ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பிழைகளும் அவற்றின் அரசியலும்

சமீப காலங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் அரசியல் தீர்ப்புகள் மற்றும் முடிவுகள் குறித்து பிழைகள் செய்திருக்கிறோம் என்று வெளிப்படையாகவே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள். இது ஓர் அரிதான நல்லொழுக்கமாக மாறியிருக்கிறது. பல தலைவர்களுக்கு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதில் பங்கேதும் இல்லாததால் இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திட முன்வருவதில்லை. எனினும், ஒருசிலர் மட்டும் தங்களுடைய உற்சாகமான முயற்சிகளின் காரணமாக, தங்களுடைய அரசியல் தீர்ப்பில் பிழை ஏற்பட்டுவிட்டது என்று வெளிப்படையாகவே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதன் மூலம் தங்களுடைய நெறிமுறை சகிப்புத்தன்மையை நிரூபித்திருக்கிறார்கள்.

சமீப காலங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் அரசியல் தீர்ப்புகள் மற்றும் முடிவுகள் குறித்து பிழைகள் செய்திருக்கிறோம் என்று வெளிப்படையாகவே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள். இது ஓர் அரிதான நல்லொழுக்கமாக மாறியிருக்கிறது. பல தலைவர்களுக்கு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதில் பங்கேதும் இல்லாததால் இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திட முன்வருவதில்லை. எனினும், ஒருசிலர் மட்டும் தங்களுடைய உற்சாகமான முயற்சிகளின் காரணமாக, தங்களுடைய அரசியல் தீர்ப்பில் பிழை ஏற்பட்டுவிட்டது என்று வெளிப்படையாகவே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதன் மூலம் தங்களுடைய நெறிமுறை சகிப்புத்தன்மையை நிரூபித்திருக்கிறார்கள். இவ்வாறு, ஒரு பக்கத்தில் ஒப்புதல் வாக்குமூலம் இல்லாததும், மறுபக்கத்தில் பிழை செய்திருக்கிறோம், பிழையைத் திருத்திக் கொள்கிறோம் என்று இரண்டுக்கும் இடையிலான சிக்கலான உறவினைப் பரிந்துரைப்பதும் இருந்து வருகிறது.   ஒருவிதமான  வெளிப்படைத் தன்மையுடன் ஆனால் அதே சமயத்தில் நிச்சயமற்ற அரசியலில், செய்த பிழையைத் திருத்திக்கொள்வதென்பது, அரசியலின் அறநெறி அடித்தளத்தை வலுப்படுத்திடுவதற்கு ஒரு தர்க்கரீதியான தேவையாக மாறியிருக்கிறது. அரசியலின் நிச்சயமற்ற தன்மை, அனுபவத்திலிருந்து படிப்பினையைக் கற்றுக் கொள்வதற்கும், ஒரு தீதற்ற முடிவினை எய்துவதற்கும் ஒரு வாய்ப்பினை அளித்திட முனைகிறது.

தவறிழைப்பது, அடிப்படையான இரண்டு அம்சங்களின் விளைவாக ஏற்படக்கூடும்.   முதலாவது, அணுகுவதற்கு ஒரு நிலையான குறிக்கோள் இருந்திட வேண்டும். இரண்டாவது, இந்தக் குறிக்கோள், வெளிப்படையாகவும் அதேசமயத்தில் நிச்சயமற்றதாகவும் இருக்கிற அரசியல் நிலைமைகளின்கீழ் அணுகப்படக்கூடியதாக இருந்திட வேண்டும். வேறுவிதமாகச் சொல்வதென்றால், நெழிவுசுழிவின்றி நேரடியான வரைபடம் முன்னதாகவே அளிக்கப்படுமாயின், பிழை ஏற்பட அநேகமாக வாய்ப்பில்லை.

இது, அநேகமாக, நாட்டில் உள்ள இடதுசாரி அரசியலுக்கு உண்மையில் பொருந்தும். இந்த சக்திகள் நெறிப்படுத்தப்பட்ட கொள்கைகளினால் முறைப்படுத்தப்பட்ட அரசியலையே கையாள்வதாகத் தோன்றுகிறது. கொள்கைகளில் தவறிழைக்காத தன்மையின் காரணமாக இவற்றைப் பின்பற்றும் அரசியல் தலைவர்கள், குறிப்பாக காந்தியவாதிகள் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள், முன்னோக்கிப் பார்க்கும் வாய்ப்பைக்கூட, பிற்போக்குத்தனமான பிழையாக, கருதிடுவதற்கு இட்டுச் செல்லலாம். அரசியலை ஒழுங்குபடுத்தும் இத்தகைய கொள்கைகள், பிழை யேற்படுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய சிந்தனையை அனுமதித்திடாது.

