இன்றைக்கு காந்தியை வாசிப்பது குறித்து …
.
காந்தி, விவாதிக்கக்கூடிய விதத்தில் மிகவும் ஏராளமாக எழுதப்பட்டிருக்கிற, அதே சமயத்தில் மிகவும் உக்கிரமாக வெறுக்கக்கூடிய ஒரு சிந்தனையாளராகவும், சிலரால் மாபெரும் மக்கள் தலைவராகவும் மதிக்கப்படக்கூடியவர். அதே சமயத்தில், வேறு சிலரால் எளிதில் தள்ளப்படக்கூடியவராகவும் இருக்கிறார். இப்போதும் பலர் அவரது சிந்தனைகளையும், இந்தியாவில் அந்நியர் ஆட்சிக்கு எதிராக தேசிய இயக்கத்தை ஒருங்கிணைத்துக் கொண்டுசென்ற அவரது அரசியல்நிலைப்பாட்டையும் விமர்சிப்பது தொடர்கின்றன. அவரை வெறுப்பவர்களுக்கு, அவரை வெறுப்பதற்கான விவாதம் தேவையில்லை. ஏனெனில், ஒருவரை வெறித்தனமாக வெறுப்பதற்கு, காரண காரியங்கள் தேவையில்லை. வெறுப்பு மற்றும் அவமதிப்பு ஆகிய இரு குணங்களும் நாசகரமான கூறுகளாகும். இவை தங்களுக்கான அடிப்படையை எவ்விதமான ஆரோக்கியமான விவாதங்களின் அடிப்படையிலும் பெறுவதில்லை, மாறாக வரலாற்றுரீதியாக எதிராளிகளுக்கு எதிராக ஏற்றிவைக்கப்படும் தவறான மதிப்பீடுகளே போதுமானதாகும். அவர்கள் காந்தியுடன் நேரடியாகவோ அல்லது காந்திய அறிஞர்கள், விமர்சகர்கள் மற்றும் அவர்குறித்து உரைபெயர்ப்பாளர்கள் அளித்துள்ளவற்றுடனோ எப்போதுமே ஈடுபட்டதில்லை போன்றே தோன்றுகிறது. மாறாக, அவர்கள் காந்தியை ஆதரிப்பவர்களைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதற்கு ஒரு நோக்கமும், சௌகரியமும் உண்டு.
காரண காரியங்களை அலசி ஆராயும் முறைகளில், காந்தி ஒருவேளை அவருடைய சிந்தனைகளை அதிகாரபூர்வமாகவும், உறுதியுடனும் கண்டுகொள்ளாமல் மறுக்கக்கூடியவர்களை ஏற்காதவர் போல் தோன்றக்கூடும். அதனால்தான் அவரை வெறுப்பவர்கள், அவர் சிந்தனை குறித்து முழுமையான மற்றும் முடிவான சித்திரத்தை அளிப்பதில் சிரமப்படுகிறார்கள். அவருடைய எழுத்துக்கள், மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதன் காரணமாக மிகவும் நன்றாகவும், தெளிவாக வகைப்படுத்தக்கூடிய குணாதிசியங்களையும் கொண்டிருப் பதில்லை. இவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் அவை இருப்பதன் காரணமாக காந்தியை பல்வேறு “அவதாரங்களாக” சித்தரிப்பதில் “ஈடுபடுவதற்கு” அறிஞர்களை அனுமதிக்கிறது. இவ்வாறு காந்தி ஒரு பின்காலனித்துவவாதியாக, சர்வதேசியவாதியாக, மாற்று நவீனத்துவவாதியாக, பின்நவீனத்துவவாதியாக, இலட்சியவாதியாக, நடைமுறைவாதி யாக, பெண்ணியவாதியாக, தலைவருக்குக் கீழ்ப்பட்டு நடப்பவராக மற்றும் இறுதியாக சமூகத்துவவாதியாகவும் மற்றும் தாராளமய வாதியாகவும் வகைப்படுத்தப்பட்டு பல்வேறு வண்ணங்களில் காட்சி அளிக்கிறார். உண்மையில், சிந்தனையில் வெளிப்படைத் தன்மை அல்லது சிந்தனையின் வெளிப்படைத்தன்மை, காந்தியை எதிர்ப்பவர்களில் சிலரை