ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பொது நிறுவனங்களின் கௌரவம்

.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

அரசியல் தளத்தில் “அவமானம்” என்ற வார்த்தைகள் போன்று  பல வார்த்தைகள் குழப்பவில்லையானால், அவற்றைக் கடப்பது சுவாரஸ்யமானது. ஆனால் இத்தகைய வார்த்தைகள் ஒரு பொது நிறுவனம் தொடர்பாகப் பயன்படுகிறது, அதுவும் அதனுடன் தொடர்புடைய தனிநபர்கள் மீது பயன்படுகிறது  என்னும் நோக்கில் இது சுவாரஸ்யமாக உள்ளது. இத்தகைய மொழியை பாரத பிரதமர் பொது இடங்களில் பல முறை பயன்படுத்துகிறார். அவமானம் என்ற தார்மீக ரீதியாக வலியைப் பெற்ற  அப்பாவி ஜார்கண்ட் அரசிற்கும் தனக்கும் இடையே உள்ள உறவை குறிக்க அவர் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார். இது சுவாரஸ்யமான தேடல் புள்ளிக்கு நம்மை இழுத்துச் செல்கிறது. பொது நிறுவனங்களை அவமானப்படுத்த முடியுமா, ஆம் எனில் எந்த அடிப்படையில் பொது நிறுவனங்களை அவமானப்படுத்த முடியும், அவற்றை தார்மீக ரீதியாக செல்லுபடியாகுமாறு எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்?

பொது நிறுவனங்கள் தார்மீக உணர்வை பெறுவதில்லை, அதனால் அவை அவமானத்தை உருவாக்குவதில்லை. ஏனெனில் அவை வெறும் கட்டிடங்கள். அதைப்போலவே மனிதர்களால் பிரயோகிக்கப்படும் அவமானத்திற்கு மனிதர்களே வருந்துகிறார்கள். இதனால் நிறுவனம் சார்ந்த நடைமுறைகள் வருத்தப்படுகின்றன. இந்த முறைகள் அவமானத்தை உண்டாக்குவதாகவும்  யார் கையாள்கிறார் என்பதைப் பொறுத்து அவமானமாகவும் கருதப்படுகின்றன. பொதுத்தன்மையினால் இந்த நிறுவனங்களுக்கு ஒரு அபத்தமான சுபாவம் உருவாகிறது, அவை ஒரு நபரை சேர்ந்தவை அல்ல. இந்த இரண்டு பரிமானங்களும் ஒரு நிறுவனத்திற்கு அவமானம் அளிக்கும் எந்தவிதமான  தொடர்பையும்  அனுமதிப்பதில்லை. ஒரு பொது நிறுவனத்திற்கு அவமானம் அளிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஒருவர் சாராமல் இருக்க,  அரசு அவமானப்படுத்தப்பட்டது என்று எவ்வாறு ஒருவர் புரிந்துகொள்வது-?

அவமானத்தை ஒரு வாங்கு பொருளாக கருதுவதன் மூலம் ஒரு பொது நிறுவனம் ஒரு நாட்டை அதன் ஜனநாயக மாண்புகள் மற்றும் குடியரசு குணங்களிலிருந்து மறுத்து வரையறுக்கிறது. அல்ல எனில் இவை ஒரு தனி நபருடன் நிலையான உறவை வளர்க்கும் அல்லது நிறுவன சக்தியைப் பெறும் நபர்களின் குழுவில் இருக்கும். ஒரு நபரின் அவமானம் குறித்த எதிர்மறை உணர்வு அல்லது மரியாதையின் நேர்மறை உணர்வு அந்த நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது. இந் உணர்வில் அவமானத்தின் மொழி இந்த நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. நன்னடத்தை கோரிக்கைகளை ஏற்படுத்தும் இந்த பொது நபர்களை உள்ளடக்கியவையே நிறுவனங்கள்.

