ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

சுருதி குறைந்திருக்கும் பாஜகவின் தன்னம்ம்பிக்கை

தேர்தல் முடிவுகள் மக்களை அரசியல் விவகாரங்களின் மையத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலிகளில் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான ஆட்சிகள் தெளிவாக நிராகரிக்கப்பட்டதானது மத்திய அரசாங்கம் பின்பற்றிவரும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மக்களிடம் அதிகரித்துவரும் அதிருப்தியின் தெளிவான வெளிப்பாடாகும். ஆனால் இந்தத் தேர்தல் தோல்விகள் மாநில அளவிலான பிரச்னைகளால் ஏற்பட்டவை என பாஜகவின் பேச்சாளர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும் சொன்னாலும் தேசிய அரசியலில் இந்த முடிவுகளின் தாக்கம் தெளிவானது. இந்தத் தேர்தல்களில் முக்கியமான விஷயங்களாக இருந்த விவசாய நெருக்கடி, வேலையின்மை, வாழ்வாதார இழப்பு ஆகியவை மத்திய அரசாங்கம் கடைபிடித்த பணமதிப்புநீக்கம், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி)., விவசாய புறக்கணிப்பு ஆகிய தவறான கொள்கைகளில் வேர்கொண்டுள்ளன. இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சிகள் தொடர்ந்து பின்பற்றிவந்த தவறான கொள்கைகள் இவற்றின் தோல்விக்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டன. மக்களின் அமைதியின்மையை உணர்ந்தபோதிலும் அதற்கு நிவாரணம் ஏதும் தங்களால் அளிக்க முடியாத நிலையில் பாஜகவும் சங் பரிவாரமும் பிரச்சாரத்தின்போது தங்களது நிரந்தர கையிருப்பான வெறுப்பு மற்றும் பிளவுவாத அரசியலை கட்டவிழ்த்துவிட்டனர். யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட தீவிரமான பிரச்சாரமானது வெறுப்பு மற்றும் பிளவுவாத த்தின் அடிப்பையிலேயே இருந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வாக்களித்த மக்களின் மனங்களை இந்தப் பிரச்சாரத்தால் வென்றெடுக்க முடியவில்லை. ஆதித்யநாத் தலைமையில் பேரணிகள் நடந்த தொகுதிகளிலெல்லாம் பாஜகவிற்கு கிடைத்த வாக்குகள் பரிதாபத்திற்குரியது. கடந்த நான்கு ஆண்டுகளாக  பசுப் பாதுகாவலர் குண்டர்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த ராஜஸ்தானின் ஆள்வார் பகுதியில் பாஜக மோசமான தோல்வியைத் தழுவியது. ஆதித்யநாத் துளியும் வெட்கமில்லாமல் மிக வெளிப்படையாக வகுப்புவாத பிரச்சாரத்தை மேற்கொண்ட தெலங்கானாவில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. நரேந்திர மோடியின் தரம் குறைந்த பேச்சுகள் கூட வாக்காளர்களின் எடுபடவில்லை என்பது மக்களிடம் அதிகரித்துவரும் குமுறலின் தெளிவான வெளிப்பாடு.

தங்களுக்கே உரிய குழப்பும் தந்திரத்தின் மூலம் மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் போட்டி கடுமையாமக இருந்ததைக் காட்டி இந்த இழப்புகளை குறைத்துக்காட்ட சங் பரிவாரமும் பாஜகவும் முயற்சிக்கின்றன. ஆனால்,  வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது மத்திய பிரதேசத்தில் இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களும் கடுமையான போட்டி கொண்டவையே என்பதும், ராஜஸ்தானில் காங்கிரசுக்கும் பாஜவுக்குமான இடைவெளியைப் பார்க்கையில் பாஜகவின் இழப்பு கணிசமானது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய மேம்போக்கான, விளக்கம் தராத விளக்கங்கள் மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான போக்கு ஒருபுறமிருக்க, மத்திய பிரதேசத்திலும் சட்டீஸ்கரிலும் 15 ஆண்டு கால பாஜக ஆட்சியை காங்கிரஸ் அகற்றியிருக்கிறது என்பதும் ராஜஸ்தானில் பெரும் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது என்பதும் உண்மை. ஒரேயொரு இடம் அதிகம் பெற்று காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றபோதிலும் 2014 மக்களவை தேர்தலில் இதே பகுதிகளில் பாஜக 65 இடங்களில் 62ஐ வென்றது என்பதை கணக்கில் கொண்டால் இது முக்கியத்துவம்வாய்ந்தது. நகர்ப்புற தொகுதிகளிலும் பாஜக பெரும் சரிவைக் கண்டுள்ளது. சொல்லப்போனால் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதன் சரிவு அதிகம். வேலையின்மை மற்றும் சிறு வர்த்தகங்கள் மீதான ஜிஎஸ்டியின் எதிர்மறையான தாக்கத்தின் காரணமான அதிருப்தி இது. மோடி மற்றும் பாஜகவிற்கு உள்ள நகர்ப்புற ஆதரவு முக்கியமானது என்று நம்பப்படுகிறது, ஆனால் இந்தத் தேர்தல்களில் அந்தக் கருத்தும் ஆட்டம்கண்டிருக்கிறது.

