ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

ஜிஎஸ்டி இழப்பீடு அளிப்பதில் நெருக்கடி

பொருளாதார மந்த சூழலில் நிதிக்கான வெளி குறைவது ஜீஎஸ்டி வருவாய் இழப்பீட்டுக்கு ஓர் அச்சுறுத்தல்

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

எந்த விதமான வரி சீர்திருத்தத்துடனும் உள்ள வருவாய் ஸ்திரமற்றதன்மை அனைத்து அரசாங்கங்களுக்கும் ஒரு கவலையளிக்கும் விஷயம். எனவே இத்தகைய பெரிய சீர்திருத்தங்களுக்கு சாதகமாக விரிவான கருத்தொற்றுமையை பெறுவதற்கு வருவாய் பாதுகாப்பு குறித்த சில உத்தரவாதமான உறுதிமொழிகள் தேவைப்படுகிறது. பொருள்கள் மற்றும் சேவை என்கிற ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு முதல் ஐந்து ஆண்டுகளில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி செட்டில்மெண்ட் உட்பட, மாநில ஜிஎஸ்டி வருவாயில் ஏதேனும் குறைபாடு இருந்தால், மாநிலங்களுக்கான வருவாயை ஈடுகட்ட, 2017ஆம் ஆண்டு பொருள்கள் மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த சட்டத்தில் இயற்றப்பட்ட வருவாய் பாதுகாப்பு என்ற கருத்துக்குப் பின்னால், ஜிஎஸ்டி கவுன்சில் அதன் வடிவம், கட்டமைப்பு, நிர்வாக விதிகள் ஆகியவை குறித்து சோதித்து வந்துள்ளது. வரியுடன் ஒத்துப்போவதை எளிதாக்குவதும் மற்றும் பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம் குறித்து ஆராய்வதும் இதன் சோதனைகளுள் ஒன்று. ஒட்டு மொத்த ஜிஎஸ்டி சேகரிப்பில் குறை இருக்கும்போது, ஜிஎஸ்டி இழப்பீடு தேவைக்கும், ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் சேகரிப்புக்கும் இடையே வருவாய் இடைவெளி பெரிதாக உயர்ந்து வருகிறது. சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு இழப்பீட்டினை வழங்காதது ஒரு மாபெரும் சிக்கலாக உருவாகிறது. வருவாய் இழப்பீட்டு அமைப்பை மெருகேற்றுவதற்காக உருவான  ஜிஎஸ்டி இழப்பீட்டுச் சட்டத்தின் திறன் நாட்டில் கேள்விக்குறியாகி உள்ளது.

2015-16ல் ஜிஎஸ்டியின் கீழ் உள்ளடக்கப்பட்ட வட்டிகளில் 14% ஆண்டு வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கிடைத்தது என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி (மாநில ஜிஎஸ்டி) வருவாய் கணக்கிடப்பட்டது. அதைப் போலவே, மாநிலங்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை ஜிஎஸ்டி இழப்பீடு அளிப்பதற்கு, ஜிஎஸ்டியுடன் ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ்சும் அறிமுகப்படுத்தப்பட்டது. பான் மசாலா, புகையிலை, புகையிலைப் பொருட்கள், காற்றடிக்கப்பட்ட நீர், பயணிகள் வாகனங்கள் ஆகியவற்றிற்காகவும் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியத்திற்கு நிதி திரட்டவும், இவை 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது தாமதானது. எடுத்துக்காட்டாக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட இழப்பீடான ரூ.17,789 கோடி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கானது. ஜூன், ஜூலை 2019ஆம் மாதங்களுக்கான இழப்பீடான ரூ.27,955 கோடி ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. டிசம்பர் மாதம் மத்தியில் வெளியிடப்பட்ட ரூ.35,298 கோடி, 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கானதாகும்.

ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஒரு புதிய அம்சமாக இல்லை என்றாலும் ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதில் உள்ள தற்போதைய பதற்றம் பல்வேறு முக்கியமான காரணங்களுக்கான உன்னதமாகத் தோன்றலாம். முதலில், தற்போது ஏற்பட்டுள்ள தாமதம் ஒட்டு மொத்த மாநில ஜிஎஸ்டி வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், ஜிஎஸ்டி வருவாயில் உள்ள வருவாய் ஸ்திரமற்ற தன்மையாலும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் வீழ்ந்துள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வளரும்போது வரி சமநிலை வளர்கிறது. வரவிருக்கும் நாட்களில் ஜிஎஸ்டி இழப்பீடு அளிப்பதில் எந்தவிதமான தாமதம் ஏற்பட்டாலும் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் திரும்ப திரும்ப ஏற்படும். இரண்டாவதாக, ஜிஎஸ்டி இழப்பீட்டுச் சட்டம் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக எந்த சரியான வழிகாட்டுதல்களையும் கொண்டிருக்கவில்லை. ஜிஎஸ்டி இழப்பீடு தேவைக்கும் குறைவாக வருமானம் கிடைத்தால் என்ன செய்வது என்று எந்தவிதமான வழிகாட்டுதல்களும் இல்லை. இது ஒரு நகைமுரண். இந்த சட்டத்தின்படி, ஜிஎஸ்டி பரிமாற்ற காலத்தின்போது, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது மத்திய அரசின் பொறுப்பு. பொருளாதார வளர்ச்சி மந்தமாகும் சூழலில், ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ்சு வருவாய்க்கும் ஜிஎஸ்டி நஷ்டஈட்டு தேவைக்கும் இடையே கடும் பற்றாக்குறை இருப்பது, இந்திய பொது நிதி மேலாண்மையில் மாபெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.

ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட்ட 14% வளர்ச்சி விகிதத்தை உற்பத்தி செய்ய பல மாநிலங்களுக்கு திறன் இல்லை. பீகார் போன்ற சில மாநிலங்கள் விதிவிலக்கு. எனவே வருவாய் பாதுகாப்பு குறித்த உத்தரவாதம் ஜிஎஸ்டி அமைப்புக்குள் சமரசமாக ஒரு நிதி இடைவெளியை அளிக்கிறது. இது இவ்வாறு இருக்க, ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு, அதாவது 2024-2025 வரை நீடிக்க 15ஆவது நிதி கமிஷனை பல்வேறு மாநிலங்கள் அணுகியது ஆச்சர்யப்படத்தக்கது அல்ல. ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தினை நீட்டிக்கச் செய்யும் முடிவு ஜிஎஸ்டி கவுன்சிலுக்குத்தான் உள்ளது என்றாலும், அந்த முடிவை எடுக்க அந்த கவுன்சில் மத்திய அரசை சார்ந்துள்ளது. ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாயில் பற்றாக்குறை உள்ளதால் ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வருவாய் விரைவில் புதுப்பிக்கப்படுவது போல் தெரியவில்லை. ஜிஎஸ்டி இழப்பீட்டு காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டாலும், தற்போதுள்ள ஆண்டு வளர்ச்சி விகிதமான 14%ல் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நஷ்ட ஈடு வழங்குவதற்கான நிதி வெளியை மத்திய அரசு பெற்றிருக்கிறதா என்பது கேள்விக்குறி. இதற்கு வரி சமநிலையும் பெயரளவிலான ஜிடிபி வளர்ச்சி விகிதமும் மேம்படுவது அவசியம்.

இந்தியாவின் நிதி கூட்டாட்சித் தத்துவத்திற்கு தற்போதைய சூழல் நெருக்கடியை அளிக்கிறதா? இத்தகைய முடிவை தற்போதே பெறுவது மிகவும் குறுகிய சூழலாக இருந்தாலும், நமது நிதி கூட்டாட்சித் தத்துவத்தில் உள்ள நம்பிக்கை பற்றாக்குறையை புறக்கணிப்பது கடினம். இந்தப் பரிமாற்ற காலத்தில் ஜிஎஸ்டி வருவாய் பாதுகாப்பில் வளர்ச்சி விகிதத்தை ஒட்டுமொத்தமாக குறைக்க உதவும் எந்த நடவடிக்கையிலிருந்தும் இது வெளிப்படலாம். நஷ்டஈடு இல்லாத காலத்தில், நஷ்ட ஈட்டு காலத்தையும் தாண்டி ஜிஎஸ்டியின் வடிவத்துடனும் அமைப்புடனும் மாநிலங்களை ஒத்துப்போக வைக்கும் மைய ஈர்ப்பு விசை எதுவும் கிடையாது. அதே சமயம், எப்போதுமே ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை நீட்டிக்க முடியாது என்று மாநிலங்களும் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே இழப்பீட்டை எதிர்பார்த்து செலவுகளை அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும். சொந்த வருவாய் (வரி மற்றும் வரி அற்றவை) ஆதாரங்களிலிருந்து கூடுதல் வளங்களை சேகரித்து வருவாயை பெருக்க வேண்டுமென்றோ உற்பத்தியல்லாத செலவுகளைக் குறைத்து செலவுகளைக் கட்டுப்படுத்துவது குறித்தோ மாநிலங்கள் பரிசீலனை செய்யலாம். இதன் மூலம் நிதி ஸ்திரத்தன்மைக்கான வழியை நீட்டிக்கச் செய்யலாம். பரிமாற்ற காலத்திற்குப் பிறகு ஜிஎஸ்டி இழப்பீட்டினை விலக்குவதால் ஏற்படும் நிதி அதிர்ச்சிகளை தாங்கும் திறனை அளிக்கக்கூடிய சந்தர்ப்பமாக தற்போதைய சூழலைப்  பயன்படுத்திக் கொள்ளலாம்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top