நிறுவனங்கள் அவமானப்படுத்தப்படுகின்றன என்று கோரும்போது, இது நிறைவடையாத முழுமை பெறாத கோரிக்கையாகும். அப்பட்டமான காரணங்களின் அடிப்படையில் இது முழுமையானது மற்றும் நிறைவானது. இதனை வேறுவிதமாக வைத்தால், ஓர் அவமானம் நியாயமற்ற நன்னடத்தை குற்றச்சாட்டு. நல்ல நிர்வாகத்தில் சற்று மேம்பட்ட பதிவுகளை பெற்ற அரசுக்கு இது உரித்தானது. அரசு செய்யும் நல்ல காரியங்களுக்கு எந்தவிதமான மரியாதையையும் இந்த நியாயமற்ற குற்றச்சாட்டு காண்பிக்காது. அவமானம் என்றால் அரசினை நோக்கிய மரியாதை குறைவு, ஆனால் மக்களுக்கு நல்ல பணி செய்ததற்கான சான்று அரசிடம் உள்ளது.

எனவே அவமானப்படுத்துவதாக கோரப்படுவது தற்காலிகமான கோரிக்கை அல்ல. அது வலுவான காரணங்களால் நியாயப்படுத்தப்பட வேண்டும். நீதியின் அகலமான குறிக்கோளிடமிருந்து இதன் சக்தியை அது பெறுகிறது. இந்த கோரிக்கையை சரியான காரணங்கள் ஆதரிக்கவில்லை என்றால், நீதியின் பால் இல்லாமல் தவறான யூகத்தின் அடிப்படையில் நியாயமற்ற குற்றச்சாட்டுக்கள் உருவாகும். அரசு சரியான நேரத்தில் சரியான நடவக்கை எடுத்தால் இதற்கான காரணங்கள் உருவாகும். தற்போதைய வழக்கில் ஜார்கண்ட் அரசைக் கூறலாம். வரி ஏய்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும்  கும்பல் கொலைக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதன் மூலமும் ஒரு மாநிலம் தோன்றுகிறது. வன்முறையைத் தடுக்க அரசு முகமைகள் கும்பல் கொலை போன்ற செயல்களில் சரியான நடவடிக்கை எடுக்கும்போது  அந்த நிறுகூனங்களின் மீது உள்ள பொது மதிப்பு அதிகரக்கிறது. இந்த நிலைமைகள் ஒரு தாராளமய அமைப்பில், மக்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவதற்கு  அவசியம். இத்கைய நிலைமைகள் பல்வேறு  மாநில அரசுகளில் , தற்போதைய ஜார்கண்ட் அரசு உட்பட  இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். கும்பல் வன்முறையைத் தடுக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அவமானம் என்று கோருவது இந்த அரசின் செயல்பாட்டை விமர்சன ரீதியாக பாராட்ட முடியவில்லை . விமர்சன ரீதியான மதிப்பீட்டிற்கு, முடிவெடுக்கும்  மட்டத்தில் அவர்கள் பின்னே செல்ல வேண்டும்.

பின்னோக்கி நகர்வதன் மூலம் சுய மதிப்பீட்டை அல்லது சுய பரிசோதனையை  ஆளும் கட்சி ஒழுங்காக எடுக்க வேண்டும். அரசமைப்புச் சட்ட விதிகளின் படி பின்னோக்கி நகர்வது அரசமைப்புச் சட்ட விதிகளிலிருந்து   எட்டி நகர்வதல்ல. , இது தனது செயல்பாட்டை மேம்படுத்த  அரசுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும், அதன் பின் சிறந்த ஆட்சியை அளிக்கும். இயற்கையாகவே, அரசினை விமர்சிக்கும் போக்கில் அரசு பயன்படுத்தும் போக்கை இது நீக்கும். பின்னோக்கி நகர்வது மற்றும் ஒருவரது செயல்பாட்டை நினைப்பது  ஆகியவை நியாயமான மற்றும் சட்ட ரீதியான விமர்சனத்தை  அவமானகரமாக மாற்றுவதற்கு உதவும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top