ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தன்னாட்சி அரசியலைப் புரிந்துகொள்வது

.

தேர்தல் ஜனநாயகம் குறித்த தற்போதைய உரையாடல்களில், உட்கிரகித்து தன்மயமாக்குதல் மற்றும் தன்னாட்சி என்ற இரண்டு முரண்பட்ட பாணிகளை ஒருவரால் காண முடியும். வாதமிடுவதற்கு ஏற்றபடி, உட்கிரகித்து தன்மயமாக்கும் பாணி பாரதீய ஜனதா கட்சியுடன்  (பாஜக) தொடர்புடையது. மற்ற கட்சிகளின் தலைவர்களை தங்கள் கட்சிக்கு இழுத்து வருவதில் இந்தக் கட்சி பெருமையடைகிறது. சந்தர்ப்பவாத மேல்மட்டக்காரர்கள் மேலடுக்கிலிருந்து மேலடுக்குக்கு தாவும் அரசியல் பாணியை,  தனது நாடாளுமன்ற குணமாக பாஜக உறுதிப்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை அதன் “கம்பீரமான” வழியில் வரையறுக்கும் படுக்கைவாட்டு நடவடிக்கை இது. இந்தக் கோணத்தின் மறுபுறம், கீழ்மட்டத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களை நீங்கள் காணலாம். இந்தப் பிரிவினரின் தேர்தல் ஒருங்கிணைப்பின் மட்டமாக அவர்கள் அரசியல் தன்னாட்சியை பயன்படுத்துகிறார்கள். தன்னாட்சி மிக்க அரசியல் நிறுவனங்களாக இந்த அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தன்னாட்சி அரசியலுக்கான கோரிக்கைகள் ஒருவிதமான ஐயுறவு வாதத்தை ஏற்படுத்தும். தன்னாட்சிக்கான இத்தகைய எத்தனை கோரிக்கைகளை தன்னாட்சி மறைத்திருக்கிறது, எவ்வளவு கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறது என்று வியப்பதற்கு ஒருவர் துவங்கியிருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் உடனடியாக உருவாகும் அரசியல் உருவாக்கங்களின் மூலம் அரசியல் அதிகாரத்தை நம்பிக்கையுடன் ஒருவர் கைப்பற்ற எந்தவிதமான உறுதிமொழிகள் வெளிவருகின்றன என்று இந்த தன்னாட்சி கோருகிறது. இந்த தலைவர்களுக்கு நியாயமாக இருக்கவேண்டுமென்றால், ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும. இந்தத் தலைவர்கள் விளிம்பு நிலை மக்களுக்காக உள்ளார்கள் மற்றும் அவர்களது உள்ளுணர்வு சரியாக உள்ளது. எனவே இந்த பிரிதிநிதிகளின் பார்வையில் இந்த முடிவுகள் சரியாக இருக்கும். ஆளும் கட்சிக்கு எதிராக வெளியில் உள்ள பெரிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடுவதற்கான முடிவுகள் மற்றும் ஒரு தொகுதிக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது ஆகியவை மூன்று முக்கிய விஷயங்களை சோதனைக்கு உள்ளாக்குகிறது. முதலில், எதார்த்த நிலையில், ஒரு தொகுதிக்கும் மேலே போட்டியிடுவது என்ற முடிவு  அந்தக் கட்சிகளின் தேர்தல் வலிமையை பகுத்தறிவு ரீதியாக எடைபோடுவதை ஏமாற்றுகிறது. தேர்தல் நேரங்களில் இந்த தலைவர்கள் நடத்திய பழைய மற்றும் புதிய அரசியல் உருவாக்கங்களுக்கு தேர்தல் வலிமை கிடையாது. இவை பல்வேறு தொகுதிகளில் பரவியுள்ளன. இந்தப் பிரதிநிதிகள் பலவீனமான அடிப்படையில் பல்வேறு இடங்களில் போட்டியிட முடிவு செய்கின்றனர். இந்த அனைத்து தொகுதிகளிலும் தங்களுக்கென்று வாடிக்கையாக உள்ள வாக்காளர்களைத் தக்க வைக்க முயற்சிக்கின்றனர்.

