ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தவறான நியாயத்தை கோருதல்

சமூகம் தங்கள் பெண்களை நம்புவதற்கு முன்பு, ஒரு கோரமான குற்றத்திற்காக ஏன் காத்திருக்க வேண்டும்?

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ஒரு கோரமான சம்பவம் நிகழும் வரை நாம் அனைவரும் வழிபோக்கர்கள்தான். பின்னர், ஒரே இரவில் நீதிக்காகப் போராடும் போராளிகளாக நாம் மாறுகிறோம். நமது அவசரத்தில், இத்தகைய கோர சம்பவங்களுக்கு எதிராக நம் குரலை எவ்வளவு உரக்க ஒலிக்க முடியுமோ அவ்வளவு உரக்க ஒலிக்கிறோம். நமது சுய நேர்மையான கோபத்தில் நாம் மூழ்கடிக்கும் சில குரல்களை நாம் மறந்துவிடுகிறோம். ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தேசத்தை உலுக்கியது. 2012ஆம் ஆண்டு தில்லியில் ஏற்பட்ட ஜோதி சிங் வழக்கிற்குப் பிறகு இத்தகைய சம்பவங்கள் நிகழவில்லை. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலிஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார்கள். இதன் விவரங்கள் இனி வெளியிடப்படும்.

அப்போதைக்கும் இப்போதைக்கும் இடையில் உள்ள காலத்தில், 2013ஆம் ஆண்டு குற்றவியல் (திருத்தச்) சட்டம் அல்லது நிர்பயா சட்டம் நிறைவேற்றப்பட்டது. போலீஸ் ஹெல்ப்லைன்கள் அமைக்கப்பட்டன. பாலியல் துன்புறுத்தல்களுக்குப் பிறகு நிவாரணம் கோருவதற்கான சட்ட முறைமையை விரைவாக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை நீதியரசர் வர்மா குழு பரிந்துரைத்தது. எனினும் 2012ஆம் ஆண்டுக்கும் தற்போதைய காலத்திற்கும் இடையில் பல்வேறு பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் நடந்த இடங்களின் பெயர்கள் நமது மனசாட்சியை பாதிக்கும் மைல்கற்களைப் போல் மனதில் பதிந்துள்ளன. தில்லி, உன்னாவோ, கதுவா மற்றும் தற்போது ஹைதராபாத். ஆனால் கொலை புரியும் பாலியல் வன்புணர்வாளர்கள் மீது

மீது மட்டும் நமது கோபம் பல்வேறு கொடூரமான வழிகளில் பாய்கிறது. வன்புணர்வாளர்கள் நமது மனசாட்சியை உலுக்கும் அளவிற்கு கொலை புரிய வேண்டும், தீவிரமான கண்டனத்திற்கு உட்படும் வகையில் குற்றம் புரிய வேண்டும என்று நமது பொது புத்தியில் ஒரு கோடு இடப்பட்டுள்ளது. இந்தக் கோட்டைத் தாண்டும் வரை, பல்வேறு  நொண்டி சாக்குப்போக்குகளை நாம் விரைவில் கண்டறிவோம். இந்தக் கோட்டைத் தாண்டினால்தான், நாம் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவோம்.

இதனால் கட்டமைக்கப்படும் பொய்களை மறைக்க எந்தப் பாதுகாப்பு அமைப்பும் இல்லை. சமூக ஊடகங்கள், பொது ஊடகங்கள் மற்றும் பொது வெளி என்று எந்த ஊடகத்தில் இது குறித்து பேசப்படுகிறதோ, இதுபேசப்படும் மொழியானது இந்த சம்பவங்கள் சமூக திரிபாக நடப்பதாக கவனம் செலுத்துகின்றன. இந்த சம்பவங்களை உணர்வுபூர்வமாக்குவது பொதுமக்களின் ஆபாச போக்குகளுக்கு உணவளிப்பதுபோல் உள்ளது. இந்த சம்பவங்கள் உருவாக்கும் பத்திரிகை பக்கங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் டிஆர்பி ரேட்டிங் எனப்படும் இலக்கு விகித புள்ளிகள் மூலம் பலன் பெறும் ஒரு வணிக ரீதியான ஊடக அமைப்பிற்கு உதவுகின்றன. வன்புணர்வுக் கலாச்சாரத்தை இது ஊக்குவிக்கிறது. இந்த குற்றங்கள் நடைபெற உதவும் ஆணாதிக்க ஒருதலைப்பட்ச மனப்பான்மையையும் இது வளர்க்கிறது. ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக தனிநபர்கள் மீது குற்றம் சுமத்துவதிலேயே குறியாக உள்ளது.

ரெட்டியின் எரிக்கப்பட்ட உடல் கிடைத்ததால், திரை பிரபலங்களிலிருந்து அரசியல்வாதிகள் வரை, அனைவரும் தங்கள் அதிர்ச்சியையும் துக்கத்தையும் விரைவாக வெளிப்படுத்தினர். ரெட்டி தனது தங்கையை தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்குப் பதிலாக காவல்துறையைத் தொடர்பு கொண்டிருந்தால் அவள் தன்னை காப்பாற்றியிருக்கக்கூடும் என்று தெலுங்கானா உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். பாலியல் முறைகேடு என்ற பிரச்சனையின் உண்மையான மையத்தைப் புரிந்துகொள்ளாத கூருணர்வற்ற தன்மையையே இத்தகைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “தன்னைக் காப்பாற்றிக்கொள்ளாததற்கான” குற்றம் மீண்டும் அந்த பெண்ணின் மீதே திணிக்கப்படுகிறது. இந்த நான்கு நபர்களும் கைதுசெய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டாலும், இவர்களுள் ஒருவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை வலதுசாரிகள் சுட்டிக்காட்டி அந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தினார்கள். இத்தகைய சம்பவங்களை வேறுவிதமாக சித்தரிப்பது பெண்களின் குரல்களை மௌனமாக்குகிறது. இவை அனைத்தையும் செய்வது வெற்றுக் கவர்ச்சிக்காகத்தான்.

