ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மகாராஷ்ட்ர மாநில அரசியல்

.

மகாராஷ்ட்ர மாநில அரசியலில், காங்கிரஸ் கட்சி, தேசியவாதக் காங்கிரஸ் கட்சி மற்றும் சிவ சேனை ஆகிய  மூன்று கட்சிகளுக்கிடையே ஒரு வலைப்பின்னல் ஏற்பட்டுள்ளபோதிலும், தர்க்கரீதியாகக் கூறுமிடத்து, இருவிதமான கொள்கை உறுதிப்பாடுகளுடன் நங்கூரமிட்டிருப்பதுபோன்றே தோன்றுகிறது. இவற்றில் ஒருவிதமான கொள்கை உறுதிப்பாடு என்ன பரிந்துரைக்கிறதென்றால், மாநிலத்தில் இம்மூன்று கட்சிகளும் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் (must) என்பதாகும். அதே சமயத்தில் மற்றொருவிதமான கொள்கை உறுதிப்பாடு என்ன பரிந்துரைக்கிறதென்றால் இம்மூன்று கட்சிகளும் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்கணும் (should) என்கிறது.  ‘அமைக்கணும்’(should) என்பது விருப்பத்தைத் தெரிவித்திடும் அதே சமயத்தில், ‘அமைக்க வேண்டும்’ (must) என்பது அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இவ்வாறாக இவ்விரு கட்சிகளும் இவ்விருவிதமான உறுதிப்பாடுகளுக்குமிடையே ஊசலாடிக்கொண்டிருப்பதுபோல தோன்றக்கூடிய அதே சமயத்தில், சிவசேனைக் கட்சியுடன் அரசாங்கத்தை அமைத்திட “வேண்டாம்” என்றுதான் காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாதக் காங்கிரஸ் கட்சிக்கும் நிச்சயமானமுறையில் பரிந்துரைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

“வேண்டும்” என்கிற சொல் தேர்தல் அரசியலில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட திசைவழியைப் பரிந்துரைக்கிறது. இது பரிசீலனை செய்வதற்கோ, விவாதத்திற்கோ வழி எதையும் ஒதுக்கிடவில்லை. அரசியல் விமர்சகர்களில் சிலர், தங்களின் அறநெறிக் காரணங்களின் அடிப்படையில், ஒரு “தூய்மையான” அரசியல் பார்வையை உயர்த்திப்பிடித்து, இம்மூன்று கட்சிகளுமே அரசாங்கத்தை அமைப்பதற்குப் போதுமான அளவிற்குத் தகுதி படைத்தவை அல்ல என்று காண்கிறார்கள். அவர்களின் கருத்தின்படி காங்கிரஸ் கட்சியும், தேசியவாதக் காங்கிரஸ் கட்சியும் “மதச்சார்பின்மை” குறித்து ஒரு தடுமாற்றமான பார்வையையே கொண்டிருக்கின்றன. எனினும், இத்தகைய அவநம்பிக்கைகளுக்கு மத்தியிலும், இம்மூன்று கட்சிகளுக்கு மிடையே, ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருப்பதன்படி,  விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.  இவை மூன்றும் சேர்ந்து அரசாங்கத்தை அமைப்பதை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது. இவற்றிற்கிடையிலான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் தற்காலிகமானதாக நீடித்திருக்கின்றபோதிலும், இக்கட்சிகள் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தலைமை தாங்கக்கூடிய அளவிற்கு விவாதங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கவில்லை போன்றே தோன்றுகிறது. இவற்றிற்கிடையிலான விவாதங்களில் ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுக்கா நிலை இருந்துவந்த போதிலும், இறுதியில் தாங்கள் இணைந்து அரசாங்கம் அமைக்க வேண்டியது நடைமுறை அவசியமாக மாறியிருக்கிறது என்பதை இக்கட்சிகள் இப்போது ஒப்புக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியும், தேசியவாதக் காங்கிரசும் இத்தகைய கருத்தினைக் கொண்டிருப்பது, இவர்கள் அரசியல்ரீதியாக தங்கள் நடவடிக்கைகளை கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் நகர்த்திக்கொண்டிருப்பதிலிருந்து “தெளிவாகத்” தெரிகிறது. இத்தகைய “கவனமும்”, “எச்சரிக்கையும்”, விவாதங்களின்போது “சாத்தியமின்மை” என்னும் கருத்து உருவாகாதவாறு தவிர்த்திருப்பது போலவே தோன்றுகிறது. மேலும், இக்கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட விவாதங்கள், சிவசேனைக் கட்சி தன்னுடைய தீவிர இந்துத்துவா நிலைப்பாட்டை மென்மையாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி இருப்பதும் உண்மையாகும்.