இன்றைய தினம் மிகவும் கேவலமானமுறையில் நெறிமுறை ஒழுக்கமற்றவர்களாக, அரசியல் பாசாங்குப் பேர்வழிகளாக, அறிவார்ந்த முறையில் இயலாதவர்களாக, விரக்தியடைந்தவர்களாக அல்லது பதட்டம் நிறைந்தவர்களாகக்கூட ஆளாக்கி இருக்கிறது. அவர்கள் காந்தியைக் கையாள்வதில் ஒரு விவாதத்திற்குத் தயாராக இல்லாததால் அல்லது விவாதத்தில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதால் அருவருப்பானவர்களாக மாறி இருக்கிறார்கள். அவரை அறிவார்ந்த முறையில் தாக்குவது எப்படி எனறு தெரியாததால் இவர்களில் சிலர் விரக்தியடைந்திருக்கிறார்கள். காந்திய மரபினைத் துடைத்தெறிய விருப்பப்படுகிறவர்கள்கூட, தங்கள் குறிக்கோள்களை எய்தமுடியாத காரணத்தால், பகட்டுப்பேச்சு நோக்கங்களுக்காகவாவது, காந்தியுடன் குறைந்தபட்சம் இணைந்துகொள்ளத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய “அரசியல் பாசாங்குத்தனம்” அல்லது “மகிழ்ச்சியற்ற மன உணர்வு” அவர்களின் மறைக்கப்பட்டிருக்கிற நோக்கத்திற்கும், வெளியில் வெளிப்படுத்துகிற வார்த்தைகளுக்கும் இடையே ஓர் எல்லையை ஏற்படுத்த வேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளியிருக்கிறது. காந்திஜி, தன் சிந்தனையை வெளிப்படுத்தும் விதம், பேச்சுத் தொடர்புடையது. அது பழைமைவாதக் கூறுகள் மீது அறிவார்ந்த வளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதன் மூலமாக உரையாடல்களை வற்புறுத்துகிறது. காந்திஜியைப் பொறுத்தவரையிலும், அவருக்கு இவை இந்திய அறிவுசார் பாரம்பர்யங்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவருடைய சிந்தனை பெரும்பாலும் அவருக்குள்ளிருந்தே செயல்படுகிறது. காந்தியின் சிந்தனைகள் அறிஞர் பெருமக்களின் அறிவார்ந்த வரைபடத்தின்மீது ஒரு சீரான பிரதிபலிப்பை உருவாக்கிடவில்லை. அறிஞர்களால் சரியாகவே விவாதித்துக் கூறியதைப்போல, அவர், மேற்கத்திய பொது அறிவு இயலுக்கு இந்தியர்களை அறிவார்ந்தமுறையில் அடிமைப்படுத்து வதற்கு எதிராக ஒரு வழக்கினை ஏற்படுத்தினார். காலனிய ஆதிக்கத்திற்கு எதிராகவும், அதேபோன்று உள்நாட்டிற்குள் சமூகத்தின்மீது பிராமணீயப் பிடி இறுகி இருப்பதற்கு எதிராகவும் மக்களைத் திரட்டுவதற்கு எது பொருத்தமில்லை என அவர் நினைத்தாரோ அவற்றைத் தவிர்க்கக்கூடியவிதத்தில் அறிவார்ந்த விழிப்புணர்வை அவர் காட்டியது ஆர்வத்தினை ஏற்படுத்துகிறது. எனவேதான் அவர் சேவை மனப்பான்மை, இரக்கம் மற்றும் உபதேசம் போன்றவற்றை பாமர மக்கள் மத்தியில் பயன்படுத்திய அதே சமயத்தில், அந்நிய ஆட்சிக்கு எதிராக சகிப்புத்தன்மை, அஹிம்சை, ஒத்துழையாமை போன்ற பாஷையை மிகவும் வலுவாகப் பயன்படுத்தி இருக்கிறார். ஏனெனில் இதுபோன்ற பாஷை சாமானிய மக்களை ஈர்க்காது என்று