ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தேர்தல் பத்திரங்களும் வெளிப்படைத்தன்மையும்

[இந்தியாவின் தேர்தல் அமைப்பில் வெளிப்படைத்தன்மை பொறுப்பை வளர்க்குமா?

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தேர்தல் பத்திரங்களின் தீவிரம் குறித்த கூக்குரல் தற்போது ஏன் புதுப்பிக்கப்பட்டுள்ளது? ஆளும் கட்சி நிறைவேற்றிய பல்வேறு சட்ட நடவடிக்கைகளின் முதுகில் ஏறி இந்த சாதனம் பயணிக்கும் என்பது நமக்குத் தெரியாதா? 2017ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி மத்தியச் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தை நினைவுகூருங்கள். இதில் மோசடி கம்பெனிக்கள் மூலம் பணச்சலவைக்கு வழிவகுக்கும் சட்ட திருத்தங்கள் நிதிச் சட்டங்களில் உண்டு என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சட்ட விதிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தேர்தல் விதிக்கான சட்டங்களை நிதிச் சட்டமுன்வடிவின் மூலம் தீர்ப்பது குறித்து தில்லியை அடிப்படையாக வைத்து இயங்கும் இரண்டு குடிமைச் சமூக நிறுவனங்கள் விவாதித்து வருகின்றன. இவைகள் 2017ஆம் ஆண்டு இது குறித்து பல பொதுநல வழக்குகள் தொடுத்துள்ளன. இத்தகைய சட்டரீதியான நடவடிக்கைகள், நிர்வாகத்திற்கான உச்சகட்ட நிறுவனத்தின் அலுவல் ரீதியான கௌரவம் மற்றும் அரசமைப்புச் சட்ட புனிதத்தை கீழே தள்ளி மிதிக்கும் என்பது நாம் அறியாததா?

எல்லாவிதமான பரவலான அவநம்பிக்கைகளுக்கும் மத்தியில், தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. “அரசியல் நிதி அமைப்பு குறித்த வெளிப்படைத்தன்மை”, “சுத்தமான பணம்”, “கொடையாளரின் பெயர் தெரியாமை” என்ற ஆளும் கட்சியின் வார்த்தை ஜாலங்களின் ஆதரவுடன் இவை நடைமுறைக்கு வந்துவிட்டன. இந்த வார்த்தை ஜாலத்திற்கு பலம் அளித்தது என்ன? இந்தக் கோரிக்கைகள் தர்க்க ரீதியாகத் தரமற்றவை என்று உரைக்கக்கூடிய வாசகங்கள் பொருத்தமற்றதாக இருந்தது எவ்வாறு? வெளிப்படைத்தன்மை என்பது எளிதாகக் காணக்கூடியது. அப்படியென்றால் அதனை இரகசிய காப்புத்தன்மை, பெயர் தெரியாமை, மனிதர்களுக்கு தொடர்பற்றது என்று கூறுவதுடன் பொருத்தமில்லை. மேலும் ஊழல்–சந்தை போன்ற பரிமாற்றங்களினாலோ அல்லது அதிகாரிகள் மற்றும் தனிநபர் முகவர்களுக்கு இடையிலான சமூக வலைப்பின்னல்களின் மேல் நிபந்தனையாக இருப்பதாலோ வெளிப்படைத்தன்மை அல்லது குழப்பம் என்ற நிலையில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், பெயர் தெரியாமை என்பதுடன் இது ஒத்துப்போகிறது. கறுப்பு பணத்தை ஒழிப்பது என்பது நழுவும் தன்மையுடன் உள்ளது.

அரசின் ஆதாரங்கள் பயனற்றவையாக உள்ளதால், சரியான சாட்சியங்கள் இல்லாதது பொதுப் பார்வையை மாற்றுகிறது. ஹஃப்போஸ்ட்டு தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் பத்திரங்கள் குறித்த புலனாய்வு தொடர் உண்மையில் சிக்கலை உடைப்பதாக உள்ளது. இந்த நிதி சாதனம் குறித்து பொதுக்கருத்தில் உள்ள அவநம்பிக்கைக்கு கணித ரீதியான சான்றை இந்த அறிக்கைகள் அளித்துள்ளன. இருப்பினும் ஒரு முக்கியமான கேள்வி தொடர்கிறது. நியாயமான போட்டி என்ற ஜனநாயகக் கருத்தியல்களை சிதைப்பதாக தற்போதைய அரசைக் குற்றம் சொல்வதைத் தாண்டி இந்த அரசியல் பேச்சுவார்த்தைகள் வேறு சான்றுகள் எதையாவது கூறுகிறதா? இந்த அக்கறை பல்வேறு காரணங்களுக்கு  முக்கியம்.

