ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

காய்கறி விலைகள் உயரும்போது

காய்கறி விலைகளைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த செயல்தந்திர நடவடிக்கைகள் எண்ணத்திலும் அளவிலும் தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

உணவுப்பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் இந்தியாவில் பொதுவானது. விவசாயிகளின் வாழ்க்கையைப் பெருமளவு மாற்றுவதற்கான வாய்வழி உறுதிமொழிகளை தாண்டிச் செல்லாமல், அரசின் பதில்களும் உறுதியற்ற நடவடிக்கைகளையே யூகிக்கின்றன. கடந்த சில வாரங்களில் நாடு முழுவதும் காய்கறி விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு சென்றுள்ளது கொள்கை வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த உயர் செயல்பாடு ஏற்றுதியாளர்கள் மீது விதிக்கப்படும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை  மற்றும் உள்நாட்டு வணிகர்களின் இருப்பின் மீது விதிக்கப்படும் வரையறை ஆகியவற்றைத் தாண்டவில்லை. ஏற்கெனவே 2017ஆம் ஆண்டில் இந்த அரசாங்கம் சில்லறை பொருட்களின் விலையை மட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது வெங்காயம் கிலோ ரூ.80க்கும் தக்காளி கிலோ ரூ.110க்கும் விற்கப்பட்டது நினைவிருக்கும். அந்தந்த பருவகாலங்களில் காய்கறி விலைகள் உயர்வது மட்டுமல்ல, ஓர் ஆண்டு விட்டு ஓர் ஆண்டில் காய்கறி விலைகள் அதிகமாக உயர்வது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த விலை  உயர்விற்கான காரணங்கள் கொள்கை வடிவமைப்பாளர்களால் விளக்கப்பட்டாலும், நிலைமை அவர்களின் கட்டுப்பாட்டை மீறிய விஷயம். நிர்வாக ரீதியாக இத்தகைய உதவியற்ற தன்மையை முன்னிறுத்தும் வசதியைப் புறக்கணிப்பது எளிதல்ல.

முதலில், அவசர நடவடிக்கைகளுக்குப் பின் மறைமுகமான செயலற்ற தன்மை இருப்பதற்கு இது உதவுகிறது. உயர்த்தப்பட்ட பொருட்களின் ஆண்டுகள் ஒரு விதமான தனித்த அம்சமாக இதனை மாற்றியுள்ளது. இதனை ஒரு கட்டமைப்பு சார்ந்த குறைபாடாகக் காண்பிக்கவில்லை. இரண்டாவதாக, அரசின் வாக்குறுதிகள் மற்றும் செயல்பாடுகளில் உள்ள முரண்பாட்டை இது காண்பிக்கிறது. “ஒரே தேசம், ஒரே சந்தை”  என்று உரக்க முன்மொழிந்த அரசு, விவசாயிகள் இலாபகரமான சந்தையை (வெங்காயத்தைப் பொறுத்த வரை ஏற்றுமதி சந்தைகள்) அணுகுவதை தாமதப்படுத்துகிறது என்பதே எதார்த்தம். விலைகளின் மீது விரைவாக கட்டுப்பாட்டைப் பெறவே இத்தகைய நடவடிக்கையை அரசு கையாள்கிறது. மூன்றாவதாக, உதவியற்ற தன்மையானது மத்தியதர வர்க்கத்தின் பொது உணர்வோடு நன்றாக ஒத்துப்போகிறது. கட்டுப்பாடான பட்ஜெட் நெருக்கடிகளின் கீழ் செயல்படும் மத்திய தர வர்க்கம்தான் ஆளும் கட்சியின் முக்கிய வாக்கு வங்கி. இத்தகைய உணர்வு பூர்வமான அரசியல், முக்கியமான அம்சங்களை விளிம்புநிலைக்குத் தள்ளும் சுமையுடன் இருக்கிறது என்பது ஓர் அசௌகர்யமான விஷயம்.

எடுத்துக்காட்டாக, அரசின் விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கைகள் விவசாயிகளை உணவை நுகர்வோராகவும் ஒட்டுமொத்த வாங்குனர்களாகவும் மாற்றியிருப்பதைக் காண முடிகிறது, அல்லது யதார்த்தத்தில் இத்தகைய கொள்கைகள் எத்தகைய வாடிக்கையாளர் பாரபட்சத்தை முன்னிறுத்தி, எந்த அளவிற்கு வாடிக்கையாளர்களுக்கு உதவுமாறு உள்ளன என்பது போன்ற அடிப்படை விவகாரங்கள் பொது வெளியில் மௌனமாக்கப்பட்டுள்ளன. ஆனால் அடிமட்டத்தில் கிடைக்கும் சான்றுகள் இத்தகைய முன்னிறுத்தலினநேர்மை மீது பெரிய கேள்விக்குறியை இடுகிறது.

