ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

சிரியாவை முற்றுகையிடும் துருக்கி

சிரியாவின் குர்திஸ் ஆசைகளை மாபெரும் அதிகார போட்டிகளும் பிராந்திய கணக்குகளும் வளர்த்துள்ளன

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

துருக்கிக்கு சிரியாவை முற்றுகையிடுவதற்கான சமிக்ஞையைப்   பச்சைக் கொடி அசைத்து தனது ஆதரவை  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வழங்கியுள்ளார். சிரியாவில்   குர்துக்களின் இடங்களின்  மீது வானிலிருந்து துருக்கி தாக்குதல் நடத்தியது.  அவர்களது காலாட் படைகள் ஒழுங்கற்று உள்ளனர். அமெரிக்காவின் நிதி மற்றும் லாஜிஸ்டிக்கல் ஆதரவு, சௌதி, கத்தாரி, துருக்கி  ஆகியோரின் ஆதரவு மற்றும் ஆலேப்போ மற்றும் இட்லிப் நகரங்களுக்குள் செளதி அரேபியாவால் நிதி அளிக்கப்பட்ட மசூதிகள் உருவாக்கிய ஜிகாதி போராளிகள் இப்படித்தான் ஒழுங்கற்ற கிளர்ச்சியாளர்களாக இருப்பார்கள். மத நிந்தனையாளர்கள் என்று கருதப்படும் எவரையும்  கொலை செய்ய அச்சுறுத்துபவர்கள்  இந்தக் கிளர்ச்சியாளர்கள். எல்லா திசைகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்த வெறி வேண்டுபவர்கள். ரோஜாவோ என்று அறியப்படும் நிலத்தில், தற்போது துருக்கியில் உள்ள 30 இலட்சம் சிரிய அகதிகளை மீள்குடியமர்த்த துருக்கிய அரசாங்கம் விரும்புகிறது. சட்டங்களின் உலகில் இந்த “மக்கள்தொகை பரிமாற்றம்” போர்க் குற்றமாகக் காணப்படுகிறது.    

சிரியாவின் குர்திக்கள் பெரும்பான்மையாக உள்ள பிராந்தியத்திலும் அவர்கள் பல்வேறு வேற்றுமைகள் நிறைந்தவர்களாகவே உள்ளனர் (அரபுக்கள், கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள், அசிரியர்கள், யாசிடிக்கள் மற்றும் பிறர் ). சிரியாவில் என்னதான் எண்ணெய் கிடங்குகள் இருந்தாலும்  அதன் தெற்கு பகுதி வரை முக்கியமான விவசாய ஆதாரங்கள் உள்ள பகுதி இது. இந்தப் பிராந்தியத்தின் இன ரீதியான வேறுபாடும் வளமையும், இந்த பிராந்தியத்திற்கு சுயேட்சை அதிகாரம் வழங்குவதில் உள்ள சிக்கலாக  சிரியாவில் உள்ள குர்திய அரசியல் நிறுவனம் கருதுகிறது. டமாஸ்கசோ அல்லது அதன் அண்டை நாட்டினரோ இத்தகைய கோரிக்கையை ஆதரிக்கவில்லை.

2011ஆம் ஆண்டு பஷார் அல் ஆசாதின் அரசுக்கு எதிராக கிளர்ச்சி வெடித்தபோது, சிரியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களையும் டமாஸ்கசையும் காப்பதற்கு சிரிய அரசு தனது துருப்புக்களை விலக்கிக் கொண்டது. அரசு தன் படைகளை விலக்கிக்கொண்டதால் சிரியாவின் குர்திய அரசியல் கட்சிகள் யூப்ரேடிஸ் நதியின் கிழக்குப் பகுதியிலிருந்து இராக்கிய எல்லை வரை தங்கள் கட்டுப்பாட்டில்  கொண்டு வர அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. சிரியாவின் குர்துக்களின் பிராந்தியத்தில் அவர்கள் ரோஜாவாவை உருவாக்கினர். அங்கு அவர்களில் ஒரு பகுதியினர் அதனை ஒரு சோசலிச சமூகமாக மாற்ற முயற்சித்தனர். இந்த அனுபவம் பூத்துக்குலுங்குவதற்கு ஒரு நொடி கூடக் கிடைக்கவில்லை. ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இராக் மற்றும சிரியாவின் இஸ்லாமிய அரசு அமைப்பினர் பெரும் வன்மத்துடன் ரோஜாவாவை கடுமையாகத் தாக்கினர். அந்தப் பகுதியின் முக்கிய நகரமான கொபானேவையும் பிற சிறிய நகரங்களையும்  அவர்கள் கைப்பற்றினர். இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ரோஜாவாவை விழுங்கியதுடன் விடவில்லை, சிரிய குர்துக்கள் மட்டுமல்ல, யாசிடிக்கள் போன்ற பிற சிறுபான்மையினக் குழுக்களை அழித்தொழிப்பதாக அச்சுறுத்தினர்.