முதலாவதாக, இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தின் தன்மை. இங்கு பணம் என்பது, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அரசியல் கருத்தியல்கள் அல்லது/மற்றும் கொள்கை முன்மொழிவுகளுக்கு எதிராக செயல்புரியும் முக்கிய ஆயுதமாக விளங்குகிறது. இதன் விளைவாக, ஊழல்தன்மை கொண்ட அரசியல் நிதியம் சாத்தியம். இத்தகு சூழலில் அரசியல் எதிரிகளுக்கு உள்ள முக்கியமான சவால், நன்கு திருகிவிடப்பட்ட களத்தில் அவர்களது இருத்தலை உறுதி செய்வதுதான். இத்தகு சூழல்களில், எதிர்க்கட்சியின் வித்தியாசமான நுணுக்கமான அரசியல் மொழி எதுவும் நிலைப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.

இரண்டாவதாக, வரலாற்று ரீதியாக, இந்தியாவில் உள்ள தேர்தல் நிதியம். கடந்த கால இரகசிய வருமானங்களை வெளிப்படையாக முதலீடு செய்வதற்காக சிறப்புப் பத்திரங்களை வெளியிட்டதற்கான சான்றுகள் உண்டு. தானாகவே வந்து வெளிப்படுத்தும் திட்டங்கள் என்று பிரபலமாக அறியப்பட்ட இத்திட்டங்கள் கறுப்புப் பணத்தை பொதுப் பெட்டகத்திற்கு கொண்டு வர வழிசெய்தது. வருமானம், செல்வம் மற்றும் பரிசுகள் உள்ளிட்ட வரிகளிலிருந்து எதிர்ப்பு சக்தி பெறுவதற்கான உத்தரவாதத்தை இந்த திட்டங்கள் இயல்பாகவே அளித்தன.

சமீபத்தில்கூட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் தன்னுடைய கார்ப்பரேட் நன்கொடையாளர்களை வெளியே தெரியாமல் மூடிமறைக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் அறக்கட்டளைகளை ஏற்படுத்தியது. கறுப்பு வருமானத்தைப் பெறுபவர்களுக்கு இத்தகைய பாதுகாப்பு அளிக்கப்பட்டதற்கு நிறைய முன்னுதாரங்கள் இருக்கும்போது, தனது தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம் ஊழல் மிகுந்த அரசியல் நிதியத்திற்கு வழிவகுக்கும் என்று தற்போதைய அரசை மட்டும், குறிப்பாக தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலமாக ஊழல்மிக்க வித்த்தில் தேர்தல் நிதியைப் பெறுவது தொடர்பாக,  குறை சொல்வது சிரமம்.

மூன்றாவதாக, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம்  2010ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்பு (முறைப்படுத்தல்) சட்டம்  [Foreign Contribution (Regulation) Act (FCRA) 2010] மூலமாகவும், பின்னர் அதுதொடர்பாக, முறையே 2016ஆம் ஆண்டு மற்றும் 2018ஆம் ஆண்டு  நிதிச் சட்டங்கள் மூலமாக,  1976ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டதன் வாயிலாகவும், வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் அரசியல் நன்கொடைகளை முன்பே வாங்கியிருந்தாலும் செல்லுபடியாகும் என்று ஆளும் அரசு நடவடிக்கை எடுத்து, தன்னுடைய அரசியல் எதிரிகளுக்குக் கூட சற்றே இளைப்பாறலை அளித்தது.  எடுத்துக்காட்டாக, அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் (எதிர்) இந்திய அரசு என்ற வழக்கில், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே வேதாந்தா ரிசோர்சஸ் என்னும் நிறுவனத்திடமிருந்து வெளிநாட்டுப் பங்களிப்புகளைச் சட்டவிரோதமான முறையில் பெற்றன என்று தில்லி உயர் நீதிமன்றம் கண்டறிந்தது. இவ்வாறாக, வெளிநாட்டுப் பங்களிப்பு (முறைப்படுத்தல்) சட்டத்தில் திருத்தங்கள் செய்து, அவர்களைக் காப்பாற்றியிருக்கும்போது, எதிர்க்கட்சிகள் இவ்வாறு திருத்தங்கள் செய்து உதவி செய்த அரசாங்கத்தை மட்டும் எதுவும் கூறாது தவிர்ப்பது ஏன்?

