அணையும் பின்-உண்மையும்
சர்தார் சரோவர் அணையானது நீதியற்ற, நீட்டிக்கப்பட முடியாத வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டு.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
பின்&உண்மையும் (பொதுக் கருத்துக்களை வடிவமைப்பதில் உண்மைகளை விட உணர்வுகளே முதன்மை பெறும் அரசியல் சூழல்) மாற்று உண்மைகளும் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி தனது 67ஆவது பிறந்த நாளன்று சர்தார் சரோவர் அணையை திறந்துவைத்தபோது பிரதமர் நரேந்திர மோடி கூறியவை ஒருவரை ஆச்சர்யப்படுத்தாது. முப்பது ஆண்டுகளாக நீடித்த இந்த அணை திட்டம் பற்றிய சிக்கலான, சர்ச்சைக்குரிய வரலாற்றை முற்றிலுமாக ஒதுக்கித்தள்ளிவிட்டு ‘‘உலக வங்கியின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது என நான் முடிவு செய்தேன்’’ என்று மோடி கூறினார். ஆனால் உண்மைகள் மிகவும் வேறானவை. அணை திட்டத்திற்கான நிதியை தருவதாக ஒப்புக்கொண்ட உலக வங்கி அதிலிருந்து பின்வாங்கிவிட்டபோது ‘‘குஜராத்தின் கோயில்களிலிருந்து’’ நன்கொடைகள் இந்த திட்டத்திற்கு கிடைத்தது என்றும் அவர் கூறியிருக்கிறார். மீண்டும் அவர் உண்மையை மிகவும் மிகைப்படுத்துகிறார்.
நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் 30 பெரிய, 135 நடுத்தர, 3000 சிறிய அணைகளுள் ஒன்றான சர்தார் சரோவர் அணை கோயில்களால் நிதியளிக்கப்படவில்லை. 30 கோடி டாலர் கடன் தருவதாக ஒப்புக்கொண்ட உலக வங்கி 1993ல் தனது கடைசித் தவ¬ணையைத் தருவதற்கு முன்னர் இதிலிருந்து விலகிக்கொண்ட பிறகு அரசாங்கமே நிதியளித்தது. உலக வங்கியின் இந்த முடிவும் அணைக்கு எதிரான மக்கள் போராட்டமும் இந்தத் திட்டத்தின் வரலாற்றின் ஒரு பகுதி. இந்தியா தான் கற்க வேண்டிய முக்கியமான பாடங்களைப் பெற அலங்காரங்கள் செய்யப்படாத இந்த வரலாற்றை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இதை ‘‘தவறான தகவல்களைக் கொண்ட மாபெரும் பிரச்சாரம்’’ என மோடி புறந்தள்ளுகிறார். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் பொறுப்பான, சமத்துவமான, நீடித்த வளர்ச்சி என்பது இன்னமும் கவனம் பெறவில்லை.