ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

நிர்ணயிக்கப்பட்ட விதியும், சுதந்திரச் செயல்பாடும்

அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் (இசிஎ), 1955 மற்றும் மாதிரி விவசாய உற்பத்தி சந்தைக் குழு சட்டம் (எபிஎம்சி) போன்ற சந்தை ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை இந்திய விவசாயத் துறையில் புகுத்தி கட்டமைப்பு மாற்றங்களை மாநில அரசாங்கங்கள் கொண்டுவர வேண்டுமென 2019 ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற நிதி ஆயோக்கின் ஐந்தாவது ஆட்சிமன்றக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வேளாண் துறை நெருக்கடியில் இருக்கும் பின்னணியில் இந்த சட்டங்களை சீர்திருத்துவது என்பது வேளாண் வருவாய் குறைந்துகொண்டிருக்கும் நிலையை மாற்ற வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசிஎ-வை சீர்திருத்துவது என்பது, குறிப்பாக வேளாண் துறையில் உபரி மேலாண்மை நெருக்கும் பிரச்னையாக உருவாகியுள்ள நிலையில், முக்கியமான விஷயமாகிறது. சந்தை ஒருங்கிணைப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக இசிஎ இருக்கும் நிலையில் இதை தளர்த்துவது என்பது அளவிற்கதிகான தேவையை (விநியோகத்தை) குறிப்பதாக இருக்கும். இதன் விளைவாக விலை சுட்டிக்காட்டிகள் ஒரு சந்தையிலிருந்து பிற சந்தைகளுக்கு கடத்தப்படும். வேறு வார்த்தைகளில் சொன்னால், விவசாயிகள் தங்களது உற்பத்திப்பொருட்களுக்கு சரியான விலையைப் பெறுவர், பொருட்கள் அதிகம் கிடைக்கும் என்பதால் நுகர்வோருக்கும் நிவாரணம் கிடைக்கும்.

ஆனால், சீர்திருத்தங்களின் பாதை குறித்து நிதி ஆயோக்கிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ மேற்கொண்டு தெளிவு இல்லாத நிலையில் பொதுமக்கள் மனதில் சந்தேகம் வியாபிக்கிறது. இவற்றின் மீது அரசாங்கத்திற்கு நேரடி கட்டுப்பாடு இல்லாவிட்டால் உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாது ஆகிவிடாதா? இசிஎ இருக்கும் போதே விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். கையிருப்பு பற்றி அரசாங்கம் அறிக்கைகளை வெளியிடும்போதெல்லாம் ”அத்தியாவசிய” உணவுப் பொருட்களின் சில்லறை விலைகள் பெரும்பாலும் உயர்ந்திருக்கின்றன. உதாரணமாக, சர்க்கரை விஷயத்தில் அரசாங்கம் நிர்ணயிக்கும் ஒதுக்கீட்டு அளவுகளை இறுக்கிப்பிடித்து வெளியிட்டதன் விளைவாக 2003ல் சர்க்கரை விலை ஒரு டன்னுக்கு 250ரூ அதிகரித்தது. 2014 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் எவ்வளவு கையிருப்பு இருக்க வேண்டும் என்பதற்கு அளவு நிர்ணயிக்கப்பட்ட போது உளுந்து, பாசிப்பருப்பு, மசூர் பருப்பு ஆகியவை முறையே கிலோவிற்கு ரூ. 14, 8, 9 என அதிகரித்தன, அரிசி கிலோவிற்கு ரூ. 1 முதல் 2 வரை அதிகரித்தது. இவ்வளவு ஆதாரங்களைப் பார்க்கிறபோது, விலைக் கட்டுப்பாட்டிற்கு கையிருப்பும் வர்த்தகமும் மேலான கருவிகள் என்பதாகத் தோன்றுகிறது. இசிஎ-வை தளத்துவது/நிறுத்திவைப்பது குறித்து ஏளனத்துடனான அவநம்பிக்கை பெரிய அளவில் இருக்கிறது.

