங்கள் கட்சியின் படைப்பிரிவினராக உருவாக்குவதற்கு உதவிடும். எனினும், அவ்வாறு அவர்களைக் கட்டமைப்பது வாக்காளர்களின் தேர்தல் அணிசேர்க்கையிலிருந்து குணாம்ச அடிப்படையில் வித்தியாசமானதாகும். சில கட்சிகள், வாக்காளர்களை, அவர்கள் அன்றாடும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் அடிப்படையில் அணிதிரட்ட முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. இவ்வாறு அரசியல் கட்சிகள் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, வாக்காளர்கள் தங்களுடைய அரசியல் சுயாட்சி உரிமையின்படி கட்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். மறுபக்கத்தில், வாக்காளர்களைக் கட்டமைப்பது என்பது, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குச் சாதகமான தெரிவுகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றின் அடிப்படையில் வாக்காளர்களை அணிதிரட்டுவதற்கான முயற்சிகளுடன் தொடர்புடையவைகளாக இருக்கின்றன. நாம் 2014 மற்றும் 2019 மக்களைவைப் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றபோது பார்த்ததைப்போல, தங்களுக்குச் சாதகமான வாக்காளர்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்கள் மத்தியில் கூருணர்வுமிக்க பிரச்சனைகள் வெறித்தனமாக எழுப்புதல், பொய் செய்திகளை விதைத்தல், அப்பட்டமான முறையில் பொய் வாக்குறுதிகளையும் வாரி இரைத்தல் போன்றவற்றின் மூலமாக அவர்களை ஓர் அணியாகத் திரட்டிடும் பணியை வெற்றிகரமான முறையில் முயன்று அடைந்திருக்கிறார்கள்.
பொய்களை வரவேற்கும் பண்பினை அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் போக்கினை, நபர்களுக்கு அளித்திடும் அறிவார்ந்த மற்றும் கலாச்சார நிலைமைகள் என்ன? இவற்றைப் பெறுபவர் அல்லது வாக்காளர், தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்திடும் சமயத்தில், கூடுதலான தகவல்களைக் கோர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அறிவார்ந்தவிதத்தில் சுயதிருப்தி மனப்பான்மையுடன் இருக்க வேண்டியிருக்கிறது. தேசியவாதம் போன்ற பொதுப் பிரச்சனைகள் வலுவானவிதத்தில் ஒருவரின் கூருணர்ச்சியை அதிகப்படுத்திவிடுகின்றன. இவை வாக்காளர்களுக்கு ஒரு முழுமையான திருப்தி உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், விரக்தி குவிப்பும் வாக்காளர்கள் மத்தியில் தங்களுக்கு ஆட்சியாளர்களால் அளிக்கப்படுகின்ற வாக்குறுதிகளை வரவேற்கும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இவ்வாறில்லாமல், சற்றே பகுத்தறிவுடன் ஆராய்ந்திருந்தார்களானால் அவை பச்சைப் பொய்கள் என்று தோன்றியிருக்கும். முன்கூட்டியே மிகவும் உயர் அளவில் உணர்ந்த இவ்விரு நிலைமைகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு 2014 மற்றும் 2019 மக்களவைக்கான பொதுத் தேர்தல்களில் அனுபவத்தைக் கொடுத்தது. 2014இல் அப்பட்டமான முறையில் அளித்திட்ட வாக்குறுதிகள் பயன்படுத்தப்பட்டது போன்றும், 2019இல் வாக்காளர்கள் மத்தியில் கூருணர்வுக் கூறுகளை உருவாக்கியதும் வாக்காளர்களை அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்திடத் தீர்மானித்திருப்பதாகத் தோன்றுகிறது. இத்தகைய அரசியலில் ஆழ்ந்த ஆராய்வுத்திறன், விவாதம் மற்றும் உரையாடல் போன்றவற்றை வாங்குபவர்களைக் காண முடியவில்லை.
இத்தகையதொரு கட்சி, தாங்கள் குறிவைத்துள்ள குழுக்கள் அல்லது வாக்காளர்கள், அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் அனைத்தும் மக்கள் சார்ந்த கொள்கைகளே என்றும், அதனால் நிறைவேற்றப்படும் சட்டம் சரியானதே என்றும், அரசாங்கம் தேசத்தைப் பார்த்திடும் தொலைநோக்குப் பார்வையும் ஒவ்வொருவருக்கும் போதுமானதே என்றும் அரசாங்கம் கூறும் அத்தனையையும் அப்படியே ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திடும் அளவுக்கு, ஒரு தாக்கத்தை உருவாக்கப் பார்க்கிறது. இத்தகைய சுய கட்டமைப்பில், ஒரு வீறார்ந்த, வெளிப்படைத் தன்மையுடனான அரசியலுக்கு பங்களிப்பினைச் செய்வது என்பது அடிபட்டுப் போகிறது. அதேபோன்று அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் தாங்கள் குறிவைத்துள்ள வாக்காளர்கள் வெளிப்படைத்தன்மையுடனான அரசியல் சம்பந்தமான நடைமுறை போன்றவற்றிற்கு பங்களிப்பு ஏதேனும் செய்திடவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. இவர்களின் ஒட்டுமொத்த நடைமுறையும் ஜனநாயக வாழ்வினை வறியதாக்குவதற்கு இட்டுச்செல்கிறது. வாக்காளர்களும் அதேபோன்று அவர்கள் வாழ்ந்து வருகின்ற பிராந்தியங்களும் தாங்கள் நீண்ட காலத்திற்கு ஆளப்போகிறோம் என்ற பேராசையுடன் இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட கட்சியின் கைகளில் வெறும் கருவிகளாகக் குறைந்துவிட்டன. மக்களிடம் அல்லது வாக்காளர்களிடம் பொய்களை வாரி இறைப்பது அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனையை சூறையாடுவதற்கு இட்டுச் செல்கிறது. இதன் விளைவாக அவர்களால் தேர்தல் அரசியலில் போட்டியிடுபவர்களிடையே பகுப்பாய்வினை மேற்கொண்டு தீர்ப்பு வழங்குவதற்கு முடியாமல் போய்விடுகிறது. மக்களின் சுயமரியாதை விசாரணையில் இருக்கிறது. கட்சிகள், வாக்காளர்களை வெறுமனே ஒரு கருவியாக மதிப்பிடுவதைத் தவிர, அதற்கு மேலாக அவர்களுக்கு உருப்படியான மதிப்பு எதையும் அளித்திடவில்லை.
எனினும், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள், எந்தக் கட்சியும் தன்னுடைய செல்வாக்கை இதரர்களுக்கும் மேலாகத் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்கிற விதத்தில் செல்வாக்கைச் செலுத்த முடியவில்லை. தங்களுடைய கையில் அரசியல் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதற்கான எந்தவிதமான முயற்சியும் மிகவும் இடரானதாக இருக்கிறது. ஆளும் கட்சியின் முன்னறிதல் எதார்த்தமான வாக்கெடுப்புக்குப்பின் பொய்த்துப் போயிருக்கிறது. முன்னறிந்து கூறும் பாதைக்காகச் செயல்பட்டவர்கள், ஆதரவாளர்களை முன் கூட்டியே தெரிந்து கொண்ட அவர்களைக் கட்டமைப்பது வெற்றிக்கான தேர்வுமுறையையோ அல்லது மேலும் ஆட்சியில் (ஒருவேளை அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோன்று இனி எப்போதைக்கும்) தொடர்வதற்கான வாய்ப்பையோ உத்தரவாதப்படுத்திடாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.