ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

எரிபொருள் தீப்பற்றி எரிகிறபோது

சர்வதேச விலைகளை விட நெறி பிறழ்ந்த கொள்கைகளின் காரணமாகவே நுகர்வோர் பெட்ரோலுக்கு அநியாய விலை தரவேண்டியிருக்கிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

விலையுயர்வின் காரணமாக சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி ஆளும் அரசாங்கத்திற்கு எந்தக் கவலையும் இல்லை என்பதை நாடு முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துவருவது காட்டுகிறது. நாடு முழுவதிலும் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களின் விளைவாக மத்திய அரசாங்கம் பெட்ரோல் விலையை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை மாநில அரசாங்கங்களின் மீது சுமத்திவிட்டது. ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசத்தை தவிர்த்து வேறு எந்த மாநிலமும் விலையை குறைக்கவில்லை. இந்த இரண்டு மாநிலங்களும் முறையே ஒரு லிட்டருக்கு ரூ. 2.5 மற்றும் 2 விலை குறைப்பு செய்துள்ளன. ஆனால் மாநில தலைநகரங்களில் ஒரு லிட்டரின் விலை 81 முதல் 83 வரையும், 85 முதல் 87 வரையிலும் இருக்கிறது. மும்பையில் ஒரு லிட்டர் 90. ஏனெனில் மும்பையிதான் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) மிகவும் அதிகம்.

பெட்ரோலின் சர்வதேச விலை அதிகரிக்கிறபோது அதை நுகர்வோர் தாங்க வேண்டியிருப்பதைப் போலவே பெட்ரோல் விலையில் 2010 மற்றும் 2014ல் செய்யப்பட்ட விதிகளைவானது (டீரெகுலேஷன்)  சர்வதேச பெட்ரோல் விலை வீழ்ச்சி நுகர்வோருக்கு லாபகரமானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் வேறு. ஆயத் தீர்வை மற்றும் வாட் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி (விலையில் 50%), வர்த்தகர் கமிஷன் (விலையில் குறைந்தது 9%) ஆகியவற்றை மிக எளிமையாக கணக்கிட்டு பார்க்கையில் பெட்ரோல் உற்பத்தி நிறுவனங்கள் வர்த்தகர்களுக்கு விற்கும் விலையை விட இரு மடங்கு விலையை நுகர்வோர் தர வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் வரியும் ஆயத்தீர்வையும் ஏற்படுத்தும் பெரும் சுமையின் காரணமாக சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை அதிகரிக்கும்போது (இன்று ஒரு பீப்பாய் 80 டாலர் என்று வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது) அதற்கான விலையை நுகர்வோர் தர வேண்டியுள்ள அதே நேரத்தில் விலை குறையும் போது அதற்கான பலனை நுகர்வோர் பெற முடிவதில்லை. 2014 நவம்பருக்கும் 2016 ஜனவரிக்கும் இடையில் இந்தியாவில் ஒரு பீப்பாய் பெட்ரோலின் விலை 60 டாலர் என குறைந்தது. உடனே அரசாங்கம் ஆயத்தீர்வையை ஒன்பது மடங்கு உயர்த்தியது. இது பெட்ரோல் மீது சுங்கவரியை சுமார் 150% அதிகரித்தது, அதாவது லிட்டருக்கு 19.48; டீசல் விஷயத்தில் 330% அதிகரித்தது, ஆதவது லிட்டருக்கு 15.53. இதன் காரணமாக 2014-15ல் வெறும் 99,000 கோடியாக இருந்த அரசாங்கத்தின் ஆயத்தீர்வை வருவாய் 2016-17ல் 2,42,000 கோடியாக உயர்ந்தது.

2019 பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் எளிதாக கிடைக்கும் வருவாய்களை தியாகம் செய்ய அரசாங்கத்திற்கு விருப்பமிருக்காது. ஒருபுறம், ரூபாயின் மதிப்பு குறைவது பெட்ரோல் இறக்குமதிக்கான செலவை அதிகரிக்கிறது. மறுபுறம் சரக்கு மற்றும் சேவைகள் வரியானது (ஜிஎஸ்டி) இன்னமும் முறையாக புழக்கத்திற்கு வராத நிலையில் வரி வருவாயானது இன்னமும் நிலைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் தீர்வை/வரியை குறைப்பது என்பது அரசாங்கத்தின் சில முக்கியமான நலத் திட்டங்களை கைவிடுதலுக்கு வழிவகுக்கும். தான் ஆட்சியிலிருக்கும் பல மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) விவசாயிகளின் கடன்களை ரத்து செய்துள்ள நிலையில் வரியை குறைக்க முடியாது. அப்படி குறைத்தால் அதை ஈடுகட்ட வேறு இடங்களிலிருந்து வருவாயை உருவாக்க வேண்டும்.

