ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

நம்பிக்கையின் வழிகள்

.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ஓர் எல்லைக்குட்பட்ட தேர்தல்ரீதியான சூழலில் கூட்டணி அரசியலானது இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையிலானது. பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் இந்த இரண்டும் மிக முக்கியமானவை. முதலாவது மிகவும் வெளிப்படையானது. தேர்தல் அரசியலில் ஒரு கட்சியின் ஆதிக்கம் நிலவும் சூழலில், இரண்டாம் முறையாக பாரதீய ஜனதா கட்சி மிகப் பெரும்பான்மையுடன் வென்றிருக்கும் சூழலில் கூட்டணி அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய மாநிலங்களில் வென்றிருக்காவிட்டாலும் வென்றிருக்கும் இடங்களின் எண்ணிக்கை ரீதியாக ஒரு கட்சியின் ஆதிக்கம் யதார்த்தமாகியிருக்கிறது. ஒன்று, பாஜக வட இந்திய மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்றதும், வட கிழக்கில் காலூன்றியிருப்பதும் இதற்கான காரணங்களாகும். இரண்டு, சிறிய கட்சிகளால் தேர்தலில் பெரும்பான்மை பெற முடியாத சூழலில் கூட்டணி அரசியல் அவசியமாகிறது. தேர்தல்ரீதியாக எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்திருப்பதாலும், அவற்றின் நலன்களும், சமூக அடித்தளமும் பிளவுண்டிருப்பதாலும் கூட்டணியானது அவற்றிற்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் அமைய வேண்டியது அவசியம். இந்த பரஸ்பர நம்பிக்கையும், ஒற்றுமையும் அந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியிலும் இருக்க வேண்டும். கூட்டணியானது கட்சிகளின் குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக இல்லையென்றால் பரஸ்பர நம்பிக்கை மேலும் முக்கியமானதாகிறது, அதிலும் குறிப்பாக பலவீனமான பிரிவினர் விஷயத்தில். பலவீனமான சமூகப் பிரிவினர் எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கையும், தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜகூ) மீது சந்தேகமும் கொண்டுள்ளனர் என்பதை ஆளும் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். பலவீனமான பிரிவைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு தங்களது வாக்குகளை அளிக்க வெற்றி பெறும் வாய்ப்புள்ள, பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலமைந்த கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்ளிக்க கூட்டணி அரசியல் வாய்ப்பு என்பது அவசியம்.

ஆனால், இத்தகைய கட்சிகளிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்காக அவர்களோ அல்லது அவர்களின் கட்சிகளோ அவர்களின் நம்பிக்கையை ஆதரிக்கும் வகையில் வாக்குகளை தங்களது கூட்டணி கட்சிக்கு முழுமையாக அளிப்பதை உறுதி செய்வார்களா? பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்களின் நம்பிக்கையை மதிக்க உண்மையான முயற்சிகளை எடுப்பார்களா? ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் கூட்டணிகளின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. நம்பிக்கைக்கான பாதைகள் சந்தேகங்களாலும், தோல்விகளாலும், நிச்சயமின்மைகளாலும், கவலைகளாலும் நிரப்பப்பட்டு ஆழமான நம்பிக்கையின்மையை அளிப்பதாக இருக்கிறது. கூட்டணியை உருவாக்குவதில் ஏற்பட்ட தோல்வியானது இந்தக் கட்சிகளின் வாக்காளர்கள் கொண்ட நம்பிக்கையானது தேர்தல் தோல்வி என்ற ஆபத்தில் சிக்கிக் கொண்டதை காட்டுகிறது. இது கூட்டணியில் இருந்த மிக மேலோட்டமான நம்பிக்கையை அல்லது நம்பிக்கையே இல்லாததை காட்டுகிறது. நம்பிக்கை அடிப்படையிலான கூட்டணியை அமைப்பற்கான சாத்தியம் அதன் சமநிலையை இழக்கிறபோது அரசாங்கத்தை அமைப்பதற்கான அவசியம் வெற்றுப் பேச்சாக அல்லது வெற்று கோஷமாக ஆகிவிடுகிறது. சாத்தியத்திற்கும் அவசியத்திற்கும் இடையிலான உறவின் சமனின்மை காரணமாக கூட்டணியும் அமைவதில்லை அரசாங்கமும் அமைவதில்லை என்பதுடன் வாக்காளர்களின் நம்பிக்கைக்கும் பொறுப்பாக இருப்பதில்லை. தொடர்ந்து பலவீனமான சமூகப் பிரிவினரின் நம்பிக்கையை கட்சிகளும், சில பிரிவு வாக்காளர்கள் வேறு கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமும் தொடர்ந்து பொய்ப்பிப்பது அவர்களுக்கு தார்மீக சுமையாகிவிடும். நம்பிக்கையானது தனது அற சக்தியை இழந்துவிடுவதுடன் இத்தகைய கட்சிகளுக்கு ஆதரவாக இருந்து ரிஸ்க் எடுப்பதையே இந்த வாக்காளர்கள் நிறுத்திவிடுவார்கள்.