அரசியல்ரீதியாக எதிர்ப்பு இல்லாத சமயத்தில், வஞ்சகமாக மேற்கொள்ளப்பட்ட செயல்குறித்து வலுவாக சாட்சியங்கள் இருந்தாலும்கூட, அவை சரியான பாதையில் செல்வதற்கான இழுப்புசக்தியை இழந்துவிடும். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டவிதம் வெளிச்சத்திற்கு வந்தபோதும் அதைப்பற்றி இந்த அரசாங்கம் அலட்டிக்கொள்ளாதது ஏன் என்பதை இது நன்கு விளக்குகிறது. சாட்சியங்களின் மூலமாக, அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகளைப் பெற்றவர்கள் மற்றும் அதனால் பயனடைந்தவர்கள் யார் என்பவை  தொடர்பான தகவல்களை சிதைப்பதன் மூலம், வெளிப்படைத்தன்மையுடனான தேர்தல் முறையே தகர்க்கப்பட்டிருக்கிறது என்கிற பழியை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்திருக்கலாம் என்று கூறும் அதே சமயத்தில்,  அத்தகைய பழியை ஒப்புக்கொள்வதன் மூலம் உண்மையில் வெட்கப்பட வேண்டியவர்கள் யார் என்பதை ஒருவரின் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம்.   வெளிப்படைத்தன்மை ஒருவரை அவமானப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கும். எனினும் வெட்கமற்ற தன்மை பொதுவெளியில் பாதிக்கப்படுவதைப்பற்றிக் கவலையில்லாது செய்துவிடலாம்.

இந்தியாவில் தேர்தல் முறை வரலாற்று ரீதியாகவே பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்பட்டது. இத்தகைய ஊழலில் ஈடுபடுவதன் மூலமே ஒரு குறிப்பிட்ட அரசு அதன் முந்தையை அரசிடமிருந்து வேறுபட முடியாது. ஏனெனில் அரசியல் பொறுப்புணர்வின் மீது வெளிப்படைத்தன்மையின் விளைவு ஒரு நேர்மறையான எதார்த்தம் கிடையாது. இத்தகைய தோற்றத்தில் காணும்போது, ஆளும் கட்சி ஒரு நீரோட்டத்தையும் தேர்தல் பத்திரங்கள் என்ற குறைகூறும் வெளிப்படைத்தன்மையையும் கடன் கொடுத்திருக்கிறது என்று ஒருவர் காண முடியும். பூஜ்ய வெளிப்படைத்தன்மை அல்லது எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லாமை என்பதற்கு பதிலாக தகவல்கள் ஆக்கபூர்வமான முறையில் வெளியிடப்படுகின்றன. மோசமான வெளிப்படைத்தன்மை நிறுவன ரீதியான பதிலை அளிக்காது. பதில் அளிப்பதால் மட்டும் கடினமான பொறுப்புணர்வை உறுதி செய்ய முடியாது. பொது நிறுவனங்களுக்கு பொறுப்பளிக்க குடிமைப் பணி நிறுவனங்கள் தகவலுக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான ஜனநாயக உரிமைக்கு உந்துதல் அளித்தபோதும், கடினமான பொறுப்புணர்வு என்பது ஒரு அமைப்பு ரீதியான விவகாரம் என்பதை ஒருவர் உணர வேண்டும். வெளிப்படைத்தன்மை என்ற வழியையும் தாண்டி அது செல்கிறது. பொது பொறுப்புணர்வுக்கான நிறுவனங்களுக்கான திறமையை அளித்து, ஆளும் கட்சியின் இயல்பு மற்றும் திறனுக்கான பிரச்சினைகளுக்கு வழி கோலுகிறது. 

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top