இரண்டாவதாக, இந்தத் தன்னாட்சியானது மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளை ஸ்திரப்படுத்துவதற்கு எதிராகப் பணிபுரியும். சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவதினால் தேர்தல் களத்தில் வலதுசாரிக் கட்சிகளுக்கான வலிமை கூடும். இதனால் அவர்கள் ஆதரவில் உள்ள குழுக்களின்  ஒட்டுமொத்த நலனுக்கு இத்தகைய முடிவுகள் எதிரான விளைவுகளை ஏற்படுத்தும். விளிம்பு நிலையில் உள்ள இத்தகைய மக்கள் வேறுவிதமாக குறிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களது அடையாளத்திற்கு ஒரு களங்கப்பட்ட பொருள் உண்டு. தேர்தல் ரீதியாக தன்னாட்சி மிக்கவர்கள் என்று இந்த தலைவர்கள் கோர முடியாது. ஆனால் அதே சமயம் இவர்களது தொண்டர்களை கலாச்சார ரீதியாக களங்கப்படுத்துபவர்களை எதிர்க்க இவர்களுக்கு முழுமையான சக்தி இல்லாமல் உள்ளது. இத்தகு சூழலில் தலைமை பெயரை சுமப்பது முரண் நகைதான். அதேசமயம் அடையாளத்தை  களங்கமாக்குபவர்களை நீக்க இது தேவைப்படுகிறது.

தன்னாட்சி என்ற குணம் பொறுப்புடன் வருகிறது. ஒரு தார்மீக குறிக்கோளாக அது சிலரின் எல்லைகளை உணர்வதை கட்டாயமாக்குகிறது. தன்னாட்சியை உறுதிப்படுத்துவதால் மட்டும்  சமத்துவம், சுதந்திரம், ஒடுக்கப்பட்ட மக்களின் கௌரவம் ஆகிய கேள்விகளுக்கு விடை காண முடியாது. ஆதிக்கப் பிரிவினர்கள் இவர்களை ஒரு பொருட்டாக மதிக்க தன்னாட்சியின் மொழி இந்த தலைவர்களுக்கு உதவலாம். தேர்தல் அரசியலில் இவர்களின் அரசியல் இருத்தலுக்கு சற்று கவனம் செலுத்தலாம். இவர்களது பேரம் பேசும் சக்தியை அதிகப்படுத்தலாம். ஆனால் சமூக விவகாரங்களில் குறுக்கிடுவதற்கு இவர்களை அது அனுமதிக்காது. தன்னாட்சிக்  குறிக்கோள் ஒருவரது முடிவில் சில தவறுகளை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் உணர வேண்டும். இத்தகைய தவறான முடிவுகளால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பும் இந்தத் தலைவர்களுக்கு உண்டு. தன்னாட்சி அரசியலுக்கு மாற்று வடிவங்களை கோரும் நம்பகத்தன்மை இந்தப் பிரதிநிதிகளுக்கு உண்டு. எனினும்,  தன்னாட்சி கோருவதற்கான தார்மீக மதிப்பு, ஒருவர் தனது தவறுகளை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார் மற்றும் தவறான அரசியல் முடிவுகளின் போதாமையை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார் என்பதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

தன்னாட்சி என்ற குறிக்கோளின் அடிப்படையில் உருவாகும் இத்தகைய முடிவுகளின் மீதுள்ள அழுத்தமானது, தனிநபர்கள் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட குழுவின் மீதும் அது உருவாக்கும் விளைவுகளைப் பொறுத்தது. ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்களுக்கு தன்னாட்சி சாதகமான விளைவுகளை உருவாக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக அது விரும்பத்தகாத விளைவுகளையும் உருவாக்கலாம். சாமானியனின் பார்வையில் பார்க்கும்போது தன்னாட்சி என்பது தனிநபர்களுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட வாழ்க்கை வாழும் நிபந்தனையில் தள்ளப்பட்டோரின் வாழ்க்கையை மேம்படுத்த அதில் பல்வேறு எல்லைகள் உள்ளன. ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் என்று கோருபவர்கள் தன்னாட்சிக் கொள்கையை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. தன்னாட்சியை தவறாக பிரயோகிப்பதால் தங்களால் எந்தக் கட்சிகளுடனும் கூட்டு சேராமல்  அரசியல் மாற்றை உருவாக்க முடியும் என்று  இத்தகைய தலைவர்கள் கருதுவதும் தவறான எண்ணமே. பேச்சுவார்த்தைக்கென சில இடங்களை தன்னாட்சி உருவாக்குகிறது. தன்னாட்சி பேச்சுவார்த்தைக்கு என்று சில இடைவெளிகளை விடுகிறது. ஆனால் பிற்போக்குத்தனமான அரசியலுக்கான மாற்றை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சியை மூடுவதற்காக இதனைப் பயன்படுத்தலாகாது. தன்னிச்சையாக இயங்குதல் மற்றும் படைப்பாற்றலுக்கான மாண்புக்காக தன்னாட்சி கொள்கையை பி ஆர் அம்பேத்கர்  பயன்படுத்தினார் என்பதை நினைவு கூர வேண்டும்.

Back to Top