அதைப் போலவே பெரும்பான்மை கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள், அது சாதிக்கிறாதோ இல்லையோ அதற்கே வாக்களிப்பவர்கள், தங்கள் நம்பிக்கையை அத்தகையை கட்சியில் வைக்கக் கூடாது. அந்த மாதிரியான விஷயங்களில் நம்பிக்கையின் இடத்தின் குருட்டு நம்பிக்கை வைக்கப்படுகிறது. இந்த குருட்டு நம்பிக்கை ஏற்கனவே இருப்பது, இதை புதிதாக கட்டியமைக்க வேண்டியதில்லை. பெரும்பான்மை கட்சிக்கான அவர்களது ஆதரவு தர்க்க அறிவின் பாற்பட்டதல்ல மாறாக குருட்டு நம்பிக்கையின் அடிப்படையிலானது. ஆனால் வாக்காளர்களுக்கு தர்க்க அறிவு இருக்கிறது, அப்படியிருந்தும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சிக்கு குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள். விவசாயிகளும், வேலையில்லா இளைஞர்களும் ஆளும் கட்சிக்கு வாக்களித்த சமீபத்திய தேர்தலில் இது தெளிவாகத் தெரிகிறது. தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய கட்சிக்கு, தனது கொள்கைத் திட்டங்களால் பலருக்கும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய கட்சிக்கு வாக்களிப்பதை இவர்களது தர்க்க அறிவு தடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அது அவர்களது சுயத்துடன், தங்களது சுயத்தின் மீது நம்பிக்கை வைப்பதுடன் ஒத்துப்போயிருக்கும். குருட்டு நம்பிக்கையுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களது கட்சியை தெரிவு செய்யும் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை என்பதால் நம்பிக்கை என்ற விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. தேர்தல் ரீதியாக பலனுள்ள கூட்டணியை அவசியமாக்கும், உண்மையிலேயே மக்களின் தேவைகளுக்கேற்ப எதிர்வினையாற்றும் அரசாங்கத்தை சாத்தியமாக்க ஒரு தலைவரிடமோ, ஒரு கட்சியிடமோ அல்லது கட்சிகளிடமோ நம்பிக்கை வைத்து ரிஸ்க் எடுப்பதற்கு ஒரு வாக்காளருக்கு நம்பிக்கையானது தன்னாட்சியைத் தருகிறது. ரிஸ்க் எடுப்பது என்பது தன்னாட்சியையும் சுயமாக செயல்படும் ஆற்றலையும் காட்டுகிறது என்றாலும் சம வாய்ப்புகள் மற்றும் கவனங்களின் அரசியல் ரிஸ்க் எடுப்பதையே செயல்பாடாக க் கொண்ட யூக மூலதன விளையாட்டாக மாற்றப்பட்டுவிடக் கூடாது. பலவீனமான பிரிவைச் சேர்ந்த வாக்காளர்களை எப்போதுமே ரிஸ்க் எடுக்கும் நிலைக்கு எதிர்க்கட்சிகள் ஆளாக்கக்கூடாது. விவாதத்திற்குரிய கேள்வி இதுதான்: பலவீனமான சமூப் பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்களின் நம்பிக்கையில் உள்ளார்ந்திருக்கும் மாற்றத்திற்கான தூண்டுதலை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக்கொள்வார்களா? இத்தகைய பலவீனமான பிரிவினர் எதிர்கொள்ளும் ஆபத்தை உருவாக்கும் சூழல்களை ஒழிப்பதற்கான உறுதியான ஆதாரங்களை ஆளும் கட்சி வழங்குமா?

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top