வாக்காளர்களின் அதிருப்தியின் காரணமாக பெட்ரோல் விலையுயர்வை எண்ணி அரசாங்கங்கள் அஞ்சுகின்றன. வாக்காளர்களை சாந்தப்படுத்த பெட்ரோல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுவதை தேர்தலுக்கு முன்னர் நிறுத்திவைப்பது என்பது (கர்நாடகாவில் 2018 ஏப்ரல்/மே தேர்தலின் போது நடந்ததைப்போல்) ஏற்கனவே பரிசோதிக்கப்பட்ட உத்தி. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் கடுமையாக விலையுயர்வதால் இந்த உத்தி இனி பலனளிக்காது. மாறாக, இது உண்மையை (பல உண்மைகளை) வெளிக்கொண்டு வந்துவிட்டது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எம் முறையில் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது? பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறை குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டுமெனக் கோரிய பொது நல மனு டெல்லி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதில் கடைபிடிக்கப்படும் இத்தகைய ரகசிய முறையின் பின்னணியில், கர்நாடகா தேர்தலின் போது விலையுயர்வு நிறுத்திவைக்கப்பட்டதால் 500 கோடி இழப்பு என எப்படி நிர்ணயிக்க முடிந்தது? அதே போன்று தேர்தலுக்குப் பின்னர் விலை நிர்ணயம் எப்படி வடிவமைக்கப்பட்டது?

கச்சா எண்ணை அல்ல, மாறாக பெட்ரோல் நேரடியாக இறக்குமதி செய்யப்படுவது போல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. யதார்த்தத்தில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடாக இந்தியா இருக்கிறது. 2017-18ல் ஏற்றுமதி மதிப்பு (2385.8 கோடி). சுத்திகரிப்பு ஆற்றல் அதிகரிக்கப்பட்டதன் விளைவாக இது இறக்குமதி செய்யப்படும் விலையை (74.4 கோடி) விட 32 மடங்கு அதிகம். ஆனால், சுத்திகரிப்பிலிருந்து சந்தைக்கு வரும் தருவாயில் நிர்ணயிக்கப்படும் விலை தவறான ஊகத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. ஆகவே பெட்ரோல் உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பாளர்களின் லாப, நட்டங்களுக்கு இறக்குமதி விலையை விட அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதன் காரணமாக எப்போதெல்லாம் சர்வதேச சந்தையில் விலை உயர்கிறதோ அப்போதெல்லாம் இந்திய உற்பத்தியாளர்கள் பெரும் லாபம் ஈட்டுகின்றனர். அதே நேரத்தில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்யாமல் இந்தியா நேரடியாக சுத்திர்கரிக்கப்பட்ட பெட்ரோலை இறக்குமதி செய்தால் தர வேண்டிய அதிக விலையை நுகர்வோர் தருகின்றனர். இவ்வாறாக, நாட்டின் இழப்புகள் (லாபங்கள்) உண்மையான இழப்புகளின் (லாபங்களின்) மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளாகும்.

இந்த நாட்டில் பெட்ரோல் விலை என்பது பொருளாதார விவகாரமாக இருப்பதை விட அரசியல் விவகாரமாக இருப்பதே அதிகம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் 2014ல் டீசல் விலைகளில் விதிகளைவை (டீரெகுலேஷன்) அமல்படுத்தி வர்த்தகத்திற்கு ஆதரவான நிலை எடுத்தது. இப்போது, வரும் பொதுத் தேர்தலின்போது வரி வருவாயை சரியாக வைத்துக்கொள்ளும் பொருட்டு பெட்ரோல் உற்பத்தி நிறுவனங்களின் லாபங்களில் வரி மூலம் பெரும் பணம் ஈட்ட முயல்கிறது. ஒரு பீப்பாய்க்கு 70 டாலருக்கு மேல் கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கப்படும். இந்த அளவு மட்டம் எந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்று தெரியவில்லை. அரசாங்கத்திற்கும் தங்களுக்குமிடையில் ஏற்கனவே அமலில் இருக்கும் வருவாய் பங்கீட்டு விகிதத்தின் காரணமாக லாப வரி என்பது தாங்க முடியாததாக இருக்கும் என்பதால் பெட்ரோலிய துறையில் அதிருப்தி உருவாகிவருகிறது. இது,  பெட்ரோல் தேடல் ஆய்வில் தேவைப்படும் மூலதன முதலீடுகளுக்கு (உள்நாடு மற்றும் வெளிநாடு முதலீடுகள்) பெரும் நெருக்குதலை ஏற்படுத்தும். இந்த எரிபொருள் படுதோல்வியில் சிக்கிக்கொண்ட இந்தியாவின் நிலை வளைகுடா எண்ணை சிதறலின் போது அதில் சிக்கிக்கொண்ட பெலிகன் பறவையின் நிலை போன்றது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top