சிரியாவின் குர்திய தலைவர்களுக்கு அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அரசியல் கூட்டணிகள் தேவைப்படுகிறது.  அவர்கள் மாஸ்கோவில் ஓர் அலுவலகம் நிறுவி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் துவங்கினர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் சிரியாவின் குர்துக்கள் தங்களது கிளர்ச்சியாளர் கூட்டத்தை (ஒய்பிஜி அல்லது மக்கள் பாதுகாப்பு அலகுகள்) விரிவான சிரிய ஜனநாயகப் படையாக (எஸ்டிஎஃப்) மாற்றினர். இந்தப் படைகளில் தற்போது அரபுக்கள், அசிரியர்கள், மற்றும் குர்துக்கள் ஆகியோரும் உள்ளடக்கம். ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நடத்துவதற்கான காலாட் படைகளை இவர்கள் அளித்தனர். வடக்கு சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ்சின் அடித்தளத்திலிருந்து அவர்களை அழிக்க, அமெரிக்காவிற்கு  சிரிய ஜனநாயகப் படையின் (எஸ்டிஎஃப்) உதவி  உள்ளது. இல்லையென்றால் அமெரிக்காவிற்கு இது சாத்தியமல்ல.

சிரிய ஜனநாயகப் படையின் (எஸ்டிஎஃப்) வெற்றியும்  ஐஎஸ்ஐஎஸ்சின் தோல்வியும் சிரியாவின் குர்திய தலைமைக்கு ஒருவிதமான தவறான நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. தங்களது சோதனையை முறியடிக்க துருக்கியும் சிரியாவும் அளிக்கும் அழுத்தங்களை சமாளிக்க அமெரிக்காவின் ஆதரவு நிலைக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். துருக்கியில் உள்ள வலதுசார் அரசாங்கம் தங்களது எல்லையில் எந்தவிதமான குர்திய தன்னாட்சியும் உருவாவதை திட்டமிட்டு எதிர்க்கிறது. ரோஜாவா அனுபவத்தை பலவீனமாக்க ஏற்கெனவே 2014 மற்றம் 2015ஆம் ஆண்டுகளில் சிரியாவின் மீது துருக்கி படையெடுத்துள்ளது. இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் அழிப்பற்கான ஒரு சந்தர்ப்பத்திற்காக அது காத்துக்கொண்டிருந்தது. தனது அனைத்து பிராந்தியங்களையும் மீண்டும் கோருவதற்கு சிரிய அரசு விரும்புகிறது. அவர்கள் பிராந்தியத்தில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிடமும் சிரியாவின் குர்திக்களிடமும் உள்ளது. சிரிய அரசுக்கு இரஷ்யர்களும் இரானியர்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள். ஆசாதின் அரசுக்கு முழுமையான பிரதேச இறையாண்மை உள்ளது என்று அவர்கள் தெளிவாக தெரிவித்துள்ளார்கள். இதற்கு முட்டுக்கட்டையாக ரோஜாவா உள்ளது.

டமாஸ்கஸ், ரஷ்யா மற்றும் இரானின் அரசாங்கங்களின் முழு ஒப்புதல் இல்லாமல் துருக்கிய படைகளால் நகர்ந்திருக்க முடியாது. ஒரு சில காலமே ரோஜவாவால் நிலைக்க முடியும் என்று சிரியாவின் குர்தி அரசியல்வாதிகளுக்கு தெரியும். பல்வேறு காரணங்களுக்காக அந்தப் பிராந்தியத்தில் உள்ள எந்த அரசும் ரோஜாவா நிலைக்க அனுமதிக்காது. மின்னல் வேகத்தில் அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்டது. அந்த இடத்தை தற்போது சிரிய மற்றும் இரஷ்ய துருப்புக்கள் எடுத்துக்கொண்டுள்ளன. தனது முன்னேற்றத்தை நிறுத்தி வைக்க துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் சிரியர்கள் அந்த பிராந்தியத்தின் சில பகுதிகளில் தங்கள் ஆதிக்கம் நிறுவுவதை மட்டும் அனுமதிக்க துருக்கி ஒப்புகொண்டுள்ளது. துருக்கியர்களை விட சிரிய இராணுவத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே தாங்கள் விரும்புவதாக சிரியாவின் குர்துக்கள் கூறியுள்ளார்கள். அவர்களது சொந்த கனவுகள் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் விலகியவுடன், குர்துக்கள் அழுகிய பழங்களையும் கற்களையும் அவர்கள் மீது வீசினார்கள். அமெரிக்காவின் கொள்கையை ஒரு தெளிவான அறிக்கை மூலம் வெளியிட்டு இந்த நடவடிகைக்கு அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் “எங்களது நீண்ட கால நாட்டோ கூட்டாளியான துருக்கிக்கு எதிராக குர்துக்கள் போர் நடத்துவதை ஆதரிக்கிறோம் என்றோ, அவர்கள் ஒரு தன்னாட்சிமிக்க குர்திய அரசை நிறுவுவதற்கு உதவுகிறோம் என்றோ  நாங்கள் கையெழுத்திடவில்லை”, என்று பதில் அளித்துள்ளார்,  இந்த அனைத்துக் காரணிகளாலும் குர்திய மக்களின் ஆசைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Updated On : 28th Nov, 2019

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top