ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்

பாரதீய ஜனதா கட்சியின் ஒருமாதிரியான திட்டத்திற்கு மாற்றாக, வித்தியாசமான அரசியல் சோதனைகளுக்கான தேவைகளை உருவாக்கியிருக்கின்றன.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் ஒரு புதிய அரசு உருவாகியுள்ளது. சிவசேனா, தேசியவாதக் காங்கிரஸ் கட்சி, இந்திய தேசியக் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து உருவாகிய அரசு உண்மையிலேயே ஒரு தனித்துவமான சோதனைதான். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளின் தேவையால் இந்தக் கூட்டணி உருவாகியுள்ளது. நுணுக்கமாகக் கூறுவதானால், தேர்தலுக்கு முன்பு உருவாகிய கூட்டணியான பாரதீய ஜனதா கட்சி மற்றும் சிவ சேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. இவர்கள் அரசு அமைத்திருக்கலாம். எனினும், இரண்டு கட்சிகளுக்குமே தெரிந்த சில காரணங்களால் இந்த இரண்டு கட்சிகளாலும் கூட்டணி அமைக்க முடியவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கும் முத்தரப்பு கூட்டணி முன்னெப்போதும் இல்லாதது. ஏனெனில் இதுவரை அரசியல் எதிரிகளாகக் கருதப்பட்டவர்கள் இணைந்து இந்தக் கூட்டணி உருவாகியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சியின் ஆதிக்கப்போக்கிற்கும் அதன் ஒருமாதிரியான போக்கிற்குப் பதிலடியாக இந்தக் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த வளர்ச்சியை வெறும் சந்தர்ப்பவாதம் என்று கருதுவதும் இதன் கருத்தியலை மண்டியிட வைத்து தடம் மாறிய அரசியல் என்ற பார்வையில் அணுகுவதும் இப்போதைய அரசியல் சூழ்நிலையைக் கடந்து பார்வையிடுவதாகும். இத்தகைய கருத்தை வெளியிட்டவர்களில் ஒரு சிலருக்கு இருக்கும் அக்கறைகளும் ஐயப்பாடுகளும் உண்மை என்று ஒப்புக்கொண்டாலும், துடிப்பான அரசியலுக்கு செயல்படக்கூடிய மாற்றுக்கள் தேவை என்பதை ஒருவர் குறித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அங்கு எப்போதுமே வெற்றிடம் கிடையாது. இத்தகைய செயல்பாட்டு மாற்றுக் கூட்டணியை உருவாக்கவில்லை என்றால், மற்ற சக்திகள் அந்த வெளியை ஆக்கிரமிக்கும். இந்த வழக்கில் பாரதீய ஜனதா கட்சி அந்த இடத்தை ஆக்கிரமிக்கும். இத்தகைய வெளிப்பாடானது அரசியல் மற்றும் சமூக ரீதியாக வரவேற்கப்படவில்லை. இதில் தொடர்புடைய மூன்று கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு பாதிக்கப்பட்ட பிரிவினருக்கும் இதில் விருப்பமில்லை. இத்தகைய தந்திரமான கூட்டணிக்கு இது போதுமான நியாயத்தை அளிக்கிறது.

தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் செயல்தந்திரத்தின்படி, தேர்தல் முடிவுக்குப் பின் ஏற்பட்ட சூழலில் கூட்டணித் தலைவர்கள், ஒதுங்கிக் கொள்ளும் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் ஒருங்கிணையும் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். தற்போதுள்ள ஆளும் கட்சி இத்தகைய அரசியல் சூழ்நிலையை எவ்வளவு திறமையாகக் கையாளும் என்பதைக் கருத்தில்கொள்ளும்போது, இத்தகைய கூட்டணிதான் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். இதுவரை ஒரு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை ஒரு விதமான மிதவாதத்தன்மையையும் இறுக்கத்தையும் குறித்தது. எனவே, இதற்கான அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்லது விவாதத்திற்கான விதிமுறைகள் ஆகியவற்றை அமைக்க முடியவில்லை. அந்த வெளியை ஆளும் கட்சிக்கு அவை அளித்தன. ஒரு வேளை பவாரின் ஆலோசனையின் பேரில், அந்தக் கட்சி இந்தப் பாதையை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒரு பெரிய அரசியல் இலக்கை உணர்வதற்கு இந்த சிறிய பங்கினை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பாரதீய ஜனதா கட்சியின் அணுகுமுறையின் இறுக்கம் அதன் ஒருமித்த, ஒருமுக போக்குகளை நிலைநிறுத்தும் சூழலில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இத்தகு சூழலில் காங்கிரஸ் கட்சி ஒரு முக்கியமான துடிப்பான பங்கினை ஊகித்து, ஆளும் கட்சியின் ஆதிக்கத்திற்கு எதிரான கூட்டணிகளை இலகுவாக்க முடியும்.

