ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

அற உண்மைகளும் நீதித் துறையின் நேர்மையும்

தனது குற்றமின்மையை அறிவிக்க அற உண்மைகளை பயன்படுத்துவது தலைமை நீதிபதியின் அலுவலகம் மற்றும் நீதித் துறையின் நேர்மையை பலவீனப்படுத்துகிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர் இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் தொந்திரவு குற்றச்சாட்டை வைத்திருப்பது தொடர்பான சர்ச்சை பொது நிறுவனங்களுக்கும் அவற்றில் பொறுப்பில் இருப்பவர்கள் அல்லது பொறுப்பிற்கு வர விரும்புபவர்களுக்கும் இடையிலான உறவை தீர்வு காணப்படவேண்டிய ஒரு பிரச்சனையாக ஆக்கியிருக்கிறது. தலைமை நீதிபதி போன்ற பொது ஊழியர் ஒருவர் தனது தகுதிநிலையை ஊதிப் பெரிதாக்கி பொது நிறுவனங்களின் தகுதிக்கு உயர்த்திக்கொள்ள முயல்கிறபோது இந்த உறவு பிரச்னைக்குரியதாகிறது. தலைமை நீதிபதியின் கூற்றுகளில் இந்தப் போக்கு தெளிவாக வெளிப்படுகிறது. இவரது கூற்றுகள் பிரதமர் நரேந்திர மோடியினுடையதைப் போலவே செயல்படுகின்றன. இந்த இரண்டு ஆளுமைகளும் வெவ்வேறு பின்னணியில் இரண்டு அறக் கூற்றுகளை முன்வைக்கிறார்கள். ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி பிரதமர் தன்னை தேசத்தை மீட்க வந்த இரட்சகன் என்று கூறிக்கொள்கிறார். அவ்வாறு தேசத்தைக் காப்பாற்ற தனக்கு தனித்துவமான அற (ஆண்மை) ஆற்றல் இருப்பதாகவும், அத்தகைய ஆற்றல் தனக்கு மட்டுமே இருப்பதாகவும், தனது கைகளில் மட்டுமே தேசம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் மோடி கூறிக்கொள்கிறார். பாலியல் தொந்திரவு குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் தலைமை நீதிபதியோ தன் மீது சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நீதித் துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடியாக காட்டுகிறார். ஆளுமைகளா அல்லது பொது நிறுவனங்களா, பொது வாழ்வில் எது அதிக முக்கியம்?

 நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தலைமை நீதிபதி மீது வைத்திருக்கும் ”பொய்யான குற்றச்சாட்டுகள்” நீதித் துறையின் நேர்மையை பாதுகாப்பதில் தலைமை நீதிபதிக்குள்ள அற கடப்பாட்டை தடுப்பதற்கானவை என்ற எண்ணமே தலைமை நீதிபதியின் கூற்றுகளை பார்க்கின்ற ஒருவருக்குத் தோன்றும். தலைமை நீதிபதியின் அலுவலகம் என்பது அரசமைப்புச்சட்ட விழுமியங்களின் கருத்துருவம் என்பதும், அது நீதித் துறை போன்ற பொது நிறுவனங்களுக்கு நேர்மைத் திறனை அளிக்கிறது என்பதும் உண்மையே. ஆனால், ஒரு திறனான நீதிபதியை உருவாக்குவது என்பது அவரது அற உள்ளுணர்வோ அல்லது எளிமை மற்றும் தியாகம் தொடர்பான கதையாடல் மூலம் அற உண்மையை உருவாக்கும் அவரது ஆற்றலையோ சார்ந்து இல்லை. “நான் மறுத்துரைப்பதற்குக் கூட இந்த குற்றாச்சாட்டுகள் தகுதியானவையல்ல” என்றும் “எனது பியூன் கூட என்னை விட அதிக பணம் வைத்திருக்கிறார்” என்றும் அற உணர்வை அடிநாதமாகக் கொண்ட கூற்றுகளை தலைமை நீதிபதி கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

 இந்தப் பின்னணியில் இது தொடர்பான ஒரு கேள்வி கேட்கப்பட வேண்டியிருக்கிறது.

 நீதித் துறை நேர்மையின் கருத்துருவமாக மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான உண்மையை வந்தைடையும் சட்ட நடைமுறைகளின் பாதுகாவலனாக தலைமை நீதிபதியின் அலுவலகம் இருக்கிறதெனில் கோகாய் தன்னை பாதுகாத்துக்கொள்ள அறச் சொல்லாடலை பயன்படுத்துகிற அளவிற்கு ஏன் நம்பிக்கையிழந்த நிலையிலிருக்கிறார்? ஆதாரங்களின் அடிப்படையிலான மற்றும் வாதங்களின் அடிப்படையிலான உண்மை என்பதே நவீன நீதித் துறையின் சாரமாகும். வெளிப்படையான, வலிமையும் ஆரோக்கியமும் கொண்ட நடைமுறகளைப் பின்பற்றி உருவாக்கப்படும் நீதியே உண்மையின் வெற்றி என்று கருதப்படும். நவீன நீதித் துறையின் அடிப்படையாக இருக்கும் அறிவியல்பூர்வமான உண்மையின் மீதான நாட்டம் ஒருவர் தனது பாதுகாப்பிற்கான அற மொழியை பயன்படுத்துவதை இல்லாதாக்க வேண்டும். ஆனால் மறுபுறத்தில் அற உண்மை என்பது ஒருவர் எளிமை மறும் அற நேர்மை குறித்த அறச் சொற்களை ஒருதலைப்பட்சமாக பயன்படுத்துவதில் அடங்கியிருக்கிறது. பாலியல் தொந்திரவு குற்றச்சாட்டுகள் விஷயத்தில் தொடக்கத்தில் தனது பாதுகாப்பிற்காக இத்தகைய அற மொழி மற்றும் சொற்கள் பயன்படுத்தப்படும் என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டியது அவசியம்.

 ஒருவரது குற்றமற்றதன்மையை நிரூபிக்க அவசியமான முறையான நடவடிக்கைகள் தொடங்கப்படும் முன்னரே அவரை குற்றமற்றவராக இந்த அற சொற்கள் அறிவிக்கின்றன. இது புகார் தந்தவரின் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்துவதுடன், அவரது புகார் குறித்து நியாயமான விசாரணை நடப்பதையும் தடுத்துவிடுறது. பணியிடங்களில், நீதித் துறை உட்பட, நடக்கும் பாலியல் தொந்திரவுகளில் குற்றம்சாட்டுபவர், குற்றச்சாட்டப்படுவர் இடையே அதிகார ரீதியாக பெரும் படிநிலை ஏற்றத்தாழ்வு இருக்கிறது. இது வரையில் இந்த வழக்கு நடத்தப்பட்டிருக்கும் விதம் நீதித் துறை பற்றி நம்பிக்கையை உருவாக்குவதாக இல்லை. நீதித் துறையின் நேர்மையை நல்ல வலுவான, ஆரோக்கியமான, வெளிப்படையான நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே உறுதிபடுத்த முடியும். இந்த விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட மூன்று பேர் குழுவின் நடத்தையும் நீதிமன்ற நடவடிக்கை மூலம் வெளியாகும் உண்மையுமே நீதித்துறையால் தனது நேர்மையை தக்கவைத்துக்கொள்ள முடிகிறதா என்பதைக் காட்டும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top