பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு என்ற சாட்டையடிகள்

.

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவை உறுதிசெய்யும் கொள்கைகளுக்கு புதுப்பிக்கப்பட்ட கவனமும் அவசரத்தன்மையும் தேவைப்படுகிறது. மக்களின் வாழ்வையும் சுகாதாரத்தையும் பாதிக்கும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய பிரச்சினைகளிலிருந்து சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் நாட்டால் விடுபட முடியவில்லை. இது ஒரு தேசிய அவமானம். பட்டினியும் ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பலவீனமான பகுதியினரைப் பாதிக்கின்றன. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலகளாவிய பட்டினி குறியீடு நான்கு காரணிகளை பயன்படுத்தியுள்ளது - குறைவான ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி குறைதல், குழந்தைகளுக்குப் போதிய உணவு அளிக்காமை, குழந்தை இறப்பு விகிதம் என்ற காரணிகளின் அடிப்படையில் பட்டினி பிரச்சினையைக் குறைக்க நாடுகளின் திறன் கணக்கிடப்படுகிறது. தீவிரமான பட்டினி மட்டத்தை அனுபவிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தக் குறியீடு இந்தியாவை நிறுத்தியுள்ளது.

 2030ஆம் ஆண்டுக்குள் பூஜ்ய பட்டினி நிலைமை என்ற இலக்கை அடைவது ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும். இதற்கு, புதுமையான நீடித்த அரசு செயல்தந்திரங்கள், பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவை மட்டும் போதாது. தேவையான பலன்களை அளிக்க நிலையான உறுதிப்பாடும் தேவை. இந்த இலக்கை அடைவதற்கு, நாடுகளுக்கு இடையில் பட்டினியை அளவிட்டு வரைபடமாக்குகிறது உலகளாவிய பட்டினிக் குறியீடு. 2013ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும், பல்வேறு ஆண்டுகளாக உணவுப் பொருட்களை இருப்பு வைத்துள்ளபோதும் இந்தியாவில் பட்டினி என்னும் பலவீனம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. போதுமான தேவையான உணவு என்ற அடிப்படை உரிமை பலிகொடுக்கப்படுகிறது. அண்டை நாடுகளில் உள்ள சில தெற்காசிய நாடுகள் சற்று கூடுதலாகவே திறம்பட செயல்பட்டுள்ளன.

இந்தியாவின் பெரிய மக்கள்தொகை காரணமாக இந்தியாவின் குறியீட்டு மதிப்பு இந்தப் பிராந்தியத்திற்கான விளைவை அதிகப்படுத்திக்காட்டியுள்ளது. இந்தக் குறியீட்டின்படி, இந்தியாவில் 6லிருந்து 23 மாதங்கள் வயதான குழந்தைகளில் 9.6% மட்டும்தான் குறைந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு உண்கிறார்கள். ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகளில் போதிய உணவு கிடைக்காதவர்கள், போதிய வளர்ச்சி இல்லாதவர்கள், அதாவது உயரத்திற்கேற்ற எடை இல்லாதவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களின் சதவீதம் 20.8%ஆக உள்ளது. இந்த அறிக்கையில் கிடைத்த தரவுகளின்படி மற்ற நாடுகளைவிட இது அதிகபட்ச சதவீதமாகும். குழந்தைகளின் வளர்ச்சி குறைவு விகிதம் அல்லது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத, ஐந்து வயதிற்கும் உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, தீவிர ஊட்டச்சத்துக் குறையைக் குறிக்கிறது. இதுவும் 37.9%ஆக அதிக எண்ணிக்கையில் உள்ளது. ஆனால், உலகளாவிய பட்டினிக் குறியீடு குறித்து சில விமர்சனங்களும் உண்டு. இந்தக் குறியீட்டின் மதிப்பீடுகள், காரணிகளின் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் ஒப்பிட்டு இந்த தரநிர்ணயம் செய்யக்கூடாது. தரவுகளையும் முறைகளையும் மாற்றி அமைக்கும் அதே வேளையில், ஒவ்வோர் ஆண்டும் இந்த அறிக்கையில் பல்வேறு நாடுகள் சேர்க்கப்படுகின்றன.