பன்முகத்தன்மையும் மத நல்லிணக்கமும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்கமுடியாத விழுமியங்களாக இருந்துவருகிற போதிலும், அபூர்வமான சமயங்களில், அவற்றை ஓர் வழிகாட்டியாக மட்டும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் பரிந்துரை சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக, சிவசேனையின் கருத்துக்களை நுணுகி  ஆராய்வதும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது, விவசாயிகளைத் தற்போது ஏற்பட்டிருக்கும்  தேசியப் பேரிடர்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருப்பதன்மூலம் அது தன்னுடைய இந்துத்துவா கருத்தியலை அடக்கி வாசிக்க சிவசேனைக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சமயத்தில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது: சிவ சேனை இத்தகைய தன் உறுதியில் முற்போக்கானமுறையில் பொறுப்புடன் முன்னேறுமா, அல்லது, தன்னுடைய பழைமைவாத கொள்கைகளுக்கு மீளவும் திரும்பிடுமா என்பதாகும்.  இதன் பழமைவாதக் கொள்கை என்பது, தன்னுடைய பிற்போக்கான கடந்த காலத்தில் இது இப்பழமைவாதக் கொள்கையைத்தான் தன்னுடைய வலுவான நம்பிக்கையாகக் கொண்டிருந்தது.  சமூகத்திலிருந்துவரும் படிநிலை சமூக ஒழுங்கை விமர்சிப்பதை முற்றிலுமாக தவிர்த்து வந்தது. இக்கேள்வி தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாதக் காங்கிரசும் கூட பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு பொறுப்பான கொள்கையுடன் தங்கள் அரசியலை முன்னெடுத்துச்செல்ல அவை உறுதியுடன் இருக்கின்றனவா? இக்கட்சிகளிடமிருந்து இவை குறித்து தெளிவான விடைகளை ஒருவர் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய கொள்கைகளின்மீது தொடர்ந்து நடைபெறும் விவாதங்களின் மூலமாக ஏற்படக்கூடிய ஆழ்நிலை அவசியத்தைச் சார்ந்தே ஏராளமான முடிவுகள் எடுக்கப்படும், இடையில் ஏற்படக்கூடிய ஆபத்தான கருத்துக்கள் ஓரங்கட்டி வைக்கப்படும்.

அரசியலில் விவாதங்கள், ஒரு பொறுப்பான கொள்கையுடனான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, அவசியமாகும். இத்தகைய கொள்கைத் திட்டங்களுக்கான வகையினங்கள் இயல்பாக கட்டாயத்திற்கான மொழியை அனுமதிப்பதில்லை. கட்சிகள் பரஸ்பரம் ஆதாயம் அடையக்கூடிய விதத்தில், அதிகாரத்தினைப் பகிர்ந்துகொள்கையில், தாங்கள் மேற்கொள்ளும் விவாதங்களின்போது இத்தகைய மொழி மலர்வுறும்.

அறநெறி சார்ந்த விவாதங்களின்போது உள்ளீடாக இருக்கின்ற பொறுப்புமிக்க உறுதியான கொள்கைகள் ஆரவாரத்தன்மையில்லாது, சாமானிய மக்கள் சம்பந்தப்பட்ட உண்மையான விஷயங்களுக்கு இயல்பாகவே முன்னுரிமை அளித்திடும். வலுக்கட்டாயமின்றி உறுதியான கொள்கைகள் இருக்க முடியும் என்று இதனைப் பரிந்துரைத்திடக்கூடாது. உண்மையில், அரசியல் கட்சிகள், தாங்கள் பொறுப்புமிக்க உறுதிப்பாட்டுனான கொள்கைகளை உருவாக்கிட வேண்டும் என்ற கட்டாயத்தினை உணர்கின்றன.    இத்தகைய கொள்கை உறுதிப்பாடுகள் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் உத்தரவாதப்படுத்துவதை - ஒருவேளை சமூகத்தில் நட்புறவினை ஏற்படுத்துவதை - முடுக்கிவிடுவது மட்டுமல்லாமல், நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றவர்களுக்கு விரைந்துசென்று பாதுகாத்திடக் கூடிய விதத்திலும் அமைந்திட வேண்டும்.  மகாராஷ்ட்ராவில் தேர்தல் முடிவுகளுக்குப்பின்னர் அரசியலில் ஏற்பட்டிருக்கிற நிச்சயமற்ற தன்மை, கட்சிகளிடையே ஒரு பொறுப்பான கொள்கையை உருவாக்குவதற்கான இடத்தை உருவாக்க முடியும். இதனைத் தொடர்ந்து, அவை ஓர் அறநெறி சார்ந்த உறுதிப்பாட்டுடனான கொள்கையை மேம்படுத்திட முடியும். அதன் மூலம் கட்சிகள் மக்களை, எவ்விதமான மத அடையாளங்களின் கீழும் அணிதிரட்டாது தடுத்திடும். பொறுப்புமிக்க கொள்கை உறுதிப்பாடு என்பது மத நல்லிணக்கத்தின் நம்பிக்கைக்கான அறநெறி உறுதியின்கீழ் ஒரே தடவையில் ஏற்படக்கூடிய சாதனை அல்ல. அது, கட்சி ஊழியர்களுடன் மட்டுமல்லாது, முக்கியமாக சாமானிய பொது மக்களுடனும் தொடர்ந்து விவாதங்களும் பேச்சுவார்த்தைகளும் கவனத்துடன் நடத்துவதன் மூலமாக பயிற்றுவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

Back to Top