குடியுரிமைத் (திருத்தச்) சட்டமுன்வடிவை விசாரணைக்கு உட்படுத்துவது

இந்திய சமூகத்தின் வேற்றுமையின் அடிப்படையை அரித்துவீழ்த்தும் விதத்தில் பல்வேறு தவறான நிலைப்பாடுகளைக் குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவு திறந்து வைத்துள்ளது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

குடியுரிமைத் (திருத்தச்) சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சட்டமுன்வடிவு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிராக செயல்படுகிறது. நாட்டின் சமூகக் கட்டுமானத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரவணைக்கும் பேரினவாத பாரபட்சமான அரசியல் திட்டமான இந்துத்வாவின் ஒட்டுமொத்த கட்டமைப்பாக இந்த நயவஞ்சக சட்டத்தைப் பார்க்க முடியும். இந்தியன் என்றால் யார் அல்லது இந்தியனாக இருப்பதன் பொருள் என்ன என்ற கேள்விக்கான பாரபட்சமான, தன்னிச்சையான பதிலை இது அளிக்கிறது. குடியுரிமை என்ற கருத்தியலுக்கு ஓர் உள்நாட்டு பிரதேசம் சார்ந்த பதிலை அளித்து ஒரு நவீன இந்தியாவைக் கனவு கண்டனர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஸ்தாபகர்கள். ஆனால் தற்போதுள்ள ஆளும் கட்சியோ, அதன் கருத்தியல் முன்னோடிகளுக்கு ஒத்துப்போகும்படி, குறுகிய அடையாளத்துவக் கருத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. இது மிகவும் குரூரமான நகைமுரண். இருந்தாலும் ஆச்சர்யப்படத்தக்கது இல்லை. ஆனால் இந்தக் குறிக்கோளை, தண்டனை அனுபவித்த சிறுபான்மையினருக்கான குடியுரிமை என்ற மனிதாபிமான போர்வையின் கீழ் அடைய முயற்சிக்கிறார்கள். ஆளும் கட்சி இதனை மனிதாபிமான கோரிக்கைகளுக்கானது என்று கூறுவதை விசாரணைக்கு உட்படுத்தினால், அது அவர்களின் வெறுமையை மட்டுமல்ல, நமது அரசமைப்புச்சட்ட ரீதியான ஜனநாயகத்திற்குப் பகையாக உள்ள பல்வேறு குறிக்கோள்களையும் வெளிப்படுத்திடும்.