பன்முகத்தன்மையின் மதிப்பை உணர்வதும் வேற்றுமையை ஏற்றுக்கொள்வதும் இந்த ஆதிக்கத்தன்மையில் உள்ள விரிசல்களை விரிவாக்குவதுடன் தொடர்புடையது. சமரசமற்ற ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் ஆளும் கட்சியின் திட்டம் இந்த மதிப்புகளை மறுப்பதில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில், சமூகம் மற்றும் அரசியலில் வேற்றுமை மற்றும் சமமற்ற தன்மையின் பல்வேறு கோடரிகள் உள்ளன. ஒருவிதமான ஆளுமைத்தன்மையை அடைவதன் மூலம் இத்தகைய திட்டம் நீடிக்கப்படும். முறையான ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் அதிகாரத்துவத்தை நீடிக்கச் செய்வது இதன் எல்லைகளுக்குள் சென்று சேரும். ஆளும் கட்சியின் நேர்மையற்ற செயல்கள் மோசமாக தோற்றுப்போனதும், அதிகாரத்தை இரகசியமாகக் கைப்பற்ற முயற்சி செய்வதும் இந்த எல்லைகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன. ஏதாவது ஒரு முயற்சி செய்து அதிகாரத்தை தக்கவைப்பதில் வித்தகர்கள் என்ற சுய பிம்பத்தின் ஊக்குவிப்பினால், மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைமையானது தன்னால் மெள்ள முடியாத அளவிற்கு பிரச்சினைகளை விழுங்கிவிட்டது. ஒரே இரவில் பல்வேறு அரசியல் சதிகள் செய்து 2019 நவம்பர் 23ஆம் தேதி அதன் முதலமைச்சரை பதவியேற்க வைத்தது. பணம் மற்றும் அழுத்தம் என்ற தந்திரங்களை வெட்கமில்லாமல் பிரயோகித்து சட்ட சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பிரித்து சூழ்ச்சி செய்யலாம், யாரால் என்ன செய்ய முடியும் என்ற கணிப்பில் அவர்கள் இருந்திருக்கலாம். இருப்பினும் ஒரு ஜனநாயக அமைப்பில், வலுவான சமூக அடித்தளம் மற்றும் நிர்வாகத்துடன் வலுவான அடித்தளம் கொண்ட வெகு ஜன அரசியலும், பல்வேறு ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசியலும் இணைந்து இத்தகைய நகர்வுகளை தவிடுபொடியாக்கும் எதிர் நடிவடிக்கைகளை அளிக்கும். பாஜக தலைமையின் முனைப்பு ஒவ்வொரு மட்டத்திலும் அதிகாரத்தின் சக்கரத்தைக் கட்டுப்படுத்துவது அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்றும், அவர்களது அரசியல் திட்டத்தை நீட்டிப்பது எவ்வளவு முக்கியம் என்றும் காண்பித்தது. அவர்களது அதிகார ஆசையை முறியடிக்க எவ்வளவு மதிநுட்பம் தேவைப்படுகிறது என்பதையும் கோடிட்டுக்காட்டுகிறது.

ஆளும் கட்சியின் முயற்சிகளை முறியடிப்பதில் வெற்றிகண்ட இந்த மூன்று கட்சி கூட்டணி அரசாங்கம், தங்கள் செயல்பாடுகளின் மூலம் மக்களிடம் தங்கள் நம்பத்தன்மையை நீடிக்கவைக்கும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு செய்வதற்கு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்ட கொள்கைகளுக்கு அவர்கள் ஒத்துப்போக வேண்டும். மேலும், பாஜகவும் ஊடகங்களில் ஒரு பிரிவினரும் விரிக்கும் வலைகளில் சிக்காமல் தப்பிப்பதற்கு அசாத்திய திறமைகளைக் காண்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தாங்கள் அளிக்கும் மாற்று அரசியல் என்ற முக்கிய செல்பாட்டிலிருந்து வழிதவற நேரிடலாம். தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தங்களுக்கு முற்றிலும் முரண்பட்ட கருத்தியல் கொண்ட சிவ சேனா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளன. இத்தகு தருணத்தில் தங்களது கருத்தியலை தெளிவாகப் பின்பற்றும் அதே வேளையில், சிவ சேனா மீது மிதமான ஆதிக்கம் செலுத்தி அரசியல் பாதையில் மைய நடவடிக்கையை எடுக்க வேண்டிய தேவை உள்ளது. “தந்திரமான நெகிழ்வுத்தன்மை மற்றும் கருத்தியல் உறுதி” என்ற வாசகத்தை திறமையாக நடைமுறைப்படுத்துவது இந்த பணிக்கு மிகவும் முக்கியம்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top