ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

வர்த்தகப் போரின் பதையில்

ஸ்மூட்-ஹாவ்லே (மற்றும் அது உருவாக்கிய பதிலடி நடவடிக்கைகள்) போன்றதொரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறதா?

‘‘தேசிய பாதுகாப்பு’’ என்பதன் அடிப்படையில் எஃகு மீது 25% இறக்குமதி வரியும் அலுமினியம் மீது 10% இறக்குமதி வரியும் விதிக்கப்போவதாக மார்ச் 1ஆம் தேதி அமெரிக்க குடியரசுத்தலைவர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது வர்த்தப் போரை தூண்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இதழ் அச்சுக்குப் போகிற வரை வர்த்தகப் போர் எதுவும் தொடங்கவில்லை. உலகின் பெரிய நாடுகளிடையே வர்த்தகப் போர் ஏற்படுமெனில் அது உலக வர்த்தகத்தை கணிசமான அளவில் சுருக்கிவிடும் என்பதை சொல்ல முடியும். இது உலகப் பொருளாதாரத்தில் மிக ஆழமான மந்தத்தை உருவாக்கும். இதன் விளைவாக ஏற்கனவே இறுக்கமான சூழல் நிலவும் புவியரசியல் நிலை மேலும் மோசமடையும். ‘‘முதலில் அமெரிக்கா’’ என்ற தனது தேசியவாத ஆவேசப் பேச்சின் வெற்றியில் மிதந்து கொண்டிருக்கும் டிரம்ப் உலக நிலைமையை மோசமடையவைக்க வேண்டும் என்பதில் தீவிரமாய் இருக்கிறார். அமெரிக்காவின் அலுமினியம் மற்றும் எஃகு தொழிற்துறையை அழித்துவிட்டதாக பெயர் குறிப்பிடாமல் சில நாடுகளை திட்டித்தீர்த்த அவர் பெரிய அளவிலான இறக்குமதி வரியை நியாயப்படுத்தினார்: ‘‘அலுமினியத்தையும் எஃகையும் நம்மால் உற்பத்தி செய்ய இயலாது என்ற நிலை வருகிற போது ஏறக்குறைய நாட்டின் பெரும் பகுதி இல்லை என்றாகிவிட்டது என்று பொருள்.’’

அமெரிக்காவின் அலுமிய மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளின் உயர்மட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் இந்த இறக்குமதி வரி அறிவிப்பு செய்யப்பட்டது. உள்நாட்டு அலுமினியம் மற்றும் எஃகின் விலை மற்றும் லாபமே இந்த முடிவிற்கு பின்னாலுள்ள காரணங்கள் என்று சொல்லப்பட்டது. எந்திர வாகனங்கள், விமானங்கள், கட்டுமானம், எந்திரங்கள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் எஃகு, அலுமினியம் உற்பத்தியின் அடிப்படையிலமைந்த தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீது இந்த இறக்குமதி வரிகள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும், இந்த பாதிப்பு சர்வதேச போட்டி மீது என்ன விளைவை ஏற்படுத்தும் போன்ற விஷயங்கள் கருதிப்பார்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. டிரம்ப்பின் தலைமைப் பொருளாதார ஆலோசகரும் தேசிய பொருளாதாரக் கவுன்சிலின் தலைவரும் கார்ப்போரேட் வரி மற்றும் வருமான வரிக் குறைப்பை தீவிரமாக முன்னெடுத்தருவமான கேரி கோன் மார்ச் 6ஆம் தேதி பதவி விலகிவிட்டார். கோல்ட்மேன் சாஸ் நிறுவனத்தின் முன்னாள் உயர் மட்ட நிவாகியான கோன் டிரம்ப்பின் ‘‘தேசிய பாதுகாப்பு’’ குழுவைச் சேர்ந்தவர்களான அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர், வெளியுறவுத்துறை அமைசர் ரெக்ஸ் டில்லர்ஸன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ஆகியோரின் கருத்துடன் ஒத்துப்போனார். இறக்குமதி வரியானது வாஷிங்டன்னின் முக்கியமான ‘‘பாதுகாப்பு’’ கூட்டாளிகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, தென் கொரியா ஆகிய நாடுகளை வாஷிங்டன்னிடமிருந்து அந்நியப்படுத்திவிடும் என்ற காரணத்தால் இவர்கள் எதிர்த்தனர்.

To read the full text Login

Get instant access

New 3 Month Subscription
to Digital Archives at

₹826for India

$50for overseas users

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top