இந்த சட்டமியற்றலின் முக்கியமான குறிக்கோள், மதரீதியான தாக்குதலால் பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த இந்துக்கள்/ சீக்கியர்கள்/ கிறித்தவர்கள்/புத்தமதத்தினர்/சமணர்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்குவதாகும். இதனை மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு வலிநிவாரணியாக தோற்றமளித்து பாராட்டுக்குரியது போலத் தெரியும். எனினும் அண்டைநாடுகளிலிருந்து விலக்கப்பட்ட சில சமூகத்தினர் குறித்த பல்வேறு கேள்விகள் இதன் அறநெறிப் பகுத்தறியும் தன்மையையும்,  அரசமைப்புச் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் தன்மையையும் முன்வைக்கின்றன. இந்த மூன்று அண்டை நாடுகளையும் தேர்ந்தெடுத்ததற்குக் கொடுக்கப்பட்ட தர்க்கரீதியான விளக்கம் என்னவென்றால், இவை இஸ்லாமியக் குடியரசுகள் அல்லது இந்நாட்டின் அரசின் மதமாக இஸ்லாம் உள்ளது என்பதாகும். எனவே மேலே குறிப்பிடப்பட்ட ஆறு சமூகங்களும் மதரீதியான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதே தர்க்கத்தின்படி பார்த்தால், இலங்கை மற்றும் பூடானிலிருந்து வந்த புலம்பெயர்ந்தவர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் இந்த நாடுகளின் அரசின் மதம் புத்தம். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த பலர் (இந்துக்களும், முஸ்லிம்களும் உட்பட) இந்தியாவில் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் பேரினவாதக்குழுக்களால் அங்குள்ள சிறுபான்மையினர் தாக்கப்பட்டுள்ளனர். எனினும், பாரபட்சமான வெளிப்படையாகத் தெரியும்படி இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அகமதியாசாண்ட் ஹசாரஸ் என்ற சிறுபான்மையின முஸ்லிம் பிரிவினரும், மியான்மரின் ரொஹிஞ்சியா முஸ்லிம் பிரிவினரும் தாக்கப்படுவதை அங்கீகரிக்க அரசு மறுத்துவிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14ஆம் பிரிவு, அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்று கூறி சமத்துவத்தை உயர்த்திப்பிடிக்கிறது. இத்தகைய அமைப்பின் கீழ் செயல்படும் நாட்டில் மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்குவது தகுமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆதரவாக நிற்பது என்று கூறிக்கொண்டு பாரபட்சமான முறையில் செயல்பட முடியுமா? அங்குதான் இந்தச் சட்டத்தின் ஒருதலைபட்சமான முடிவு வேண்டுமென்றே எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. மதரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து அது குறிப்பிடவில்லை. அத்தகைய துன்புறுத்தல் குறித்து சரியான மதிப்பீடு எதுவும் இடம்பெறவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மீதான அக்கறைதான் இவர்களின் குறிக்கோள் என்றால் - இந்தப் பட்டியலில் உள்ளிடப்பட்ட சமூகத்தினர் உட்பட, இவர்கள் எதனைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்? பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரையா அல்லது பாதிக்கப்பட்ட சமூகத்தினரையா? இத்தகைய அணுகுமுறை மத ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட நாத்திகர்களையும், கடவுள் மறுப்பாளர்களையும் உள்ளடக்கியிருக்கவேண்டும். மற்ற விதமான துன்புறுத்தல்களையும் சேர்த்திருக்க வேண்டும். இதனை நிர்வாக வழிகள் மூலமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலமோ செய்திருக்கலாம். இதற்கெனத் தனிச்சட்டம் தேவை இல்லை. இத்தகு முறையில் இந்த பாரபட்சமான சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து என்னவிதமான உண்மை வெளிப்படுகிறது என்றால், அண்டை நாடுகளில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் மீதான அக்கறை அல்ல, மாறாக இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தாக்கும் கருத்தியல் ரீதியான உறுதிதான் இதில் தெரிகிறது. தேசியக் குடிமக்கள் பதிவேட்டிலிருந்து, குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவைப் பிரித்துப் பார்க்க முடியாது. தேசியக் குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதும் நிறைவேற்ற வேண்டும் என்று ஆளும் கட்சி முயற்சிக்கிறது. ஆளும் கட்சித் தலைவர்களின் கருத்துப்படி, தேசியக் குடிமக்கள் பதிவேடும் குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவும் இரட்டைத் திட்டங்கள். அஸ்ஸாம் அல்லது வட கிழக்கு மாநிலப் பிரதேசங்களில் பல்வேறு பூர்விகத்தினருக்கு பல்வேறுவிதமான விளைவுகளை இத்திட்டங்கள் ஏற்படுத்தும். குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவில் உள்ளடக்கிய