அதேபோன்றே, தீர்ப்பு எதுவும் கூற மறுக்கிறவர்களுக்கும் அல்லது வெளிப்படையாக அரசியல் நிலைப்பாடு எடுக்க மறுக்கிறவர்களுக்கும் பிழை ஏற்படாது.  தலைவர்களில் சிலர் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் போன்று பொது வாழ்வில் இருப்பவர்கள், ஒரு பிரச்சனை வருமாயின், அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்கூட,  தங்கள் திறமையின்மையின் காரணமாக அதன்மீது எவ்வித நிலைப்பாட்டையும் எடுத்து எதுவும் கூறாதிருப்பதையே பாதுகாப்பானதாக உணர்கிறார்கள். வேறுவிதமாகச் சொல்வதென்றால்,  பிழை ஏற்படுவதென்பது ஆரோக்கியமற்ற ஐயுறவினை ஒதுக்கி வைப்பதை சாத்தியமாக்குகிறது. எனினும், திருத்திக் கொள்வதற்கு எவ்விதமான முயற்சிகளும் மேற்கொள்ளாமல் பிழைகள் தொடர்ந்து செய்வது என்பதும் வெறுப்பு மனப்பான்மையை, பிறரைத் துன்புறுத்திக் கேவலப்படுத்தும் பண்பை  ஏற்படுத்தக்கூடும். எனவே, பிழை என்பது சரிசெய்வதற்கான வாய்ப்பாக அதன் அறநெறி முக்கியத்துவத்தை இழக்கச் செய்கிறது. உதாரணமாக, எப்போதும், பிறரைத் துன்புறுத்திக் கேவலப்படுத்தும் விதத்தில் கெட்டவார்த்தைகளை உமிழ்ந்துகொண்டே இருக்கும் சில அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.   ‘எந்த நிலைமைகளின்கீழ் பிழை ஏற்படுவதைச் சரிசெய்திட முடியும்?’ இந்தக் கேள்விக்கு விடைகாண முயல்வது முக்கியமாகும். 

அரசியல்வாதிகளின் அரசியல் மனோநிலையை ஆராய்ந்தால், குறிப்பாக இன்றைய அரசியல் சூழ்நிலையில், பிழை ஏற்பட்டிருப்பதை, பிழையின் கருத்தாக்கம் குறித்து ஓர் ஆய்வறிக்கை அல்லது ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதன் மூலம் சரிசெய்திட முடியாது.   பிழையைச் சரி செய்வதற்கான இடத்தை ஒருவருக்கு அவர் சார்ந்திருக்கும் அரசியல் சிந்தனைதான் அளிக்கிறது என்பதை குறித்து வைத்துக்கொள்வோம்.

மக்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிழைகள் புரிவதை வாடிக்கையாக வைத்துக்கொண்டிருப்பதே சில வாய்ச்சவடால் பேர்வழிகளின் அறநெறிப் பண்பாக இருந்து வருகிறது. ஒருவேளை அதுவே உண்மையாகக் கூட இருக்கலாம். பிழை குறித்து பொதுவெளியில் ஒப்புக்கொள்வது, கட்சிகளுக்கு அதன் அரசியலின் அறநெறி அடிப்படையை விரிவாக்குவதற்கு உதவுகிறது.  இத்தகைய ஒப்புதல் வாக்குமூலம் சமீபத்தில் மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது மிகவும் வலுவானமுறையிலேயே பயன்படுத்தப்பட்டது. பிழைகள் குறித்த ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் அவற்றைச் சரிசெய்து கொள்வதற்கான தயார்நிலை, ஒருவருக்கு அறநெறி விழுமியத்தை அளிக்கிறது. ஏனெனில், அவை அரசியல் தீர்ப்பிலும் எதிர்காலத்தில் எடுக்கப்படும் முடிவிலும் மறுபடியும் தவறு ஏற்படுவதை அனுமதிப்பதில்லை. கடந்த காலங்களில் செய்திட்ட பிழைகளைக் கண்டுபிடிப்பதும், தற்போது அவற்றைச் சரிசெய்து கொள்வதும், எதிர்காலத்தில் அதுபோன்று தவறுகள் விழையாது என்று உத்தரவாதப்படுத்துவதும் அரசியலில் அறநெறி அடித்தளத்தை ஒருங்கிணைப்பதற்கானப் பங்களிப்பைச் செய்கிறது. இவ்வாறு, அரசியலில் பிழையைத் திருத்திக்கொள்வது,  தனிப்பட்டமுறையில் பழிவாங்கும் குணத்திலிருந்து வெளியேறுவது மட்டுமல்ல, விடுதலை பெறுவதற்கான அரசியலையும் குறிக்கோளாகக் கொண்டதாகும். 

பிழையை ஓர் அரசியல் ஆயுதமாக இணைப்பதும் தவறாகிவிடும். உண்மையில், பிழையைச் சரிசெய்து கொள்வது, அறநெறி மேலாதிக்கத்தை உருவாக்குவதற்கான பங்களிப்பினைச் செய்கிறது. சில சுயநலசக்திகளை, குறிப்பாக விளிம்புநிலை இனத்தவர்களிலிருந்து வருகிறவர்களை, கட்சி மாற வைப்பதன் மூலம் தங்கள் சமூக ஆதிக்கத்தைத் திணிப்பதை ஓர் அரசியல் திட்டமாகவே வைத்திருக்கும் சக்திகளுக்கு எதிராக அரசியல் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஒரு முன்நிபந்தனையாக இது சேவை செய்கிறது. பிழைக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதும், பிழைக்கு வேறு யாரும் காரணம் அல்ல, தானேதான் காரணம் என்று ஒப்புக்கொள்வதும் அறநெறிப் பண்பாகும். இது, அறநெறி மேலாதிக்கத்தை ஒன்றிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குகிறது. மேலும் அது, அரசியல் ஒருமைப்பாட்டுக்கு முந்தியதாக இருக்க வேண்டும். உண்மையில், விவேகத்தின் இத்தகைய செயலிழப்பு பிழையை உருவாக்குகிறது. இது அறநெறிக் குற்றமேயாகும். ஒரு சமத்துவ, ஜனநாயக மற்றும் எல்லோருக்குமான இந்தியாவில் பங்களிப்பினைச் செலுத்தாதவர்கள்தான்,  கடந்த கால பிழைகளைத் தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பதன் மூலமாக, தற்போதும் பிழைகள் செய்வதைத் தங்களுடைய தொழிலைக் கட்டி எழுப்புவதற்கான ஒன்றாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top