விளைச்சலுக்குப் பின் உள்ள பகுதியில்தான் பெரும்பாலம் காய்கறிகளின் சில்லறை விலையில் 60%-70% நிர்ணயிக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் இடைத்தரகர்கள்தான் விலையையும் விளிம்புகளையும் நிர்ணயிக்கிறார்கள். விவசாயிகளுக்கு விலைகளின் மேல் பெரிதும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மற்றொரு புறம் விளிம்பு விலைகளின் பெரும் பகுதியை சில்லறை விற்பனையாளர்கள் நிர்ணயிக்கும்போது, சில்லறை பொருட்களின் விலை, ஒட்டு மொத்த பொருட்களின் மொத்த விலையுடன் ஒத்துப்போவது குறைவு. எடுத்துக்காட்டாக, தேசிய தோட்டக்கலைத்துறை ஆணையம் அளித்த தரவுகளின்படி, தில்லியில் வெங்காயத்தின் சராசரி மொத்த விலை 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு கிலோ ரூ.32லிருந்து கிலோ ரூ.20ஆகக் குறைந்தது. கடைசியில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், இதன் விலை கிலோ ரூ.9ஆகக் குறைந்தது.  ஆனால் சராசரி சில்லரை விலை கிலோ ரூ.49, ரூ.37, ரூ.38ஆக மாறியது. அதைப்போலவே, கடந்த சில வாரங்களில் தில்லியில் வெங்காயத்தின் சராசரி  ஒட்டுமொத்த விலை கிலோ ரூ.30லிருந்து ரூ.32 வரை இருந்தது. ஆனால் சில்லரை விலை ரூ.50லிருந்து ரூ.59ஆக மாறியது.

தற்போதைய சூழலில் அரசு ஏற்றுக்கொண்ட எந்த குறுக்கீடுமே, விளை பொருளுக்கும் சந்தைக்கும் இடையில் உள்ள கட்டமைப்பு ரீதியான குழப்பங்களையும் சரிசெய்யவில்லை. இதனால் ஒத்திசைவற்ற விலை பரிமாற்றம் உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் ஏற்பட்டது. இத்தகைய கொள்கைகளில்  வெறும் வார்த்தை ஜாலத்தைத் தவிர  எந்தவிதமான நுகர்வோர் நட்பிற்கான அம்சமும் தென்படவில்லை. மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியின் 2017ஆம் ஆண்டு அறிக்கையானது, எப்போதெல்லாம் அரசு உள்நாட்டு விலை உயர்வை ஊகிக்கிறதோ அப்போதெல்லாம் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வாடிக்கையாளர் பாரபட்சம் என்ற கருத்து கையில் உள்ளது என்று கூறுகிறது. நிலையான வர்த்தகக் கொள்கைகள் இல்லாதது ஒட்டுமொத்த விவசாயத் துறைக்கும் சலுகையை குறைக்கும் நடவடிக்கையாகும். ஒரு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிறுவி ஏற்றுமதியைத் தடுத்தல் (தற்போது ஒரு டன்னுக்கு 850$), அதாவது  ஏற்றுமதிக்கான  பாரபட்ச விலையிலிருந்து அதிகமாக்குதலால் (ஒரு டன்னுக்கு 300$) ஏற்றுமதியின் இலாபங்களை விவசாயிகளுக்கு மறுக்கும். சரியான இடைவெளியற்ற வர்த்தகமானது சர்வதேச சந்தையில் இந்தியாவின் நம்பகத்தன்மையை ஒரு ஏற்றுமதியாளராக பாதிக்கும், அவ்வாறே இந்நாட்டின் ஏற்றுமதிகளின் அலகு மதிப்பையும் பாதிக்கும்.

இங்கு விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவது என்றும் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாய விளை பொருட்களின் ஏற்றுமதியை 60 பில்லியன் டாலராக உயர்த்துவோம் என்றும் விவசாயத்தை அதிக திறன் கொண்ட தோட்டக்கலை பொருட்களாக விரிவுபடுத்துவது, பதப்படுத்தப்பட்ட விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வது என்றெல்லாம் பேசக்கூடிய அரசு ஆட்சி செய்கிறது என்பது  நகை முரண். ஆனால் நடைமுறையில் இந்த அரசானது விவசாயிகளை பாரம்பரிய “மண்டி” (சந்தை) முறையின் வரையறைக்குள் மட்டும் வைத்திருக்கும் நிலையை அரசு ஆதரிக்கிறது. இந்திய உணவு சந்தைகளில் புதிய பங்குதாரர்கள்  இருபது ஆண்டுகளாக உருவாகிய போதும், விவசாய உற்பத்தி சந்தை கமிட்டியின் ஒட்டுமொத்த சந்தைகள்  புதிய பங்குதாரர்களின் தேவைகளின் தரத்தையோ அளவையோ பூர்த்தி செய்ய போதுமான அளவு மாறவில்லை. இத்தகைய மாற்றத்திற்கான எத்தகைய கொள்கை மாற்றமும் ஏற்படவில்லை. விளைநிலம் சாராத மக்கள் மத்தியில் உள்ள பாதிக்கப்பட்ட நுகர்வோரிடம் அரசு காட்டும் பாரபட்சமானது விவசாய சந்தைகளில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளையும் சமமற்ற விலை பரிமாற்றங்களின் எதார்த்தத்தையும் பாதிக்கும். இந்தியாவில் நுகர்வோர் விலை அதிகமாக இருந்தால், அது தொடர்பான விவசாய இலாபமும் உயர்வாக இருக்கும் என்று கிடையாது. இந்த உண்மையை ஒருவர் மறுக்கலாகாது. உணவுப்பொருட்களை வாங்கும் விவசாயிகளும்  பிற நுகர்வோர்களைப்போல் விலை ஏற்றத்தினால் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது?

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top