ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

அரசுப் பல்கலைக்கழகங்களின் வாழ்வா சாவா பிரச்னை

அரசுப் பல்கலைக்கழகங்களின் வாழ்வா சாவா பிரச்னை

அரசுப் பல்கலைக்கழங்களின் மீது தாக்குதல் தொடுத்திருப்பதன் மூலம் அரசாங்கம் தனது அரசமைப்பு பொறுப்புகளை கைவிடுகிறது.

12ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளை வென்ற பக்தியார் கில்ஜி பீகாரில் உள்ள கோட்டை ஒன்றை தாக்கியதை மத்திய கால வரலாற்று எழுத்தாளர் மினாஜ்&ஐ&சிராஜ் ஆவணப்படுத்தியுள்ளார். கோட்டையை வென்ற கில்ஜி அதன் உள்ளே ஏராளமான பிராமணர்களும், எண்ணிலடங்கா புத்தகங்களும் இருப்பதை பார்த்தாராம். அப்போதுதான் அவர் தான் வென்றது வெறும் கோட்டையை மட்டுமல்ல ஒரு பல்கலைக்கழகத்தையும் கூட என்பதை உணர்ந்தார்.

தபாகத்&ஐ&நசிரியில் காணப்படும் இந்தக் குறிப்பை பழங்கால நாளந்தா பல்கலைக்கழகமானது முஸ்லிம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டதற்கான ஆதாரமாக பார்க்க விரும்புகிறார்கள் வலதுசாரி சித்தாந்தவாதிகள். ஆனால் பல்கலைக்கழகங்களை அறிவு உற்பத்தி நடக்கும் மையங்களாக பார்க்காமல் எதிரிகளின் கோட்டையாக, தேசத்துரோகத்தின் மற்றும் ‘‘தேசியத்திற்கு எதிரான’’ ‘‘கோட்டையாக’’ பார்க்கின்ற நமது இன்றைய அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவாளர்களின் இக்கட்டை இந்தக் கதை சொல்லுகிறது. உதாரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடந்த கார்கில் போர் ‘‘கொண்டாட்டங்களின்’’ போது ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான ஜி டி பக்ஷி, ஜேஎன்யுவை கைப்பற்றிவிட்டோம் இனி அரசாங்கம் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகக் ‘‘கோட்டைகளை’’ தகர்க்க வேண்டும் என்று இடிமுழக்கம் செய்தார். பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு வெட்கமில்லாது அடைக்கலமளிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் நடத்திய மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை கொடூரமாக தாக்கியதிலிருந்து அரசாங்கம் மீண்டும் ஒரு முறை தனது உள்நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்திய பல்கலைக்கழக அமைப்பானது அரசாங்கத் தலையீட்டிற்கு அப்பாற்பட்டதாக எப்போதும் இருந்ததில்லை என்றாலும் இப்போது அது எதிர்கொள்ளும் இடைவிடாத தாக்குதலுக்கு எப்போதும் ஆளானதில்லை.

Dear reader,

To continue reading, become a subscriber.

Explore our attractive subscription offers.

Click here

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top