இசிஎ-வை திருத்துவது என்பது தொற்று போல, குறிப்பாக சந்தை அல்ல, மாறாக அரசாங்கமே விலையை நிர்ணயிக்கும் என்ற அரசியல் நடைமுறை நிலவும் சில பயிர்களின் விஷயத்தில். விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை தர அரசாங்கம் கடப்பாடு கொள்ளும் எனில் அதைத் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்தையும் வாங்கிக்கொள்வதை அது உறுதிசெய்ய வேண்டும். கரும்பு போன்ற பயிர்கள் விஷயத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. இது சர்க்கரையின் சில்லறை விற்பனை விலையை அதிகரிக்க கரும்பு வாங்குவது-விற்பது தொடர்பான கட்டுப்பாட்டை தளத்துவதை, தேவை குறைவாக இருப்பதன் அடிப்படையில் ஆலைகள் வாங்கும் கரும்பின் அளவை நிர்ணயிப்பதை எதிர்ப்பதுடன் அரசாங்கம் நிர்ணயிக்கும் விலையை, அது மத்திய அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையாக இருதாலும் சரி அல்லது அரசு ஆலோசனை கூறிய விலையாக இருந்தாலும் சரி, தரவும் மறுக்கிறது.     விலை ஏற்ற இறக்கங்களை சமாளிக்க கையிருப்பை அரசாங்கம் வாங்கலாம் (ஆலைகளின் மீது தீர்வை விதித்து, இது நுகர்வோரால் அளிக்கப்படும் பணம்), ஆனால் சர்க்கரை ஆலைத் துறைக்கு அரசியல் செல்வாக்கு இருக்கும் நிலையில் எந்த ஏமாற்று வேலையையும் தடுக்க முடியாது. இத்தகைய உதாரணங்களை பார்க்கிறபோது விவசாய சீர்திருத்தங்களுக்கான “கூட்டுறவு கூட்டாட்சி” என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத வெறும் கருத்துக்களாகவே தோன்றுகின்றன. எபிஎம்சி சட்டத்தை அமல்படுத்திய அனுபவத்தை, மாநில அளவில் இதற்கு முட்டுக்கட்டை போட கொண்டுவரப்பட்ட திருத்தங்களை, எப்படி மறக்க முடியும்? இதைப் போலவே, இசிஎ-வை திருத்துவதற்கான மத்திய அரசாங்கத்தின் பரிந்துரைகளை எந்த அளவிற்கு மாநில அரசாங்கம் ஏற்பது என்பது அரசியல் லாபம் தொடர்பான விஷயம்.

 இந்தப் பின்னணியில் அதிக குழப்பமான விஷயம் என்னவெனில் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்கு சொல்லப்படும் விளக்கம்தான், குறிப்பாக கையிருப்பிற்கான அளவுகள் மீதான கட்டுப்பாடுகள் என்று சொல்லப்படுகிறது. விவசாய சந்தைப்படுத்துதலில் தேவைப்படும் பெரும் முதலீடுகளை (குறிப்பாக கார்ப்போரேட் முதலீடுகளை) இது ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய விளக்கமானது “சந்தை குறித்த கற்பனாவாதத்தின்” சில கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தது. ஒன்று, விவசாயத் துறை மாற்றத்திற்காக தனியார் துறை செயல்படும் என்பதால் அது கிராமப்புற வளர்ச்சி திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், இரண்டு, சந்தையின் விளைவாக உருவாகும் திறன் மற்றும் குறிப்பாக சந்தையாக்கத் திறனை மேம்படுத்துவதில் தனியார் துறைக்குள்ள பங்கு. இவை 2014 தேர்தலின் போதான நரேந்திர மோடியின் “குறைந்தபட்ச அரசங்கம், அதிகபட்ச ஆட்சி” என்ற வாக்குறுதியுடன் பகுதியளவிற்கு பொருந்திப்போகின்றன, ஆனால் ஆட்சிக்கான பாதை ஏதும் தெளிவாக வகுக்கப்படாமல் இத்தகைய ஒருங்கிணைப்பு எப்படி பொதுவாக விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதும், குறிப்பாக அது சிறு விவசாயிகளுக்கு எத்தகையதாக இருக்கும் என்பதில் தெளிவில்லை. சந்தையைப் பொறுத்தவரை கையிருப்பு, பேர ஆற்றல், லாபம் பற்றி சந்தேகமிருந்தாலும் துணிந்து இறங்குவது, தகவல் கட்டுப்பாடு ஆகியவை நிர்ணயகரமான அதிகார சக்திகள் என்பதை ஒருவர் மறுக்க முடியாது. இந்த அதிகார சக்திகள் அரசை “தற்பாதுகாப்பான சமசரத்திற்கு”, கட்டாயப்படுத்தும் இடத்தில் சந்தை பரிமாற்றங்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது (அதாவது இசிஎ-வை தற்காலிகமாக நிறுத்துவைப்பது) என்பது பொருளாதாரக் கொள்கைகளை, அரசாங்கத்தின் கொள்கைகளை தங்களுக்கு சாதகமாக கார்ப்போரேட்டுகள் வளைப்பதன் மூலம் கிடைக்கும் லாப விநியோகத்தை அரசாங்கத்திற்கும் கார்ப்போரேட்டுகளுக்கும் இடையில் மாற்றியமைக்குமே தவிர குறைக்காது. இந்த நிலையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கத்தின் “அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய” விவசாய சீர்திருத்தங்களுக்கான அரசியல் உறுதிப்பாடு, இச் சீர்திருத்தங்கள் செயல்படுவதற்கான “சூழலை” வருகின்ற காலத்தில் இந்த அரசாங்கம் உருவாக்கினால் மட்டுமே அவை வெற்றிகரமாக தாக்குபிடிக்கும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top