அதிகாரத்தின் மொழியா அல்லது மக்களின் மொழியா?

ஒற்றை மொழியின் முப்பட்டகம் வழியாக இந்தியாவைக் காண்பதும் அடையாளப்படுத்துவதும் விரும்பத்தக்கது அல்ல

 

இந்தி திவசின்போது, உள்துறை அமைச்சர், இந்தி பொதுவான இணைப்பு மொழியாக முடியும், நாட்டை இணைப்பதற்கும் உலகளாவிய அடையாளமாக மாறுவதற்கும் இந்தியால் முடியும் என்று ஆலோசனை கூறினார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஆழமான குறிக்கோளை நாடு அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த வழியில் அல்லாமல், ஒரே அடையாளத்தின்படி ஒற்றுமை என்ற குறிக்கோள் போல் உள்துறை அமைச்சரின் பேச்சு தோன்றுகிறது. இந்தியை திணிப்பதற்கான முயற்சி அல்ல என்று இது தொடர்பான அமைச்சர் மறுத்துள்ளபோதும், இந்த திசையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட முயற்சிகள், தேசிய வரைவு கல்விக்கொள்கை 2019இல் இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதற்கு முயற்சி எடுத்தது உட்பட, பலர் மத்தியில் இது ஓர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாடு, ஒரு மொழி என்னும் குறிக்கோளை நோக்கி இது நகருமோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் மாநிலங்களை ஒருங்கிணைப்பதற்கு வழிகாட்டியாக இருந்த கொள்கையானது  அடிப்படையில் மொழிவாரியானது, அதனால்தான் நாடு பல மொழிகள் சார்ந்த கூட்டமைப்பாக உருவாகியது என்ற உண்மையை இந்த அறைகூவல் புறக்கணித்திருக்கிறது. இந்தியர் என்பதற்கும் தமிழர் என்பதற்கும் எந்த முரண்பாடும் கிடையாது, ஆனால் உண்மையில் இந்தியர் என்பது முன்னதை அடிப்படையாக வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரே தேசம், ஒரே மொழி  என்ற அறைகூவல், இந்தியாவின் தேசியத்தை உருவாக்குவதில் இருந்த எதார்த்தத்தைக் குழப்புகிறது. இந்த எதார்த்தமானது மொழிவாரியான, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்தது. இது வரை இந்த மாதிரியானது செயல்படுவதற்கு  உதவியுள்ளது. ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிக்கும் எந்தவிதமான முயற்சியும் உரசல், மோதல் மற்றம் பிரிவினைக்கான சூழலை உருவாக்கும் வல்லமை  கொண்டது.

அடிப்படையிலேயே மொழி என்பது ஒரு ஜனநாயக அமைப்பு, உள்ளார்ந்த வகையில் பன்முகத்தன்மை கொண்டது. இதனை பயன்படுத்தி நிலையாக வடிவமைப்பவர்களின் பணி மற்றும் வாழ்க்கை முறைகளுடன் ஆழமான தொடர்பு கொண்டது. எந்த பிராந்தியங்களில் வாழ்வாதார சந்தர்ப்பங்கள் உண்டோ அங்குள்ள மக்கள் பிழைக்கும் இடங்களில் மொழியும் பிழைக்கும், வாழும். இந்திய மக்களின் மொழி தொடர்பான ஆய்வறிக்கை 2010இன்படி 780 மொழிகள் உயிர்ப்புடன் உள்ளன. முந்தைய ஐம்பது ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துவிட்டன என்றும் அந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது. இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று முன்னெப்போதும் இல்லாத புலம்பெயர்தலும் இடமாற்றலும் ஆகும். இந்த தீவிரமான மொழிசார்ந்த பன்முகத்தன்மையை ஒப்புக்கொண்டு கொண்டாட வேண்டிய தேவை உள்ளது.  அதைப் போலவே, பல்வேறு மொழிகள் அழிந்தது குறித்தும்  அதனால் ஏற்பட்ட சொல்லொணா நஷ்டம் குறித்தும் பதிவு செய்ய வேண்டிய தேவை உள்ளது.

இத்தகைய புலம்பெயர்தலின் பின்னணியில், எந்தவிதமான மொழி தொடர்பான விவகாரமாக இருந்தாலும், கூட்டாக வாழ்தல்தான் அதனைத் தீர்ப்பதற்கான வழி, ஒருமுகப்படுத்தல் முடிவல்ல. பல மொழிகள் உள்ள நகரங்களில் ஒற்றை ஆதிக்க மொழி சார்ந்த அடையாளத்தை உறுதிப்படுத்தலும் அரசின் கொள்கைகளிலும் அரசியலிலும் ஒரே மொழிக்கான  மேலாதிக்கத்தை ஆதரித்தலும் இயல்பான பரிமாற்றத்தையும், மொழி சார்ந்த கலாச்சாரங்களுக்கு இடையிலான பரஸ்பர கற்றலையும் பாதிக்கும். இது அதிருப்தியை வளர்க்கும். ஒருவரது சொந்த மொழியில் எளிதான உறவைப்  பேணுவதும், பல்வேறு பிராந்திய மொழிகளுக்கு இடையில் பரஸ்பர உறவை வளர்ப்பதும் ஏன் எளிதாக இல்லை? பரஸ்பர கலாச்சார பரிமாற்றம் மூலம் மொழியின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும், அல்லது மற்ற கலாச்சாரங்கள் மற்றும் உலகப் பார்வைகளுக்கு இணையாக முடிவடையும் பிரிவினைவாத மேலாதிக்கத்தை உறுதிப்பாடாகக் கூற முடியுமா?