எனினும், ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவில் இருப்பது தொடர்வது இந்தியாவின் குழந்தைகளின் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இது ‘யுனிசெஃப்’ எனப்படும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் அளிக்கும் உலகக் குழந்தைகளின் நிலை என்ற மற்றொரு அறிக்கையின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மற்ற சுகாதார பிரச்சினைகளுடன், ஊட்டச்சத்துக் குறைபாடு, இரத்த சோகை, மற்றும் உடல் பருமன் போன்ற குழந்தைகளின் சுகாதார காரணங்கள் மூலம் இவை நிர்ணயிக்கப்படுகின்றன. போதுமான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள்தான் உலகில் மரணத்தின் முக்கிய காரணியாக உள்ளன. இந்தியாவில், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் சராசரி இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 37ஆக உள்ளது. 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட குழந்தை மரணங்களில் பல (8,82,000) மரணங்கள், அதாவது 62% மரணங்கள் பச்சிளங்குழந்தை மரணங்களாகும். ஆகவே, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 69% குழந்தைகள் மரணம் அடைகின்றன. ஒரு குழுவில் உள்ள ஒவ்வொரு இரண்டாவது குழந்தையும் ஏதோ ஒரு விதத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 35%, குறைவான ஊட்டச்சத்து பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 17%, குறைவான எடை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 33% என்று இந்த அறிக்கை கூறியுள்ளது. 6 மாதங்களிலிருந்து 23 மாதங்களுக்கு இடைப்பட்ட வயதில் உள்ள குழந்தைகளில் 42% மட்டுமே போதுமான கால இடைவெளியில் உணவு அளிக்கப்படுகிறார்கள். 21% குழந்தைகளுக்கு மட்டுமே போதுமான வித்தியாசமான உணவு பெறப்பட்டது. மேலும், ஒவ்வொரு இரண்டாவது பெண்மணியும் இரத்த சோகை உள்ளவராக இருக்கிறார். குழந்தைகளில் 40.5% இதே நிலையில் உள்ளனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட ஒருங்கிணைந்த தேசிய ஊட்டச்சத்து ஆய்வறிக்கையின்படி (2016-2018) ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில்

34.7 சதவீதத்தினர் வளர்ச்சி குறைந்தவர்களாகவும், 17.3 சதவீதத்தினர் குறைவான உணவு பெறுபவர்களாகவும், 33.4% எடை குறைந்தவர் களாகவும் உள்ளனர்.

குறைவான ஊட்டச்சத்து பெறுவது பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. இதில் மாநிலங்களுக்கு இடையிலான, ஒரே மாநிலத்திற்கு உள்ளேயே பல்வேறு வேறுபாடுகள் தோன்றுகின்றன. இதற்கு வறுமை, உணவுப்பொருட்கள் மற்றும் தானியங்கள் போதிய அளவிற்கு இல்லாமை, உணவில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை, திறனற்ற பொது விநியோக முறைகள், சமமற்ற விநியோகம், வீட்டிற்குள்ளேயே பெண்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்து, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் இன்மை மற்றும் மரபுரீதியான, சுற்றுப்புற காரணிகள் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன. தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கு இத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற அரசியல் உறுதிப்பாடு இல்லாமையால், தற்போதுள்ள அமைப்புக்கள் மற்றும் கொள்கைகளால் தேவையான பலன்களை அளிக்க இயலவில்லை. இந்த இரண்டு காரணங்களால் தற்போதுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொள்கைகளான பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா, கருவுற்றிருக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான நிபந்தனை பணப்பரிமாற்றத் திட்டம், போஷான் அபியான் மற்றும் தேசிய ஊட்டச்சத்து மிஷன் ஆகியவை 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி குறைவதையும் ஊட்டச்சத்து குறைவதையும் கணிசமாக குறைப்பதை உறுதி செய்கிறது. ஒரு சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, தற்போதுள்ள ஊட்டச்சத்து மட்டங்களில் குறைவு ஏற்படுத்துவதற்கான முன்னேற்ற விகிதத்தை பார்க்கும்போது, இந்த இலக்கை அடைய முடியுமா என்பது சந்தேகமே. க்ரெடிட் சூயிஸ் உலகளாவிய செல்வ அறிக்கையின்படி, சமீப காலங்களில் மிகவிரைவில் அதிகமாக செல்வம் சேர்த்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நாட்டில், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியை போக்கமுடியவில்லை என்பது நகைமுரண். போதுமான உணவு மற்றும் ஊட்டச்சத்தினை மக்களுக்கு உத்தரவாதப்படுத்த அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பிழைத்திருப்பதை உறுதி செய்ய தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க முதலீடுகளை அதிகப்படுத்தவேண்டும். மனிதவளத்தை அதன் முழு திறனிற்கு வளர்க்க வேண்டும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Biden’s policy of the “return to the normal” would be inadequate to decisively defeat Trumpism.