இந்தக் குற்றவாளிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்பதுதான் நீதிக்கான உரத்த குரலாக இருந்தது. மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்று வாதாடியவர்களுள் தில்லி மகளிர் ஆணைய தலைவரும் ஒருவர். இத்தகைய சம்பவம் நடக்கும்போதெல்லாம், மரண தண்டனை விதிக்கப்படுவது இந்தக் குற்றங்களைத் தடுக்கும் என்று அவர்கள் வாதாடுகிறார்கள். கொடூரமான பாலியல் வன்புணர்வுக் குற்றங்களை நிகழ்த்தியவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று கோருவது, நம் மீதுள்ள குற்றத்தை மீண்டும் மறுப்பதற்குச் சமமாகும். ஏனெனில், சட்ட ரீதியாக சொல்வதென்றால், அரிதிலும் அரிதான பாலியல் வன்புணர்வு வழக்குகளிலேயே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். பாலியல் வன்புணர்வு குற்றங்களில், எவற்றிற்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும், எவற்றிற்கு மரண தண்டனைவிதிக்கக்கூடாது என்று எவ்வாறு வகைப்படுத்துவது? வன்புணர்வாளர்கள் எந்த எல்லையைத் தாண்டக்கூடாது என்ற கோட்டிற்கு நாம் மீண்டும் செல்ல வேண்டும். வன்புணர்வோ, பாலியல் முறைகேடோ, ஓர் எல்லைக்குள் இருக்கும் வரை நமக்குப் பிரச்சனையில்லை என்று ஒரு சமூகமாக நாம் உண்மையில் கருதுகிறோம். மக்களை மனிதர்களாக கருதாமல் இருக்கும் வசதியைத்தான் மரண தண்டனைக்கான குரல்கள் குறிப்பிடுகின்றன. அவர்களை காட்டுமிராண்டிகள் என்று கூறுவதால், நாம் அவர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறோம். ஆனால் அதே சமயம் நாம் செய்யும் தவறு என்ன என்ற பொறுப்புணர்விலிருந்தும் நாம்விடுபடுகிறோம்.

இந்த பிரச்சனையின் மையக்கருத்து கலாச்சார ரீதியானது. இது நமது முடுக்கப்பட்ட பாலியல் சார்ந்த உறவுகளில் பதிந்துள்ளது. இது நமக்கு சில காலமாகத் தெரியும். பல ஆண்டுகளாக பெண்ணியவாதிகள் இதற்காகப் போராடியுள்ளார்கள். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கூக்குரல் எழுப்பியுள்ளார்கள். இருப்பினும் நமது கோபம் உண்மையை அறிய தவறுகிறது. இவ்வாறு ஒரு சம்பவம் நடக்கும்போதெல்லாம், சட்டங்கள், போராட்டங்கள் இவைகள் இருக்கும்போதும், உண்மையில் தேவைப்படுவது ஆணாதிக்கக் கட்டமைப்பை உடைப்பதுதான். பல்வேறு எண்ணக்குவியல்களின் கீழ் மறைக்கப்படும் பல்வேறு விதமான பாலியல் சீண்டல்களை அன்றாடம் கண்டறிந்து சரிசெய்ய வேண்டியது அவசியம். இத்தகைய எண்ணங்களை உருவாக்குபவர்கள் பெரும்பாலும் பாலியல் இராட்சசர்களிடமிருந்துத் தங்களை வேறுபடுத்திக்கொள்ள விரும்பும் ஆண்கள்தான். இவ்வாறு செய்வதால், ஒரு சமூகமாக நாம் தோற்றுப்போகிறோம். ஒவ்வொரு சம்பவத்தின்போதும் நாம் கோபத்தையும் வன்முறையையும் வெளிப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒரு விதமான அநீதி இழைக்கும் சிறுசிறு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை நாம் புறக்கணிப்பதால்தான் வெட்கமில்லாமல் பல ஆண்கள் இத்தகைய கோர குற்றங்களைப் புரிகிறார்கள். ‘#மீடூ’ போன்ற இயக்கங்களை விரைவாக நாம் புறக்கணிக்கிறோம். ஏனெனில் ஒரு பெண்ணை நம்புவதற்கு சமூகம் மறுக்கிறது. ஒரு பிணத்தை சாட்சியாகக் காண்பித்தால்தான் அந்த பெண்ணிற்காகப் பேசுவதற்கு சமூகம் தயாராக இருக்கிறது.

பாலியல் முறைகேட்டை ஒரு பாதுகாப்பு விவகாரமாக நாம் கருதுகிறோம். தங்களைக் காத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பை பெண்கள் மீதே நாம் திணிக்கிறோம். தற்போது கூறப்படும் அனைத்து கருத்துக்களும் ஏற்கெனவே சொல்லப்பட்டவைதான். எனவே இங்கு புதிதாக சொல்லப்படுவதற்கு எதுவும் இல்லை. யார் கேட்க வேண்டுமோ அவர்களிடம்தான் பிரச்சனை உள்ளது. எவ்வளவு உரக்கப் பேசினாலும் அவர்கள் கேட்பதே இல்லை.

 

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top