ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

வாழ்வாதாரங்களுக்கான நெடுந்தூரப் பேரணி

கிராமப்புறங்களில் ஆழமாகிவரும் நெருக்கடியை தீர்க்க கடன் தள்ளுபடியைத் தாண்டி பாஜக யோசிக்க வேண்டும்.

ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் என 40,000 விவசாயிகள் சிவப்புத் தொப்பிகள் அணிந்து செங்கொடிகளை ஏந்தி மும்பை மாநகரத்தில் 2018 மார்ச் 11ஆம் தேதி அணிவகுத்து ஊர்வலம் சென்ற போது கிராமம், நகரம் என்ற இரு வெவ்வேறு உலகங்கள் ஒன்றாய் கலந்துவிட்டதைப் போலிருந்தது. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மகாராஷ்டிரா அரசாங்கத்தை கண்டித்து நாசிக்கிலிருந்து மும்பை வரை 180 கிமீ அவர்கள் நடந்தே வந்தனர். இதற்கு முன்னர் வேறு சில குழுக்கள் நடத்திய போராட்ட பேரணிகளிலிருந்து இவர்களது பேரணியை சிறப்பித்துக் காட்டியது இவர்கள் நடந்துவந்த தூரம் மட்டுமல்ல. முதலாவதாக, இவர்கள் யார் என்பது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வறியவர்களிலும் வறிய விவசாயிகள், மற்றும் ஆதிவாசி விவசாயிகள். இரண்டாவதாக, இந்தியாவின் நிதி மூலதன தலைநகரத்த்தின் அசுர வேகத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் பேரணியினர் சுயகட்டுப்பாடுடன் நடந்துகொண்டது. இந்த வித்தியாசத்தை மும்பைக்காரார்கள் கவனிக்கத் தவறவில்லை. மும்பைக்காரர்கள் பலரும் தங்களது வழக்கமான அலட்சிய போக்கை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒற்றுமையுணர்வை காட்டும் விதமாக உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் ஆகியவற்றை சோர்ந்து போயிருந்த பேரணியினருக்கு அளித்துதவினர். இதுவும் மையநீரோட்ட ஊடகங்கள் இதைப் பற்றி வெளியிட்ட செய்திகளும் ஆளும் கட்சியையும் எதிர்க் கட்சிகளையும் சங்கடத்திற்குள்ளாக்கிவிட்டது, தனக்கேற்றவாறு தந்திரமாக இதைக் கையாள மாநில அரசாங்கத்திற்கு இடமில்லாது போய்விட்டது.

ஆழமாகிவரும் இந்த விவசாய நெருக்கடியை தனக்கு முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரசிடமிருந்து தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா& சிவ சேனா கூட்டணி அரசாங்கம் பெற்றுள்ளது. பணமதிப்புநீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி போன்ற பெரும் செலவினம் தொடர்பான கொள்கை சீர்திருத்தங்களை பாஜக அமல்படுத்தியதன் காரணமாக இந்த நெருக்கடி 2016&17ல் உச்சத்தை அடைந்து விவசாயத்துறையை மிகவும் எதிர்மறையாக பாதித்தது. 2017ன் தொடக்கத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு சரிந்த போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)&ன் வெகுஜன அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மகாரஷ்டிரா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 30,000 கோடி ரூபாய் பகுதியளவு கடன் தள்ளுபடிக்கான மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை மறுபரீசலனை செய்வதற்கான உறுதிமொழிகளை விருப்பமற்ற மனம் கொண்ட மாநில அரசாங்கத்திடமிருந்து பெறுவதில் வெற்றி கண்டனர். ஆனால் ஓராண்டிற்குப் பிறகும் பெரும்பாலான விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை அப்படியே நீடித்தது. இதனால் அதிருப்தியுற்ற விவசாயிகள் நிபந்தனையற்ற கடன் தள்ளுபடி, நீர்ப்பாசன வசதி, நில உரிமை ஆகியவற்றைக் கோரி நீண்ட பேரணியை நடத்தினர். பொதுமக்களின் பெரும் அதிருப்தியை பெற்றுள்ள பட்னவிஸ் எல்லா கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டார். இதற்கு அரசாங்க கருவூலத்திற்கு மேலும் 10,000 கோடி செலவாகும்.

Dear Reader,

To continue reading, become a subscriber.

Explore our attractive subscription offers.

Click here

Back to Top