அயோத்தி: மண்ணிலிருந்து விண்ணிற்கு
.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
உச்சநீதிமன்றத்தால் பல்வேறு வழக்காளிகளினால் வழக்கு தொடரப்பட்டிருந்த, அடிப்படையில் துல்லியமான பௌதீக இடம் சம்பந்தமாக, சமீபத்தில் பகரப்பட்ட அயோத்தி தீர்ப்பு குறித்து, அனைவரும் கூறியதுதான், நடந்திருக்கிறது. பலருக்கு, சர்ச்சைக்குரிய தளம் தொடர்பாக ஏற்பட்ட தாவா ஒன்று முடிக்கப்பட்டுவிட்டது. நீதிமன்றம், மேற்படி இடத்தின் உடைமையை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் கொடுத்திட வேண்டும் என வரையறுத்திருப்பதுபோல தோன்றுகிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு வழக்காடிய மற்றொரு மதம் சார்ந்தக் குழுவினருக்கு மாற்று இடத்தையும் கொடுத்திருக்கிறது. அடிப்படையில் இந்தத் தீர்ப்பானது சில இடங்களின் உடைமைகள் குறித்ததாகும். நீதிமன்றத்தின் தீர்ப்பை, தாவாவுக்குரிய இடத்தை, வழக்காளிகளிடமிருந்து பாதுகாத்து, நீதித்துறை, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறது எனக் கூற முடியும்.
நீதிமன்றம், ஓரிடத்தின் உடைமை குறித்த மோதல் மீது தொடரப்பட்ட வழக்கில், அந்த இடத்திற்கு ஒரு துல்லியமான அர்த்தத்துடன் உரிமை மாற்றத்தைச் செய்து, தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. ஓர் இடம் அது யாருக்கு அளிக்கப்படவேண்டும் என்பது குறித்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சாட்சியத்தை அளித்திருப்பதன் மூலம் முக்கியமான செயல்பாட்டை ஆற்றியிருக்கிறது. எனினும், நீதி, ஒரு நியாயமான வெளிப்பாடாக, சிலரை முழுமையாக சமாதானப்படுத்தாமல் போகலாம். உண்மையில், நீதித்துறை தொடர்ந்து சட்டரீதியாக முடிவுகள் மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக ஒருசிலவற்றின்மீது தீர்ப்பு வழங்காமல் கொஞ்சம் இடம் விட்டுவைத்திருக்கிறது. ஓர் இடம் விரிவடைவது என்பது ஸ்தூலமான அந்த இடம் பெரிதாவதால் அல்ல. மாறாக, அந்த இடம் குறித்த கற்பனைகள் விரிவடைவதன் மூலமே அந்த இடம் விரிவுபடுத்தப்படுகிறது. இவ்வாறு, தெரியாத இடங்கள் குறித்து மற்றும் இதற்குமுன் பார்த்திராத இடங்கள் குறித்து பொதுமக்களின் கற்பனைகள், பல்வேறு விதமான கற்பனைகளுடனும், கலாச்சார சிந்தனைகளுடனும் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கத் தொடங்குகின்றன.
ஓர் இடத்திற்கு, கற்பனை மூலமாகப் பயணம் செய்யும்போது, அந்த இடம் குறித்து ஒருவருக்கு, வெறுப்பு, தண்டனை அளித்தல் மற்றும் பழிக்குப்பழி வாங்குதல் போன்ற வெறித்தனமான உணர்வுகளை மனரீதியாக உருவாக்குவதும் சாத்தியமே. பின்னர் அந்த இடம் ஒருவிதமான வெடிமருந்துக் கிடங்காக, எந்த சமயத்திலும் வெடிக்கக்கூடிய ஒன்றாக, மாற்றப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை வரிந்துகட்டிக்கொண்டபின்னர், பொது இடங்களில் ஒருவரைச் சந்திக்கும்போது பரஸ்பரம் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்ளும் பொதுவான வழிமுறைகளுக்குப் பதிலாக, வேறுசில வார்த்தைகளை படாடோபமாக வெளிப்படுத்தப்படுவதன் மூலம், சந்திக்கும் நபர்கள் உளவியல்ரீதியாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொது இடங்களில் இவ்வாறு உரத்த குரலில் வெளிப்படுத்தப்படும் வார்த்தைகள் கேட்பவர்களின் மத்தியில் ஒருவிதமான கலாச்சார இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுநாள்வரையிலும் அவர் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டிருக்கவே மாட்டார். மாறாக இதைவிட மிகவும் மென்மையான வார்த்தைகளைத்தான் கேட்க அவர் விரும்பியிருப்பார். பொது இடங்களில் இவ்வாறு உரத்த குரலில் வார்த்தைகளைக் கொட்டுவது, மற்றவர்கள் மத்தியில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாதவிதத்தில் அவர்களை மவுனமாக்கிவிடுகிறது. இவ்வாறு ஓர் இடம் குறித்த அதிகாரமும், கட்டுப்பாடும் சிலர் மீது திணிக்கப்பட்ட உணர்வுகள் வெடிக்கச் செய்வதற்கு இட்டுச் செல்கிறது.
இந்த சமயத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்பட வேண்டியது தேவையாகிறது. அதாவது, நீதிமன்ற அமைப்பு முறையாலும் அதன் தீர்ப்பாலும் அந்த இடத்தை அவசரமாகக் கேட்டவர்களுக்கான இடத்தை மீட்டு அளித்திட முடியுமா?
