ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

இந்தியாவின் பெட்ரோல் இக்கட்டு

இந்தியாவின் பெட்ரோல் இக்கட்டு

பெட்ரோலுக்கு பதிலி இல்லாதவரை இந்தியாவின் பிரச்னை மேலும் மேலும் மோசமடையும்

 

கச்சா எண்ணை நுகர்வில் இந்தியா உலகில் மூன்றாம் இடத்திலிருக்கிறது. உலகின் தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் தேவையின் அடிப்படையிலான வளர்ச்சி வேகம் குறைந்துவரும் நிலையில் இந்தியாவின் பெட்ரோல் தேவை அதிகரித்துவருகிறது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதிக்கான மிக முக்கியமான இடமான இந்தியாவை பார்க்கின்றது சர்வதேச பெட்ரோல் தொழிற்துறை. ஏற்கனவே தனது கச்சா எண்ணை தேவையில் 80% இந்தியா இறக்குமதி செய்துவருகிறது. உள்நாட்டு உற்பத்தி குறைந்துவரும் நிலையில் எதிர்காலத்தில் சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக பொருளாதார பாதிப்பு அதிகரிக்கும். 2014 மத்தியிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இறக்குமதி விலை குறைவாக இருப்பதன் காரணமாக சூழல் இந்தியாவிற்கு சாதகமாக இருந்தபோதிலும் இனி நிலைமையை மோசமடையத் தொடங்கும்.

2013&14ல் சர்வதேச கச்சா எண்ணையின் விலை ஒரு பீப்பாய்க்கு 105 டாலரிலிருந்து 2015-16ல் 46 டாலராக வீழ்ந்தது. சர்வதேச விலையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்த விலைக் குறைவின் பலனை நுகர்வோருக்குத் தராமல் தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு வரியை அதிகரித்து அதிக வருமானம் ஈட்டியது. அதாவது பெட்ரோல் இறக்குமதியின் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிகமாக இருந்தபோது நுகர்வோர் என்ன விலை கொடுத்து பெட்ரோல் வாங்கினார்களோ அதே விலையை இப்போதும் தருகிறார்கள். ஆனால் மிக சமீபத்தில் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணையின் விலை அக்டோபர் 31ஆம் தேதி 59 டாலராக உயர்ந்தது. இது இதே ஆண்டு ஜூலை 31ஆம் தேதி 51.2 டாலராக இருந்தது. சில்லறை விற்பனையில் பெட்ரோலின் விலை தினமும் அதிகரிக்கப்பட்டு வந்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் எண்ணை மீதான வரியை அரசாங்கம் குறைக்க வேண்டிவந்தது.

Dear reader,

To continue reading, become a subscriber.

Explore our attractive subscription offers.

Click here

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top