ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

உங்களது மதத்தை இழப்பது

உங்களது மதத்தை இழப்பது

மத சுதந்திரம் அடைப்படை சுதந்திரம் என்ற விஷயத்தில் பெண்ணின் இடம் என்ன?

 

பல மதங்களில் பின்பற்றப்படும் பல்வேறு நடைமுறைகள் பெண்களை சமமாக நடத்தாதவையாக, பெண்களுக்கு அநீதி இழைப்பவையாக இருக்கின்றன. ஒரு பெண் தான் பின்பற்றும் மதத்திலிருந்து வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் அவரது மதத்திலிருந்து அவரை நீக்குமளவிற்கு பெண் வெறுப்பை ஓர் அரசு கொண்டிருப்பது அரசமைப்பால் உறுதி செய்யப்பட்டிருக்கும் சமத்துவத்திற்கும் பெண் சுதந்திரத்திற்கும் எதிரானது.

பார்சி ஜொராஸ்டிரியன் மதத்தைச் சேர்ந்த கூல்ருக் குப்தா என்ற பெண் பார்சி ஜொராஸ்டிரியன் அல்லாத ஒருவரை திருமணம் செய்த விஷயத்தில் இதை நாம் காண்கிறோம். பார்சி ஜொராஸ்டிரியன் மதத்தை தான் பின்பற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் (வல்சாத் நகரிலுள்ள அறக்கட்டளை அவரை அவ்வாறு பின்பற்ற விடாது தடுக்கிறது) என குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த அவர் வழக்கு 2012ல் தள்ளுபடி செய்யப்பட்டது. ‘‘சிறப்புத் திருமண சட்டம், 1954ன் படி பார்சி அல்லாத ஒருவரை திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் தனது கணவரின் மதத்தை சேர்ந்தவராகிவிடுகிறார்’’ என்று நீதிமன்றம் கூறியது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அரசமைப்பால் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையான மத சுதந்திரம் அவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

Dear reader,

To continue reading, become a subscriber.

Explore our attractive subscription offers.

Click here

Updated On : 13th Nov, 2017

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top