ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

உயர்கல்வி வாய்ப்பின் செலவினம்

.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

கல்விக்கான வாய்ப்புகள், அதிலும் குறிப்பாக உயர்கல்விக்கான வாய்ப்புகள், பல்கலைக் கழகங்களின் வாழ்க்கையில் மாணவர்களை உலகளாவியமுறையில் ஈர்க்கத்தொடங்கியிருப்பதை அடுத்து, விரிவாகிக் கொண்டிருக்கிறது. இத்தகைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்தும் மாணவர்கள் இப்போது உயர் கல்வியைக் கற்க உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் சேர்ந்து, தொடர முடிகிறது. அதேபோன்று, நம் நாட்டிற்குள்ளும் தனியார் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டிருப்பதையும் தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு புதிய பாடத்திட்டங்களைப் போதிப்பதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. உயர்கல்வியில் வாய்ப்புகள் விரிவடைந்திருக்கும் அதே சமயத்தில், அது  பலரது கல்வி வாய்ப்பைப் பறித்திடுவதற்கான நிலைமைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனினும்,  உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி பலரை அவற்றிலிருந்து வெளியேற்றுவதற்கு இட்டுச் சென்றுள்ளது என்பது உலகளாவிய அனுபவமாக இருந்து வருகிறது.  மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களின் கல்வி அபிலாசைகள் வீழ்ந்திருப்பதன் விளைவாக, சமூக ஏற்றத்தாழ்வும் அதிகரித்திருக்கிறது. தனியார் பல்கலைக்கழகங்கள் மூலமாக பயிற்றுவிக்கப்படும் உயர் கல்விப் பாடத்திட்டங்களைப் பயின்றிட அதிக செலவு பிடிப்பதால் அதனைச் செய்திடக்கூடிய வல்லமை படைத்தவர்களாலேயே நிச்சயமாக இதனைத் தொடர முடியும். தனியார் பல்கலைக் கழகங்கள் மூலமாக உயர் கல்வி பயில்வதற்கு அதிகசெலவு பிடிக்கும் என்று குறிப்பிடவேண்டிய தேவை இல்லை.

இந்தியாவில்,  பொதுப் பல்கலைக் கழகங்கள் உயர்கல்விக்கான வாய்ப்பு வாசலைப் பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு அளிப்பதை ஊக்குவித்து, அதன் மூலம், உயர்கல்வியில் வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்டுள்ள சாய்மானங்களை சமன்செய்கிறது என்று கூறலாம். இவ்வாறு, பொதுப் பல்கலைக் கழகங்களில் மான்யத்துடனான கல்விக் கட்டண அமைப்பு இத்தகைய உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கு இத்தகைய மாணவர்களுக்கு மிகவும் முக்கியமாக அமைந்துள்ள நிபந்தனைகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. இத்தகைய கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவு, குறிப்பாக விளிம்புநிலைப் பின்னணியிலிருந்து வந்துள்ள மாணவர்களுக்கு, கிடைத்திட்ட வாய்ப்பை ஒரு சொத்தாக மாற்றுவதற்கான அறநெறிப் பொறுப்பையும் கூடுதலாக அளித்திருக்கிறது.  இத்தகு மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஆசாபாசங்களைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், உயர்கல்வி நிலையங்களில் நுழைந்திருப்பதை, ஓர் ஆக்கபூர்வமான சிந்தனை வளத்துடன் வாழ்வதற்கான உறுதியை அளிக்கும் விதத்தில் அமைத்துக்கொள்வதற்கான பொறுப்பையும் மிகவும் ஆழமான உணர்வுடன் வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய ஆழமான உணர்வுதான், உயர்கல்வியை ஒரு மனதிற்கினிய வாழ்க்கையை உறுதிப்படுத்திடுவதற்கான வாய்ப்பை அளிக்கக்கூடிய விதத்தில் அமைத்திட முடியும். பத்தாம்பசலித்தனமான சிந்தனைகளின் செல்வாக்குத் தன்னைக் கட்டிப்போடுவதை மறுப்பதற்கான மனதை அளித்திட முடியும்.

இவ்வாறு, மனதிற்கினிய வாழ்க்கை உறுதிப்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதத்தில், குறிப்பாக கல்விக் கட்டணங்களை உயர்த்துவது என்பது, இத்தகைய ஆக்கபூர்வமான மனதிற்கினிய வாழ்க்கை வாழ்வதை மறுப்பதற்கு இட்டுச் செல்லும். ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து வரும் மாணவர்கள், உயர்கல்வி கற்றிட சமூகத்தின் லட்சியம் மற்றும் கல்வி உதவிப் பணத்துடன் தங்களுக்குக் கிடைத்த உயர்கல்வி வாய்ப்பை ஒரு சொத்தாக மாற்றுவதற்கான அறநெறிப் பொறுப்பை இல்லாததாகச் செய்வதை ஏற்க முடியாது என்று கூறத் தேவையில்லை.

