ஸ்ரீநிவாஸ் புர்ரா எழுதுகிறார்
சிரியா அரசாங்கம் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி சாதாரண குடிமக்களை ஏப்ரல் 7ஆம் தேதி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்ததானது பஷார் அல்-ஆசாத்தின் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் சேர்ந்து புதியதொரு ராணுவத் தாக்குதல்களை தொடுப்பதற்கான சூழலுக்கு வழிவகுத்தது. பல லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட அல்லது காயமுற்ற பல நிகழ்வுகளுள் இதுவும் ஒன்று. போர் தொடங்கி ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. இந்த மோதலில் ஏற்பட்டுள்ள மனித இழப்பு என்பது மிக மிக அதிகம். போர் தொடங்கிய 2011லிருந்து 54 லட்சம் பேர் சிரியாவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையர் கூறுகிறார். மேலும் 61 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர், பெரும்பாலான மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல்களுக்கிடையே சிக்கிக் கொண்டுள்ளனர்.
Comments
EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.