அவர் கருதினார். இத்தகைய மொழிக்கு உள்ளே இருக்கும் உணர்வுபூர்வமான அம்சம், பகுத்தறிவின் வலிமையை மட்டுப்படுத்த முயல்கிறது. அறிவாற்றலை வகைப்படுத்தும் அடித்தளமாக இது செயல்படுகிறது. “ஹரிஜன்” என்கிற சொல், மற்றொரு பிரபலமான அறிவாற்றலற்ற வகையைச் சேர்ந்த சொல்லாகும். இது, சாதி இந்துக்களின் சமூக நிலைப்பாட்டுடன் சமமான முறையில் மட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சொல்லாகும். இத்தகைய நடவடிக்கை வழியாகத்தான் காந்தி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அனைத்துத் தரப்பினரையும் அணிதிரட்டுவதில் மிகவும் வெற்றிகரமான தலைவராக உயர்ந்தார். இதுபோன்ற சொற்கள் எதிரிகள் எவரையும் உடனடியாக தொந்தரவு செய்வதில்லை என்பதால், இவை சாமானிய மக்களை மிகவும் பாதுகாப்பானதாகவும், சௌகரியமானதாகவும் உணர வைப்பது இயற்கையே. இவ்வாறு, காந்தியின் சிந்தனை இந்திய மக்களின் ஆதரவினைத் திரட்டுவதில் வலுவான சொற்களாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக அடிப்படையில் அதன் சமூகத் தளத்தில் வெளிப்படைத்தன்மையைப் பெறுகிறது.
காந்தியின் சிந்தனை எந்த அளவிற்கு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது என்றால், இது, இதில் உள்ள சாராம்சமாக இருந்தாலும் சரி அல்லது பயன்படுத்திய சொற்களாக இருந்தாலும் சரி, எவ்விதமான தணிக்கையையும் திணித்திடவில்லை. அவருடைய சிந்தனைகள் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும், பல்வேறு விதங்களில் வியாக்கியானம் செய்வதற்கும் ஏற்றவகையில் மிகவும் எளிதாக அணுகத் தக்கனவாகும். அவருடைய சிந்தனைகள் எவ்விதமான விதிகள் மூலமாகவோ அல்லது நெறிமுறைகள் மூலமாகவோ ஒழுங்குபடுத்தப்படுவதை மறுக்கிறது. அவருடைய சிந்தனைகள், விசாரணை அல்லது கண்டுபிடிப்பு என்னும் திறந்த வெளியில் கிடப்பவை. எனினும், காந்தியின் சிந்தனையில் வெளிப்படைத் தன்மை என்றால் அதன் பொருள் எதற்கும் கட்டுப்படாத, மனம்போன போக்கில் கூறப்பட்டவை என்பதல்ல. உண்மையில், அவருடைய சிந்தனையின் மையக் கரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஓர் அறநெறிச் சமூகத்தை உருவாக்குவது என்பதேயாகும். காந்தியின் சிந்தனைக்கு குறிக்கோள் இல்லாமல் இல்லை. அதேபோன்று அறநெறிச் சமூகத்தையும், மனிதகுலத் தையும் உருவாக்கும் பொறுப்பும் இல்லாமல் இல்லை. இந்தியாவின் பார்வை என்பது இந்தியாவை திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லா இந்தியாவாக மாற்றுவதற்காக மட்டுமல்ல, மேலும் அடிப்படையான விதத்தில், தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிற “சாதிய மனப்பான்மையிலிருந்தும்” விடுவிப்பதற்காகவும், மக்களை அணிதிரட்டுவது இன்றைக்கும் பொருத்தமுடையதேயாகும்.