ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

வழிமுறையில் நியாயம் என்பது யாருக்கு முக்கியம்?

.

எந்த சமூகத்தில் தனிநபர் தனித்துவம் என்ற தாராளமயக் கொள்கை உள்ளதோ, அது தொடர்பான தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் உள்ளதோ அவர்களுக்கு வழிமுறையில் நியாயம் என்ற குறிக்கோள் மிகவும் முக்கியம்.  புலனாய்வு (காவல்துறை) மற்றும் உறுதிப்படுத்தும் புலன் விசாரணை (தடயவியல் நிபுணர்கள்) முகமைகளாலும்  அவர்களின் வெளிப்படையான திறமையான செயல்பாட்டாலும்  வழிமுறையில் நியாயம் என்ற குறிக்கோளுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. காவலர்களும் தடயவியல் நிபுணர்களும் அவர்களது நிபுணத்துவத்தையும் அறிவையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சாட்சியங்களை உண்டாக்குவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். குற்றவியல் சட்ட அமைப்பில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் ஒரு தனிநபருக்கு நீதி கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். இந்த உணர்வில் நியாயம் என்பது பின்வரும் சொற்றொடருடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும்,  ‘நீதி கிடைப்பது மட்டுமல்ல,  நீதி கிடைப்பது போல் தெரியவும் வேண்டும்’.

நீதியானது நியாயமான வழிமுறையின் பின் உள்ளது.  குற்றவியல் நீதி முறை என்ற குறிப்பிட்ட சூழலில் நியாயம் என்பது பாரபட்சமற்றது மற்றும் அறிவியல்  பூர்வமான நடுநிலையானது என்று தடயவியல் சோதனைக்கூடம் போன்ற உறுதியான முகமைகளால்  வரையறுக்கப்படுகிறது. இவை சில வழிமுறைகளுக்கு கட்டுப்பட்டது. குற்றவழக்குகளை புலன் விசாரணை செய்பவர்கள் பாரபட்சமற்று இருக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட சாட்சியங்களின் மூலம் பெறப்பட வேண்டும் என்று தெரிகிறது, இவற்றை எந்தவிதமான நீர்த்துப்போதல் மூலமோ அல்லது தந்திரத்தின் மூலமோ வளைக்க முடியாது. இதனை வேறுவிதமாக சொல்ல வேண்டுமென்றால், சாட்சியங்களை நீர்த்துப்போகச் செய்கிறார்கள் என்றோ அல்லது அதனை முற்றிலுமாக அழிக்க முயற்சிக்கிறார்களோ என்றோ அவர்களை குறை சொல்ல முடியாது. 

புலனாய்வு என்பது இயந்திர நடவடிக்கை அல்ல. இதில் தங்களின் விசித்திரங்களுடன் தனிநபர்கள் ஈடுபடுவார்கள். இவற்றை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டாலும் அவர்களால் இதனை மாற்றிக்கொள்ள முடியாது.  காவல்துறை பாரபட்சமற்று செயல்படுவதில் சந்தேகம் உண்டாவதும் அரசியல் ரீதியான பாதுகாப்பு கிடைப்பதும்  உலகளாவிய பிரச்சினைகள். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. எனினும், இவற்றால் நீதி கிடைப்பதற்கான தோற்றம் மாறலாம், அல்லது குற்றவியல் சட்டத்தின் பெயரளவிலான மதிப்பு குறையலாம். முறைசார்ந்த மற்றும் வழக்கு சார்ந்த சாதகங்கள் சாட்சியை நீர்த்துப்போக வைக்கும். புலனாய்வை தாமதப்படுத்தும், இறுதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்வதும் தாமதமாகும்.  காவல் துறையினரும் தடயவியல் நிபுணர்களும் குறிப்பிட்ட முறைகளின்படி பணிபுரிகிறார்கள், ஆனாலும் அவர்ளுக்கே உள்ளே இருந்து செயல்படும் சில சக்திகள் அறிவின் பலம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றை அனுபவிப்பதுபோல் தெரிகிறது. இது சில வழக்குகளில் நீதி கிடைப்பதற்குத் தடையாக உள்ளது.  

 

 

Back to Top