ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தமிழ்நாடும் அதன் அதிருப்தியாளர்களும்

அரசியல் வெற்றிடத்தை நிரப்ப இரண்டு திரைப்பட நடிகர்கள் முந்தும் நிலையில் மாநிலத்தின் எதிர்கால திசைவழி நிச்சயமற்றதாக இருக்கிறது.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதா இறந்தும் தனது தொண்ணூறாம் வயதுகளில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. கருணாநிதி பொதுவாழ்விலிருந்து படிப்படியாக விலகியும் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அரசியலில் இது புதிய வெற்றிடம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. திரையுலகம் அரசியல் தலைவர்களை உருவாக்கும் களமாக இருக்கும், திரை வாழ்க்கைக்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் இடையிலான கோடு மிக மெல்லியதாக இருக்கும் ஒரு மாநிலத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்ற நாயக நடிகர்கள் அந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப களமிறங்குவது ஆச்சர்யத்திற்குரியதல்ல.

கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் அரசியல் போட்டி என்பது பெரும்பாலும் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு இடையிலேயே இருந்துவந்திருக்கிறது. தேசியக் கட்சிகள் உட்பட பிற கட்சிகள் தேர்தலின் போது இந்த இரண்டு கட்சிகளுள் ஒன்றுடன் கூட்டு சேர்ந்துகொள்கின்றன. மக்கள் நலன் சார்ந்த அரசியலுடன் புரத்தல் (பேட்ரனேஜ்) அரசியலை இணைத்து அதை செம்மையாக்கி, ஊழலையும் ஆழமாக வேர்கொள்ளச் செய்ததன் மூலம் தாங்களே தொடர்ந்து அரசியல் ஆதிக்கத்தில் இருக்க திராவிடக் கட்சிகள் வழிசெய்து கொண்டுள்ளன. இந்திய தேசிய காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி ஆகியவற்றை கடந்த காலத்தில் மத்தியில் ஆதரித்த போதிலும் அவற்றை தமிழகத்தில் தங்களுக்கு கீழ்படிந்திருக்கும் கட்சிகளாக திராவிடக் கட்சிகள் வைத்துள்ளன. இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் இந்த புரத்தல் அரசியல் தொடர்ச்சியாக இருந்துவருகிறது என்றாலும் இதை அதிருப்தியுடன் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள்.

Dear Reader,

To continue reading, become a subscriber.

Explore our attractive subscription offers.

Click here

Back to Top