இன்றைய தினம், சமூகக் கலாச்சார இடங்களும் மற்றும் மனரீதியான இடங்களும்கூட மிகவும் வேகமாக சுருங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு இடங்கள் சுருங்குவது, இறுதியில் மக்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளாகவே அடைக்கும் விதத்தில், சிதைத்துவிடுகிறது. (நாகரிகமான வார்த்தைகளில் இந்த இடங்களை, “இனக்குழுக்களின் குடியிருப்புப் பகுதிகள்” (“ethnic enclaves.”) என்று கூறலாம்)
மக்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளாகவே அடைத்துவிடும் விதத்தில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது, அல்லது, மக்கள் தாங்களாகவே தங்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் அடைத்துக் கொள்வது, தங்களை மேம்பட்டவர்கள் என்றும், இதர இனத்தினர் தங்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்றும் கருதுகிற ஆதிக்க சக்தியினருக்கான “அகதிகள் முகாமாக” மாறக்கூடிய நிலைக்குக் கொண்டு செல்கிறது.
இத்தகைய இடங்கள் அவர்களை உறைந்தநிலைக்கு, கலாச்சார முற்றுகைக்கு, அல்லது உரிமைகள் பறிக்கப்பட்டவர்கள் வாழுமிடமாக மிகவும் வலுவான வகையில் குறைத்துவிடுகின்றன.
இத்தகையவிதத்தில் மக்கள் கலாச்சாரரீதியாக மாற்றியமைக்கப்பட்ட பின்னர், இத்தகைய இடங்களில் வாழும் மக்கள் எப்போதும் சந்தேகத்திற்கு உட்பட்டவர்களாக மாற்றப்பட்டிருப்பதாலோ அல்லது வெளிப்படையாகவே சமூகக் கீழ்ப்படியும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாலோ, அவர்கள் மத்தியில் ஒரு பொது அரசியல் மனநிலையை உருவாக்குவதைக் குறிக்கோளாக வைத்து அவர்களை அணிதிரட்டுவது என்கிற அனுபவத்தைப் பெறுவது என்பது அநேகமாகக் குறைந்துவிடுகிறது.
இந்நிலையில் ஒருவர் எழுப்பும் கேள்வி இதுதான்: ஒருசிலர் மட்டும் தேக்கமடைந்த விதத்தில், சுதந்திரமாக இயங்கமுடியாத விதத்தில், அல்லது மற்றவர்களுக்குக் கீழ்ப்பட்ட விதத்தில் வாழ்கின்ற இடங்களாக ஒருசில இடங்கள் மாறுவதிலிருந்து அவ்வாறு மாறாமல் அவற்றைப் பாதுகாப்பதற்கு என்ன மாதிரியான நிலைமைகள் தேவை? அல்லது, இடங்கள் அனைவரும் இயங்கக்கூடிய விதத்திலும், சக்தி வாய்ந்த விதத்திலும், குறிப்பாக ஒரு நபரை சம அளவில் மதித்து நடத்தும் விதத்திலும் விரிவான அளவில் கவனத்தைப் பெறுவதற்கு என்ன மாதிரியான நிலைமைகள் தேவை?
இதுதான் ஒருவரை, உள்ளூர் பிரஜையாக இருப்பதிலிருந்து, உலகளாவிய பிரஜையாக மாற்றுவதற்கான, நிச்சயமான வெளிப்படையான பயணமாக அமைந்திடும். எனவே, ஓர் இடத்தை மீளவும் உருவாக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு ஒருவரின் மனதில் மாற்றத்தைக் கொண்டுவருவது அல்லது விடுவிக்கும் இயங்கியலை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கிலும், உச்சநீதிமன்றத்தால் சன்னி வக்ப் வாரியத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மாற்று இடத்தில் ஒரு பகுதி, அந்தப் பகுதியை மேலும் வலுவான தளமாக மாற்றுவதற்கும், உதாரணமாக, புதிய மாற்றுச் சிந்தனையை உருவாக்குவதற்கும் பயன்படுத்த முடியும் என்று ஒருசாரார் பரிந்துரைத்து வாதிடுகின்றனர்.
இந்த இடம் ஓர் உலகளாவிய பிரஜையை உருவாக்கும். அந்தப் பிரஜை, இதரர்களை வெறுக்கக் கூடிய விதத்திலான காட்டுமிராண்டித்தனமான ஆசைகளைப் பெற்றிருக்க மாட்டார். மாறாக, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிக்கக்கூடிய விதத்திலும், அனைத்து மனிதர்களின் நலன் மீதும் அக்கறை கொண்டவராகவும் உருவாக்கிடும். இவ்வாறு ஓர் உலகளாவிய பிரஜையை உருவாக்குவதற்கான மன உளவியலை விரிவான முறையில் உருவாக்க வேண்டியது தேவை. இத்தகைய சிந்தனையை எய்துவதற்கு ஏற்றவிதத்தில், அதிகாரத்திலிருப்பவர்களை, இதரர்களைத் தங்களுக்குக் கீழ், கீழ்ப்படிய வைத்திட வேண்டும் என்கிற ஆசைகளிலிருந்தும், அவர்களின் புராதனக்கால சிந்தனைகளிலிருந்தும் விடுவித்திட வேண்டியிருக்கிறது.