அதிருப்தியும், வேதனையும் எந்த அளவிற்கு இருக்கின்றன என்பதை கருத்தில்கொள்கையில் இதை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கவேண்டும். சட்டீஸ்கரில் மட்டுமே அது பாஜகவை மூன்றுக்கு இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தோற்கடித்தது. சிவராஜ் சிங் சவுகானின் மக்கள் செல்வாக்கு பற்றி உற்பத்தி செய்யப்பட்ட விளக்கங்களை நம்பியது மற்றும் ராஜஸ்தானில் மோடியின் கடைசிநேர முயற்சிகள் ஆகியவை காங்கிரசை தயங்கச்செய்துவிட்டன. காங்கிரசின் வெற்றி பெரிய அளவில் இல்லாதுபோனதற்கு அதன் அமைப்புரீதியான பலவீனமும் மக்களின் வாழ்வு மற்றும் அவர்களது வாழ்வாதாரங்கள் விஷயங்களில் அது தொடர்ந்து கவனத்தை குவிக்கத் தவறியதுமே காரணங்களாகும். சட்டீஸ்கரில் மக்களின் பிரச்னைகளை முன்வைத்து அதன் பிரச்சாரம் இருந்ததன் காரணமாகவே அங்கு பெரிய வெற்றியை பெறமுடிந்தது என்பதிலிருந்து காரங்கிரஸ் சில பாடங்களை கற்கவேண்டும். ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் இடதுசாரி அமைப்புகள் நடத்திய விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் மக்கள் இயக்கங்கள் காங்கிரசுக்கு உதவின. ஏனெனில் அங்கு நிலவிய இருமுனைப் போட்டியில் காங்கிரஸ் மட்டுமே மாற்றாக இருந்தது.

மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் பாஜகவின் வாக்கு வங்கியும் சமூக அடித்தளமும் அது மீண்டுவருவதற்கான வாய்ப்பைத் தருகின்றன என்கிற நிலையில் வேறு வழியில்லாததால் மாற்றாக இருக்கும் நிலைமையில் காங்கிரஸ் இருப்பது போதுமானதல்ல. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சமூகத்தில் நிலைத்ததன்மை ஏற்படவும் மாற்றுக் கொள்கையை அது முன்வைக்கவேண்டும். கிராமப்புறங்களில் நிலவும் வேதனையான சூழலை தீர்ப்பதுடன் பதுப் பாதுகாவலர் மற்றும் சங் பரிவார குண்டர்களின் அராஜக செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும் கவனத்தை செலுத்தவேண்டும். வரும் தேர்தலில் சங் பரிவாரமும் பாஜகவும் வகுப்புவாத பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்துவார்கள் என்பதை கவனத்தில்கொள்கையில் மேலே சொன்னது இன்னமும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பொதுத் தேர்தல் வர இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் நிலையில் தான் ஆட்சிக்கு வந்துள்ள மூன்று மாநிலங்களில் இந்தக் கொள்கைகளின் பொதுவான சில அம்சங்களை நடைமுறைப்படுத்தி இந்தத் தேர்தலில் பெற்றுள்ள உந்துசக்தியை காங்கிரச் தக்கவைக்கவேண்டும். சமீபத்திய தேர்தல் முடிவுகளின் மையமான செய்தி என்னவோ அதை பின்பற்றினால் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான இந்த உந்துசக்தியை நீட்டிக்க முடியும். அதாவது மக்கள்திரளை அரசியல் செயல்பாட்டின் மையத்திற்கு கொண்டுவரவேண்டும். அரசியல் கள சொல்லாடலானது நியாயமான கொள்கைகளின் அடிப்படையிலானதாக இருக்கவேண்டும், தலைவர்களின் ஆளுமையின்பாற்பட்டதாக இருக்கக்கூடாது. அரசியல் சொல்லாடலில் வரவேண்டிய இந்த மாற்றமானது வருகின்ற பொதுத் தேர்தல்களின் மூலமாக அரசியல் சக்திகளில் பரஸ்பர உறவுகளில் ஏற்படவேண்டிய மாற்றத்திற்ற்கு அத்யாவாசியமானது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top