பெரும்பாலானோர் பேசும் இந்தி பொதுவான ஒருமைப்படுத்தும் மொழியாக உரக்கப் பேசப்படுகிறது. தென்னக மாநிலங்கள் தங்கள் மொழி செல்வவளம் மிக்கது, பழமையானது என்று இதற்குக் கண்டனங்கள் எழுப்பியுள்ளபோதும், இன்றைய தினம் உள்ள இந்தியால்  இந்தியாவின் ஒரே மொழியாக மாற முடியுமா என்று கேட்கவேண்டியுள்ளது?  இதனைத் திணிப்பதையும் விட, அதன் சராசரி வளர்ச்சிக்கு ஏதேனும் முயற்சி எடுக்கப்படுகிறதா? சமஸ்கிருத தாக்கம் மிக்க இந்தி இணக்கமாக தோற்கவில்லை, அதன் மேலாதிக்கமே தலைதூக்குகிறது. இத்தகு சூழலில் இந்தியை திணித்தல்தான் ஒரே வழியா? சர்காரி இந்தி எனப்படும் அரசுத் தரப்பு இந்தியானது மிகவும் கலப்பு மிக்க, நெகிழ்வான, வரவேற்கக்கூடிய, பொதுமக்களின் அரவணைப்பிற்கு ஏற்ற மொழியாக இருந்தபோதும், எப்போதும் விமர்சனத்திற்கு உட்பட்டது. இதனை கம்பீரமாக்குவது என்ற பெயரில் இதனை சிக்கலாக்கக் கூடாது என்று பிரபல இந்தி சினிமாக்களும் இலக்கியமும் குறிப்பிட்டுள்ளன. இதனை மேட்டுக்குடியின் மொழியாக மாற்றக்கூடாது என்றும் கூறப்படுகிறது. வர்க்க ரீதியான, சாதி ரீதியான சுத்தமான களங்கமற்ற இந்தி அதிகாரத்தின் மொழியாக இருக்க முடியுமே தவிர, மக்களின்  மொழியாக இருக்க முடியாது. எனவே அதனை அளவாக திருத்தி திணிப்பது அதன் சகோதர மொழிகளுக்கு அடிக்கும் சாவு மணியாகும். குறிப்பாக உருது அல்லது அதன் வழக்காறுகளாக ஒதுக்கப்பட்ட மொழிகள், வெகு விரைவாக வளர்ந்து வரும் போஜ்புரி, மறைந்து வரும் மொழிகளான குமானி போன்றவை பாதிக்கப்படும்.

இந்தி பேசும் பகுதியில் உள்ள பெரும்பாலோர் இந்தியை ஒழித்து ஆங்கிலம் பேசுபவர்களாக மாற விரும்புகின்றனர். இந்தி பேசவோர் என்ற அடையாளம் பலருக்கு சுமையாக உள்ளது. இதனை தாழ்வு மனப்பான்மையாகக் கருதுகின்றனர். வாழ்வின் முக்கியமான கால கட்டங்களில் இத்தகு தாழ்வு மனப்பான்மையுடன் போரிட்டு காலத்தை பல இளைஞர்கள் வீணாக்கி, மிகவும் மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர், ஏனெனில் வாழ்வாதார வாய்ப்புக்களையும் உயர்வான வளர்ச்சியையும்  அளிப்பது ஆங்கிலம்தான், நல் வாழ்விற்கான கதவுகளை ஆங்கிலம் மட்டும்  தான் திறக்கும் என்று தெரிகிறது. இந்தியைப் பேசும் மக்கள் மத்தியிலேயே இந்தியா தனக்கான கௌரவத்தை ஏன் பெறவில்லை என்று மற்றொரு கேள்வி எழுகிறது. தங்கள் வீடுகளில் அதனை மாற்றி ஆங்கிலத்தை நடைமுறைப்படுத்த அவர்கள் ஏன் தயாராக இருக்கிறார்கள்? ஒரு  மொழியை திணிப்பதால் மற்ற மொழியை திணிப்பது ரத்து செய்யப்படுமா?

வாழ்க்கையின் மொழிக்கும் கற்றலின் மொழிக்கும் இடையிலான இடைவெளிகளை இணைக்க ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்படுகிறதா? இதற்காக ஏதேனும் கற்றல் முறைகள் உள்ளனவா? மற்றும் சொந்த மொழியில் அறிவுசார்ந்த விஷயங்கள் உருவாக்கப்படுகின்றனவா? கல்வியாளர்களும் இலக்கியகர்த்தாக்களும் இதனை பெருமையாகவும், இதில் எழுதுவதைத் திருப்திகரமாகவும் உணர்கிறார்களா? இதன் இலக்கியத்தை செழுமையாக்க முயற்சிகள் எடுக்கப்படுகிறதா, அப்படி செய்வதன் மூலம் சமூக பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறதா? இதனைப் பயன்படுத்துபவர் மத்தியில் இதனை உருப்படியாக்க முடியுமா? எது தேவை என்றால் ஒருமுகப்படுத்துவதற்காக ஒரு பொது மொழியைத் திணிப்பது அல்ல, ஆனால் மக்கள் ஒன்றுபடுவதற்கு தேவைப்படும் காரணங்களை அளிப்பதும் அதற்கான தளத்தை உருவாக்குவதும்தான் தேவை.  ஒரே மொழி என்பதைவிட, பல மொழிகள் என்பதுதான் இந்தியாவின் அடையாளமாக இருக்க முடியும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Biden’s policy of the “return to the normal” would be inadequate to decisively defeat Trumpism.