வங்கிகள் இணைப்பு மனநிலையையும் தாண்டி

.

இந்திய வங்கித்துறையில் சிறியது இன்னும் அழகானதா? கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தியா பல்வேறு பொதுத்துறை வங்கி இணைப்புக்களை கண்டுள்ளது. ஆனால் சமீபகாலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக விரைவாக பொதுத்துறை வங்கிகள் இணைந்துள்ளன. குறிப்பாக. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஆகஸ்டு காலத்தில் இந்த நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. விஜயா வங்கி, மற்றும் தேனா வங்கிகளை பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைத்தது, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய நிதி அமைச்சர் மேலும் நான்கு இணைப்புக்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடனும், இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியுடனும் இணைந்துள்ளன. இந்த இணைப்பு நடவடிக்கையால் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை பாதியளவிற்குக் குறைந்தாலும், இணைக்கப்பட்ட வங்கிகளின் சராசரி அளவை இது அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, இணைக்கப்பட்ட பிஎன்பி வங்கி அதன் தற்போதைய அளவை விட ஒன்றைரை மடங்கு அதிகமாகும். கனரா வங்கியும் யுபிஐயும் அதன் அளவுகளிலிருந்து இரட்டிப்பாகும். ஆனால் இந்த அளவீடு இந்திய பொதுத்துறை வங்கிகளின் அலைபாயும் திறனை மீண்டும் வைத்திருக்க உதவுமா?

முதல் இடத்தில், வங்கிகளின் திறன் மற்றும் அளவு குறித்த எண்ணியல் சார்ந்த ஆதாரங்கள் குழப்பமாக உள்ளன. குறிப்பாக 10 பில்லியன் டாலர்கள் அளவு சொத்து மதிப்பு என்ற ஆரம்பநிலை அளவிற்குள் அனைத்துப் பொருளாதார அளவீடுகளும் உள்ளடக்கப்படுகின்றன. பெரிய அளவு என்பதாலேயே அவை சிறப்பாக செயல்படுகின்றன என்று பொருள் இல்லை. சில தனியார் வங்கிகள் அளவில் பெரியனவாக உள்ளன. ஆனால் பொதுத்துறை வங்கிகள் அவற்றின் அளவை விஞ்சி செயல்படுகின்றன. இருப்பினும் தனியார் வங்கிகளின் சொத்து மதிப்பினை சந்தை மதிப்புடன் ஒப்பிடும்போது அவர்கள் திணறுகிறார்கள். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு பாரத ஸ்டேட் வங்கி. தற்போதைய அரசின் முந்தைய ஆட்சியின் போது 2017ஆம் ஆண்டு இந்த வங்கி ஸ்திரமாக்கப்பட்டது. ரூ.52லட்சம் கோடிக்கு வணிகம் செய்த போதும், 22 சதவீதம் சந்தை பங்கு இருந்த போதும், எஸ்பிஐயின் ப்ரைஸ் டு புக்வேல்யூ ஹெச்டிஎஃப்சி வங்கியிலிருந்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. ஆனால் ஹெச்டிஎஃப்சி வங்கியின் வணிகமும் சந்தை மதிப்பும் எஸ்பிஐ அளவில் மூன்றில் ஒரு பங்கும் அல்லது அதற்கும் குறைவானதுதான்.

To read the full text Login

Get instant access

New 3 Month Subscription
to Digital Archives at

₹826for India

$50for overseas users

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Biden’s policy of the “return to the normal” would be inadequate to decisively defeat Trumpism.