தங்களுடைய இயல்பான மாற்றத்தினை எய்துவதற்கான ஒரு வாய்ப்பாக கல்விக் கட்டணங்கள் தங்களால் செலுத்தக்கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும் என்று இவர்கள் பார்க்கிறார்கள்.  கல்விக் கட்டணங்கள் தங்களால் செலுத்தப்படக்கூடிய விதத்தில் குறைவாக இருந்திட வேண்டும் என்று கூறுவது ஓர் ஆரம்ப அல்லது அவசியமான ஒன்று எனக் கூறும் அதே சமயத்தில், இதுவே போதுமான நிபந்தனை என்று கூறவும் முடியாது போகலாம். இது, ஒருவரை முழுமையான மாணவராக மாற்றுவதற்கு இட்டுச்செல்ல முடியாது போகலாம். ஒரு மாணவர், முழுமையான மாணவராக மாறுவதென்பது, அவர் தன்னுடைய அறிவுபூர்வமான வல்லமையையும், அறிவுசார் திறமையையும் வளர்த்துக்கொள்ளும் திறனையே சார்ந்திருக்கிறது. எனினும், பல்கலைக் கழக வளாகங்கள் சிலவற்றில் காணப்படும் கல்விச் சூழல் என்பது மாணவர்களின் ஒருசில பிரிவினரை தங்கள் மன வல்லமையை சுதந்திரமாக வளர்த்துக்கொள்ளவும், தங்களுடைய வாதத் திறமைகளை நன்கு வளர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கவில்லை.   இதற்கு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு மிடையே பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாற்றிக்கொள்ளும் போக்கு இல்லாமையே காரணமாகும். இத்தகைய ஆரோக்கியமான பரஸ்பரத்தன்மை இல்லாததே, மாணவர்கள் மத்தியில் அறிவுக்கூர்மையை வளர்த்துக்கொள்வதற்கான அறிவார்ந்த போக்கு இல்லாததைக் காட்டுகிறது. இத்தகைய மாணவர்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். அவை இவர்களை கல்வி நிறுவனங்களிலிருந்து வெளியேறவும் நிர்ப்பந்திக்கின்றன. இவ்வாறு மிகவும் கொடூரமான வடிவங்களில் சமத்துவமின்மை நிலவுவதற்கு, தலித்/பழங்குடியின மாணவர்களின் அனுபவம், குறிப்பாக, சட்டக் கல்லூரிகளிலும், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களிலும் (IITs), இந்திய மேலாண்மைக் கழகங்களிலும் (IIMs), மிகவும் சரியான எடுத்துக்காட்டுகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. இளம் ஆராய்ச்சி மாணவர்களின் திறமைகளைப் பாராட்டும் தன்மை இல்லாததன் விளைவாக, அவர்களில் சிலர் தங்களை வாழ்க்கையையே முடித்துக் கொள்ளக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  ஒதுக்கிவைப்பது என்பது சமத்துவமின்மையின் மிகவும் தீவிரமான வடிவமாகும். தீவிரமானது என்று சொல்வதற்குக் காரணம், இயல்பாகவே இது கொடூரமானமுறையில் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது. 

அலட்சியப்படுத்தப்படுதலின் கடுமையான சூழ்நிலையில், அங்கே பயிலும் மாணவர்கள் சாதியரீதியாகவும், இனவாரியாகவும் குழுக்களை அமைத்துக் கொண்டிருப்பதை ஒருவர் பார்க்க முடியும். அறிவை விருத்திசெய்ய வேண்டிய இடமாக, பல்கலைக் கழகங்கள், மாணவர்களுக்கு தங்களுடைய சாதி மற்றும் இன ஒடுக்குமுறைகளிலிருந்து விடுவிப்பதற்கான வாய்ப்புகளை அளித்திட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில் அறிவை விருத்திசெய்யும் முறையாக, தத்துவார்த்த ரீதியிலான விவாதங்கள்தான் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை மாணவர்களை தங்கள் பார்வையை விரிவாக்கிக் கொள்வதற்கு உதவிடும். இத்தகைய பார்வை, உயர் சாதி அமைப்பு மாணவர்களின் லட்சியக் கட்டமைப்புகளில் உள்ளீடாகவே அமைந்திருக்கின்றன.    தலித்/பழங்குடியின மாணவர்கள் இவர்களுடன் இணையக்கூடிய விதத்தில் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியவில்லை. இதன்காரணமாக இவர்கள் அம்மாணவர்களுடன் இணைய முடியாமல் தாங்களாகவே வெளித்தள்ளப்படக்கூடிய நிலை ஏற்படுகிறது. அவர்கள், அனைத்து நடைமுறைக் காரணங்களுக்காகவும், தலித் மாணவர்களாகவே இருக்க வேண்டியதிருக்கிறது. இதன் காரணமாக இவர்கள் பின்னர் தங்களைத் திருத்திக்கொள்வதற்கான வகுப்புகளில் பங்கெடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இவர்களுக்கான சிறப்புச் சிகிச்சை ஒருவித கறையுடனேயே வருகிறது. இத்தகைய மாணவர்கள் இத்தகைய சிறப்புச்சிகிச்சையின் மூலமாக நன்கு வெளிப்படுத்தப் படுவதில்லை. ஒரு கட்டத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு என்பது பல்கலைக்கழக கட்டண அமைப்புடன் சம்பந்தப்பட்ட அரசியல் பொருளாதாரம் என்னும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. மற்றொரு கட்டத்தில், மேலும் இது ஓர் ஆழமான அறநெறி ஒழுங்குப் பிரச்சனையாகவும் உருவெடுத்திருக்கிறது.

    

Back to Top