ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பாரதீய ஜனதா கட்சியின் பலவீனம்

‘‘கிராமப்புறத்தை’’ ஆளும் கட்சி புறக்கணிப்பதற்காக நிதி மற்றும் அரசியல் ரீதியாக பெரும் விலை தரவேண்டியிருக்கும்.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

இராஜஸ்தான் விவசாயிகள் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் தள்ளுபடியை பாரதீய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கத்திடமிருந்து வெற்றிகரமாக பெற்றிருக்கிறார்கள். கடந்த நான்கு மாதங்களில் இவ்வாறு நடக்கும் நான்காவது மாநிலம் இது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் இத்தகைய போராட்டங்கள் உருவாகும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது இது. இந்த மாநிலங்களின் நிதிச் சுமை மற்றும் அரசியல் பிரச்னைகள் அதிகரிக்கும் நிலையில் பாஜகவின் பெரிய சீர்திருத்தங்கள் நேரெதிர் திசையில் செல்லத் தொடங்கிவிட்டதை இது காட்டுகிறதா?

இராஜஸ்தானின் ஷெகாவதி பகுதியில், முக்கியமாக சிகார் மாவட்டத்தில், ஜுன்ஜுனு மற்றும் சூரு நகரங்களில் 2017 செப்டம்பர் 1ஆம் தேதி காலவரையறையற்ற அமர்வுப் போராட்டத்திற்காக விவசாயிகள் குவிந்தனர். பணமதிப்புநீக்கத்தின் காரணமாக அடிமட்டத்திற்கு கொள்முதல் விலை சென்றது உட்பட இந்தப் பகுதியில் இருக்கும் பல்வேறு விவசாயப் பிரச்னைகள் குறித்து கவனத்தை ஈர்க்க 2017 ஜூன் மாதத்திலிருந்தே பல முயற்சிகள் செய்யப்பட்டதையடுத்து இந்தப் போராட்டம் தொடங்கியது. தங்களது வழக்கம்போல் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசாங்கமும் போராட்டத்திலிருந்த விவசாயிகளிடம் பேசாது அவர்களது போராட்டத்தை கலைக்கவும் விவசாயிகளின் ஒற்றுமையை குலைக்கவும் முயன்றன. இந்த முயற்சி திருப்பித்தாக்கிவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)&ன் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் போராட்டம் மேலும் வலுவடைந்தது. போராட்டத்திற்கான ஆதரவு தளம் விரிவடைந்து பொதுமக்கள், வர்த்தகர்கள், பல்வேறு உள்ளூர் சங்கங்கள் மற்றும் பெருமளவிலான பெண்கள் பங்கேற்க நகரங்களிலும் கிராமங்களிலும் ஊரடங்கு உத்திரவு போடவேண்டியதாயிற்று. இந்த ஆண்டு இதற்கு முன்னர் நடந்த போராட்டங்களைப் போலல்லாமல் இராஜஸ்தானின் இந்தப் போராட்டத்தில் கிராமப்புற சமூகத்தை சேர்ந்த பல தரப்பினரும் சேர்ந்துகொண்டனர். நாட்டின் கிராமப்புறங்களில் நடந்துவரும் போராட்டத்தின் தொடர்ச்சியில் இதுவொரு முக்கியமான திருப்பம்.

Dear Reader,

To continue reading, become a subscriber.

Explore our attractive subscription offers.

Click here

Or

To gain instant access to this article (download).

Pay INR 50.00

(Readers in India)

Pay $ 6.00

(Readers outside India)

Updated On : 15th Nov, 2017
Back to Top