சமூகங்களுடன் ஆளும்கட்சி பேச்சுவார்த்தை நடத்தியதுபோல் தெரிகிறது. அவர்களைத் தேசியக் குடிமக்கள் பதிவேட்டிலிருந்து விலக்கியிருந்தாலும், வேறு வழியில் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படலாம். இந்த உத்தரவாதத்தின் மேல் உள்ள சட்ட ரீதியான நெகிழ்வுத்தன்மையை கருத்தில்கொள்ளவில்லை என்றாலும் அதில் உள்ள குறைகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. இன ரீதியான, மத ரீதியான அடிப்படையில் சில சமூகங்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மற்றொரு புறம், குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவில் விலக்கு அளிக்கப்பட்ட சமூகங்களுக்கான தகவல் என்னவென்றால், அவர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்தும் விலக்கப்படுவார்கள். அதி தீவிரமான ஸ்திரமற்ற தன்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையில் வாழ்வதற்கு அவர்கள் சபிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்களை உண்மையில் இரண்டாம் தர குடிமக்கள் அந்தஸ்திற்கு முதலில் தள்ளிவிட்டு, பின்னர் அவர்களை சட்ட ரீதியாகவே நாடில்லாதவர்களாகவும், சட்ட ரீதியான குடியுரிமை இல்லாதவர்களாகவும் மாற்றுவதே இதன் நோக்கம். பிறரை இலக்காக வைத்து, அவர்களைத் தனித்துப்போக வைத்து, பெரும்பான்மை சமூகத்தினரை ஸ்திரமாக்கும் முயற்சியில் ஆளும் கட்சியின் குறுகிய கணக்கீடுகளும் பிரிவினைவாதமும், பல்வேறு வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த நமது சமூகம் போன்ற ஓர் அமைப்பில், பல்வேறு தவறான நிலைப்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன. வெற்றிகரமான சாமர்த்தியங்கள் மூலம் இந்த முரண்பாடுகளை சமாளித்துவிடலாம் என்ற பாஜகவின் அசாத்திய நம்பிக்கை ஏற்கெனவே செல்லரித்துக் கொண்டிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவிற்கு எதிரான போராட்டங்கள் அஸ்ஸாமில் வெடித்துள்ளன. பல்வேறு விதமான வேற்றுமைகள், ஏற்றத்தாழ்வுகள், முரண்பாடுகள் என பலவகைப்பட்ட கூர்மையான அம்சங்கள் நிறைந்த நமது சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பிறரைத் திருப்பிவிடும் முயற்சி நிலையானதாகவோ நீடிக்கக்கூடியதாகவோ இருக்கமுடியாது. இதனை ஆய்வுக்கூட சோதனைகள் மூலம் கட்டுப்படுத்திவிட முடியாது. ஆனால் சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் குலைக்கும் பிரிவினைவாத மனப்போக்குகளை இது கட்டவிழ்த்து விடலாம். இதனை பெரும்பான்மையான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் விரும்புவதில்லை. இந்த உலை கொதித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆளும் கட்சியின் திட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆளும் கட்சி, தனது பிரிவினைவாத நிகழ்ச்சிநிரலைத் தள்ளுவதற்குப் பெரும்பான்மை இந்துக்களின் நன்மைக்காகவே செயல்படுகிறோம் என்று கூறுகிறது. ஆனால் இவர்களுள் பலர் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. தற்போதைய சட்டமுன்வடிவு, அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கிறது என்று காணவேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. இந்த விழுமியங்களைக் காக்க எழுந்து நின்று உரத்துக் குரல் கொடுக்க வேண்டியுள்ளது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Using ordinance to protect freedom of expression from foul speech may result in damaging decent communication.

Only an empowered regulator can help boost production and cut coal imports.

Biden’s policy of the “return to the normal” would be inadequate to decisively defeat Trumpism.

*/ */

Only a generous award by the Fifteenth Finance Commission can restore fiscal balance.

*/ */

The assessment of the new military alliance should be informed by its implications for Indian armed forces.

The fiscal stimulus is too little to have any major impact on the economy.

The new alliance is reconfigured around the prospect of democratic politics, but its realisation may face challenges.

A damning critique does not allow India to remain self-complacent on the economic and health fronts.

 

The dignity of public institutions depends on the practice of constitutional ideals.

The NDA government’s record in controlling hunger is dismal despite rising stocks of cereal.

 

Back to Top